ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு
சமூகநீதிக்கு சாவு மணி அடிப்பதே குறிக்கோள் என்று அலையும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றம் 27% இடஒதுக்கீட்டிற்கு நேற்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது, அதற்கு காரணமாக சொன்னது புள்ளிவிபரங்கள் தேவையான அளவிற்கு இல்லையாம், கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்டுள்ளது மனுநீதிமன்றம், இதெல்லாம் இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு அதன் பின் அதை செரித்துவிடும் நடவடிக்கை, முழுபுள்ளிவிபரம் வேண்டுமெனில் மிக எளிதாக ஒரு முறை உள்ளது, தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு உயர் சாதி மாணவர்கள் உள்ளனர், எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என கணக்கெடுக்கட்டும், இந்த கணக்கெடுப்பை ஒரே வாரத்தில் செய்துவிட முடியும்.
எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே, எனவே மிக எளிதாக உயர்சாதியினர் எத்தனை விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிந்து விடும், அந்த உயர்சாதியினரின் விழுக்காடு இந்திய சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கைக்கு சமமா என்று தெரியாதா என்ன?
ஒரு கல்வி நிலையத்தில் 65% உயர்சாதியினர் ஆக்கிரமித்திருந்தால் உயர்சாதியினர் இந்திய சமூகத்தில் இருக்கும் எண்ணிக்கை விழுக்காட்டிற்கு மேலிருப்பதை இடஒதுக்கீட்டிற்கு ஒதுக்கட்டும், ஒரு 10 அல்லது 15% உயர்சாதியினர் எத்தனை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றவர்கள் நிலை என்ன என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன? உயர்சாதிகளுக்கு உதவவே சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை செய்து மனுநீதி மன்றத்தை முதலில் நீதிமன்றமாக மாற்ற வேண்டும்.
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது தொடர்பாக இது வரை வந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்துள்ளேன், மேலும் இது தொடர்பான கட்டுரைகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
இந்த தொகுப்பு ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது பற்றியது, இன்னமும் இடஒதுக்கீடு- ஊடகங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - மனு நீதிமன்றங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - எதிர்ப்பாளர்களின் வாதங்களுக்கா பதில்கள், இடஒதுக்கீடு - வஞ்சகமாக ஏமாற்றப்படும் இடங்கள் என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டுள்ளேன் அவைகளை வரும் காலங்களில் வெளியிடுவேன்.உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யும் கட்சிகள் மற்றும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், நாளை தமிழகத்தில் எழும் முழக்கம், தன் கோவணத்தை உருவிக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தை சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காதில் அறையும் எழுச்சி முழக்கமாக இருக்கட்டும்.
இட ஒதுக்கீடு பத்ரி
ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா? இராமநாதன்
சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா? குழலி
இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா? குழலி
தலைமுறை வலிகள் குழலி
ஹிந்து கட்டுரை நன்றி சுந்தரமூர்த்தி
இடஒதுக்கீடு பற்றி ஞானி குரல்வலை
இயலாதோருக்கு இடஒதுக்கீடு அனுராதா
இடப்பங்கீடு சில நியாயங்கள்! திரு
ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு… தருமி
நான் கண்ட மண்டல் கமிஷன். தருமி
சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை தருமி
பூனைக்கு மணிகட்டும் காலம் ஆதவன் தீட்சன்யா
இட ஒதுக்கீடு குறித்து... கோவி.கண்ணன்
இட ஒதுக்கீடு எனும் ஆயுதம் சிவபாலன்
இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள் அசுரன் (தினகரன் கட்டுரை)
இடஒதுக்கீடு சில சிந்தனைகள் நேசக்குமார்
இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு மகேந்திரன்.பெ
இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? அறிவானந்தா
இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா? குழலி
இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால், சுந்தரவடிவேல்
இடஒதுக்கீட்டின் கணிதம் ரவிசங்கர் அருணாச்சலம் மொழியாக்கம் : கார்த்திகேயன் இராமசாமி
இடஒதுக்கீடு பிரச்சனை: தலித் - பிற்படுத்தப்பட்டோர்ஒன்றிணைவதற்கான ஓர் அரிய வாய்ப்பு நன்றி கார்த்திகேயன் இராமசாமி
இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? கல்வெட்டு