பரிதியுடன் நான்

ஞாயிறு மாலைகளில் இருவரும் தனியாக சுற்றுவதை சமீபகாலமாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்...  சமீப காலங்களில் கவனித்தது என்னவெனில் நாங்கள் இருவரும் மட்டும் தனியாக வெளியே சென்றால் அவருக்கு பெரிய மனுஷ தோரணை வந்துவிடுகிறது, வழக்கமாக குடும்பமாக வெளியே செல்லும் போது அவர் செய்யும் சேட்டைகள் அடாவடிகள் எல்லாம் அவரிடம் இருப்பதில்லை, ப்ரெண்ட் போல நடந்து கொள்வார், ஆனால் வீட்டினுள் நுழைந்த அடுத்த கணம் தன் குழந்தை தனத்து வாலை நீட்டிவிடுவார்.

மகன்களை பெத்த மகராசன்களா உங்க வீட்டிலும் இதே கதை தானா?

யட்சினி - 3

யட்சினி - 3
யட்சினி

ஆண்களிடம் யட்சினியாக மிரட்டும் ராதைகள்
கண்ணனிடம் மட்டும் சுருண்டு கிடப்பதேன்?
யட்சினிகளின் கோபமும், காமமும்
கண்ணனிடம் மட்டும் செல்லாதோ?

#யட்சினி_கவிதைகள்

தெலுங்கு வருணாசிரம அரசுக்கு காவல் காக்கும் திராவிடம் தமிழர்களின அரசை இகழ்கிறதே

தமிழர்கள் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் எது என்றால் திராவிட தெலுங்கு பாளையக்கார கும்பல்களின் அராஜக ஆட்சி நடத்திய கால கட்டம் தான்.

சங்க கால தமிழர்கள் ஆட்சியாக இருந்தாலும், அதன்பின் வந்த களப்பிரர்கள் ஆட்சி என்றாலும் அதன் பிறகான பல்லவர் ஆட்சி, பிற்கால சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என அனைத்தும் மைய ஆட்சி அதன் பின்பான படிநிலை குறுநில மன்னர்கள், அதன் கீழ் மண்டலங்கள், ஊராட்சிவரை ஒரு அமைப்பு, ஒரு சிஸ்டம் இருந்துள்ளது, வரிவிதிப்புகள் தண்டனைகள் என அனைத்தும் ஒரு அமைப்பாக சிஸ்டமாக இருந்தது, இதில் கட்டிடகலை, போர், நீர்வளம், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்தும் செழித்து வளர்ந்தது, என்று தமிழர்களின் ஆட்சி போய் திராவிட தெலுங்கு கும்பல்களின் ஆட்சி வந்ததோ அப்போதிருந்தே தமிழர்கள் அறிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது, அதிலும் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு கும்பல் ஆட்சி செய்த போது சிறு சிறு பகுதிகளை கொண்டு எந்த விதமான ஒரு அரசு அமைப்புக்குள்ளும் உட்படாமல் ஒரு சிஸ்டமே இல்லாமல் பொறுக்கித்தனமான ஆட்சி நடந்து மக்களை கொடூரமாக நடத்தி விரும்பிய பெண்களை தூக்கிப்போட்டுக்கொண்டு போய் கெடுத்து (நாட்டார் கதைகளில் மிகப்பல ஜமீன்கள் பெண்களை தூக்கியதால் பெண்ணை கொலை செய்த கதைகள், பெண் ஜமீனை கொலை செய்த கதைகள், பெண் தற்கொலை செய்து கொண்ட கதைகள்) காட்டாட்சி செய்தனர் தெலுங்கு திராவிட கும்பல்கள்.

வருணாசிரமத்தை காக்கவே உருவாக்கப்பட்ட மனுதர்ம ஆட்சி நடத்திய இந்து மத(பார்ப்பன) ஆட்சியான விஜயநகர அரசுகளையும் அதன் வழி தமிழகத்தை பல நூறு ஆண்டுகள் சுரண்டிய தெலுங்கு நாயக்க ஆட்சிகள், நாட்டை கூறு போட்டு பாளையக்காரர்கள் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்த தெலுங்கர்களை பற்றி ஒருவார்த்தை கூட பேசாத இதே திராவிட புருடாக்கள் தான் தமிழ் மாமன்னர்களை கொச்சை படுத்துகிறார்கள்

இதில் தமிழ் மாமன்னர்களை பற்றி மிக மோசமாக பேசி பேசி நானும் கூட திராவிட மாயையில் சில ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்டிருக்கிறேன், அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடம் நிற்கிறது, கடலில் நீரோட்டத்தில் வழி கண்டு நாகப்பட்டினத்திலிருந்து மலாக்காவிற்குள் கப்பல்களில் நுழைந்திருக்கிறான், ஒரே நேரத்தில் துறைமுகங்களில் நுழைந்து தாக்கி சீனாவுக்கான வியாபர பாதையான பட்டு பாதையை  கட்டுப்படுத்தி தெற்காசியாவை 250 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான், இன்றைக்கு சிக்ஸ் சிக்மா வைத்துக்கொண்டு ஒரு சேஞ்ச் ரெக்வெஸ்ட்டுக்கு 4 முறை ரீ பேஸ்லைன் செய்யும் காலத்தில் ஒற்றை பாறையில் கோயில்கள் செதுக்கியுள்ளான் ஒரே ஒரு தவறு கூட இல்லாமல், இவ்வளவு அறிவையும் அழித்து மறைத்து எங்களையே எம்ம முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்க வைத்தது திராவிடம்.

திராவிடமாயையை ஒழிக்க வேண்டும், தமிழகத்தில் தெலுங்கு திராவிட கும்பல்களின் அரசியல் அழிவில் தான் தமிழர்களின் வரலாறும், அதிகாரமும் மீண்டு வரும்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

வீரமணி என்கிற ஜால்ரா மணி அவர்கள் தமிழ் மாமன்னன் ராசேந்திர சோழன் மீதும் சோழ அரசர்கள் மீதும் புழுதி வாரி இறைத்து அவர்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், ஒழுக்கம், நெறிகள், சரி தவறுகள், உயர் கோட்பாடுகள் என்பது அந்த காலகட்டத்துக்கும் வேறுபட்டது, அன்று ஒழுக்கமாகவும் உயர் கொள்கையாகவும் கருதப்பட்டது இன்று தவறாக கருதப்படலாம், இன்று ஒழுக்க நெறியாக உயர் கொள்கையாக கருதப்படுவது நாளை தவறக கருதப்படலாம், இந்த அறிவு எதுவும் இன்றி ஜால்ரா மணி அவர்கள் இன்றைய கோட்பாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் இணைத்துள்ளார்.

பல வரலாற்று தகவல்களை திரித்து வெட்டி ஒட்டி அது அம்மன்னனுக்கு களங்கம் விளைவிக்குமாறு அறிக்கையில் சேர்த்திருந்தார், இது திராவிட கும்பல்களுக்கே கைவந்த கலை, அதில் முக்கியமான ஒன்று சோழ மாமன்னன் ராசேந்திரன்  பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக கொடுத்து அவைகளுக்கு வரிவிலக்கு செய்திருந்தான்(ர்) என்பதும் பார்ப்பனர்களுக்கு மாமன்னர்கள் காவல் காத்து வருணாசிரமத்தை காத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஒரு அரசன் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே செயல்பட வேண்டும், பெரியாரையே எடுத்துக்கொண்டாலும் கூட அவர் அவர் இந்து சமயத்தை கடவுளை விமர்சித்திருந்தாலும் அவர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்துள்ளார்.

தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலில் இருந்து இந்த தகவல்களை அளித்துள்ளேன். சோழர் செப்பேடுகள் பக்கம் 280 ல் இருந்து பக்கம் 363 வரை 83 பக்கங்கள் உள்ளன, அதில் நான் பக்கம் 280ல் இருந்து 296 வரை 17 பக்கங்கள் மட்டுமே படித்துள்ளேன், அதிலே சைவ வைணவ வேதியர்கள்(பார்ப்பனர்கள்) மட்டுமின்றி பெளத்த, சமண மற்றும் நாட்டார் கள் வரை பலருக்கும் நிலங்களும் வரிவிலக்குகளும் சோழ மன்னர்கள் அளித்துள்ளனர்.

அன்பில் பகுதியை சேர்ந்த‌அனிருத்த பிரம்மராயன் என்று ஒரு முக்கியமான பார்ப்பன மந்திரி ராஜராஜசோழனுக்கு இருந்துள்ளார், ராஜராஜசோழனிடம் இருந்த பல்வேறு மந்திரிகளுள் இருந்த ஒரே பார்ப்பன மந்திரி அனிருத்த பிரம்மராயன், இவர் அரசனிடம் முறையாக விண்ணப்பித்து நிலங்களை தானமாக பெற்று அந்த செப்பேடு அன்பில் பகுதியில் வீடு கடைக்கால் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இந்த செப்பேட்டை போல இன்னும் பல செப்பேடுகள் இருக்கலாம், அவைகள் எல்லாம் கிடைக்காமல் உள்ளது, அதில் பல்வேறு இறையிலி நிலங்கள் குறித்த தகவல்கள் இருக்கும், ஆனால் புரட்டு திராவிடம் அனிருத்த பிரம்மராயன் ஊரில் கிடைத்த செப்பேட்டை வைத்து சதிராடுகிறது, என்றாலும் மேலும் பல இடங்களில் கிடைத்த செப்பேடுகள் சோழர்கள் பல்வேறு சமயத்தவருக்கும் அளித்த தானங்கள் கிடைத்துள்ளன, சோழர்கள் சமன, பெளத்த பள்ளிகளுக்கு கொடுத்த தானங்கள் குறித்து சொல்லாமல் பார்ப்பனர்களுக்கு அளித்ததை மட்டும் அறிக்கையில் சொல்லி சோழர்களை பார்ப்பன கைக்கூலிகள் போல் காட்டியுள்ளர் ஜால்ரா மணி.

மேலும் தமிழ் மொழியை மதிக்காதவர்கள் என்பது போன்ற பிரச்சாரத்தை திராவிட இயக்கங்கள் சோழர்கள் மீது சுமத்துகின்றன, தான விவரங்கள் தமிழ் பகுதியில் தான் உள்ளன, தமிழே அலுவல் மொழியாக இருந்துள்ளது, மெய்கீர்த்தனைகள் அரசர்  வம்ச விவரங்கள் தான் வட மொழியில் இருந்துள்ளன, அவைகளே தமிழிலும் இருந்துள்ளன‌

இந்த நூலில் வெறும் 17 பக்கங்களிலேயே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இவ்வளவு தானங்கள் வழங்கிய தகவல்கள் இருக்கும் போது இன்னும் மீதியுள்ளா 67 பக்கங்களிலும் கிடைக்காத ஆயிரக்கணக்கான செப்பேடுகளிலும் எவ்வளவு இருக்கும்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் திராவிட பூச்சாண்டிகள் என்பதற்கு ஜால்ரா மணியின் அறிக்கையைவிடவும் சான்று எதுவும் வேண்டுமா?

ஒரே படமாகவும் இணைத்துள்ளேன், தனித்தனியாக படிக்க ஏதுவாகவும் இணைத்துள்ளேன்.











முந்தைய பதிவு
---------------------------
மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள் தான்
https://www.facebook.com/photo.php?fbid=10205002166004006&set=a.1674151063785.90834.1537700703&type=1&theater

மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள்

உண்மையில் சொல்லப்போனால் மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் சுரண்டலையும் ஆரம்பித்து வைத்ததே திராவிடர்களான தெலுங்கர்களின் ஆட்சியில் தான்.

வீட்டிற்குள் மலம் கழிக்க ஆரம்பித்ததும் அதை அள்ளுவதுமான சாதியினர் பேசிய மொழி என்ன? தமிழர்கள் கட்டிடக்கலையிலும் கட்டிடங்கள் அரண்மனைகளிலும் எங்கேயாவது கழிவறைகள் இருந்திருக்கிறதா? வீட்டிற்குள் மலம் கழிப்பது என்பது எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ தமிழ் சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ செப்பேடுகளிலோ இருந்துள்ளதா? வீட்டிற்குள் மலம் கழிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை.

வீட்டுக்குள் மலம் கழிக்கும் வழக்கம் எவனிடம் இருந்ததோ அவனுக்கு தான் மலத்தை அள்ளி போடும் தேவையும் இருந்தது அதை கொண்டுவந்தது தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு பின் வந்த திராவிட தெலுங்கு வந்தேறி அரசர்கள் தான். மலம் அள்ள பயன்படுத்தப்பட்ட அருந்ததி சாதியினர் பேசிய மொழியும் தெலுங்கு தான்.

பாலியல் சுரண்டலின் முக்கிய காரணமாக இருந்த பொட்டுகட்டும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியில்(சின்ன மேளம்) இருந்தது, அந்த சாதியினரின் தாய்மொழியும் தெலுங்கு தான், அதை கொண்டுவந்ததும் இதே திராவிட மன்னர்கள் தான் இப்படி மனித மலத்தை மனிதனே அள்ளும் வழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை பாலியல் சுரண்டலுக்காக தேவதாசிகள் ஆக்கியதும் ஆக சாதியை ஆக கீழ்த்தரமாக கொடூரமாக திராவிட அரசர்களான தெலுங்கு வந்தேறிகள் பயன்படுத்திவிட்டு தெற்காசியாவினை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை ஆர்.எஸ்.எஸ் சை விமர்சிக்கிறேன் பார்ப்பன அடிவருடியாக‌ ராஜேந்திர சோழரை திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.

வந்தேறி திராவிடர்கள் செய்த கொடூரத்துக்கு தமிழ் மா மன்னன் ராசேந்திரன் மீது பழி போடுவதா?

ஆரிய ஓநாய்களின் சதியும் திராவிட நரிகளின் தந்திரமும் தமிழ் சாதிகளுக்கு நன்றாகவே தெரியும், இனியும் வேண்டாம் இந்த கீழ்த்தர சதி வேலை அய்யா வீரமணி அவர்களே.

பின்குறிப்பு
தேவரடியார்கள் வேறு, தேவதாசிகள் வேறு, இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த வழக்கங்கள்.

தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது பட்டமேற்பு விழாவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் மாமன்னர் ராசேந்திரனை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையை அடுத்து விமர்சித்து எழுதியது

பிற்சேர்க்கை
பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினார்கள் சோழர்கள் எண்ற திராவிட புரட்டுகளை உடைக்கும் சோழர்கள் பார்ப்பனர்கள் அல்லாத சமண, பெளத்த மதங்கள் நாட்டார்களுக்கு வழங்கிய நில தானங்கள் குறித்த கட்டுரை.
https://www.facebook.com/kuzhalipuru/posts/10205053293282156?pnref=story

கி.வீரமணியின் அறிக்கை


யட்சினி - 2

யட்சினி

அகால வேளையில் கதவை தட்டமால் திறந்துவிட்டேன்
யாரோ ஒரு சின்ன பையனை புணர்ந்து கொண்டிருந்தாள்
அவள் நிர்வாணம் எனக்கொன்றும் புதுசு இல்லை தான்
பயம் போலும் அந்த பொடியனுக்கு
கண்களை இறுக்க மூடி இருந்தான்
மேலே முயங்கி கொண்டிருந்தவளோ
அறுபதடிக்கும் மேலான‌ உயரத்திற்கு இருந்தாள்
சத்தம் காட்டாமல் ஹாலில் உட்கார்ந்தேன்
தெரிந்திருக்கும் அவர்களுக்கு நான் வந்தது
பையன் பூனை போல் பதுங்கி ஓடினான்
கொண்டை போட்டுக்கொண்டு நைட்டியோடு வந்தவள்
என்ன இந்நேரத்தில் என்பது போல்
கண்ணால் கேட்டுக்கொண்டு பாத்ரூம் நோக்கி போனாள்

யட்சினி

அவளை எனக்கு ரொம்ப காலமாக தெரியும்
அவளுக்கு கூச்சமே இருக்காது
நூறு பேர் கூட்டத்திலும் மாமா மாமா என்று
புருசனை கூப்பிடுவாள்
டிவிஎஸ்50ல் சல சலவென பேசிக்கொண்டே புருசனுடன் போவாள்
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

இப்போதும் கல்யாணம் காட்சிக்கு புருசனுடன் பைக்கில் போயிருக்கிறாள்
விசாரித்ததில் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு சின்ன பெண்ணை ஏறிவிட்டான் என்று
அழுகை, ஆர்பாட்டம், பஞ்சாயத்து எதுவுமில்லை
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

அன்றொரு காலை
அவள் வீட்டில் வயசுக்கு வந்த பெண் சத்தம் போடாமல் கிளம்பினால்
கண் விழித்து பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்தது
ஒருக்களித்து படுத்து கண்ணை மூடினாள்
கத்தியை தூக்கிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தான் புருசன்
எல்லாம் இந்த தேவடியாவால தான் என்று கையை ஓங்கி அடிக்க வந்தான்
கிட்ட வந்தவன் கையை இறக்கி பம்மி பின்னால் சென்றான்
அப்போதும் கூட அவள் பேசவில்லை.

அவள் புருசன் செத்த மறுநாள் துக்கம் விசாரிக்க போனேன்
வா புருசோத்து நல்லா இருக்கியா? என்றாள்

சூதுகவ்வும் இயக்குனர் நலன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

"சூதுகவ்வும்" என்ற சுமார் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய சோசியல் மீடியா நண்பர்களை கேவலப்படுத்திய இயக்குனர் நலன்

முன்னாள் குறும்பட இயக்குனரும், இது வரை ஒரு படத்தை இயக்கியவருமான நலன் அவரின் நண்பர் கார்த்திக் சுப்பராஜின் திரைப்படத்தை விமர்சித்தவர்களை இவர் விமர்சித்து ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார், அந்த பதிவின் அடிப்படை சாரம்சம் ஒரு படத்தை இயக்கி பார்க்க துப்பில்லாதவர்கள் எல்லாம் விமர்சனம் எழுத என்ன தகுதியிருக்கு மூடிக்கிட்டு போடா என்பது தான், அதற்கும் மேலாக ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று நண்பர்கள் என்ற அல்லக்கைகளுடன் சேர்ந்து நக்கல் வேறு. இதில் என்ன கொடுமை என்றால் நலன் இயக்கிய சூதுகவ்வுமை விளம்பரப்படுத்தியதில் ஃபேஸ்புக் தான் முக்கிய காரணமே.

நலன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? நாம சூது கவ்வும் படத்திலிருந்து ஆரம்பிப்போம், சூதுகவ்வும் படம் வணிகரீதியாக ஓடியிருக்கிறது, ஆனால் ஒரு இயக்குனரின் படமாக சூதுகவ்வும் ஒரு சுமார் மொக்கை படம். சூதுகவ்வும் படத்தின் பெரும் வெற்றிக்கு சிலரின் திறமைகளும் பலரின் சென்டிமெண்ட்டும் உள்ளது. 

பொதுமக்களுக்கு இவன் நம்ம ஆளுடா என்று பிடித்துப்போன விஜய் சேதுபதி அண்ட் கோவின் அட்டகாசமான நடிப்பு, டட்டடட்ட டா டட்ட்டடா டட்ட்டடா என்று பிஜிஎம் மோடு அதிரடியான கலக்கலான ப்ரெஷ்ஷான சந்தோஷ் நாராயணனின் அட்டகாசமான இசை, கானா பாலா, ஜிகேபி யின் சூப்பர் டூப்பர் பாடல்கள் என பல திறமைசாலிகள் சுமாராக இயக்கப்பட்ட சூதுகவ்வும் படத்தை தாங்கிபிடித்தனர்.

அட்டைகத்தி படத்தில் அத்தனை பேரையும் இயக்குனர் தாங்கிபிடித்தார், ஆனால் சூதுகவ்வுமில் அத்தனை பேரும் இயக்குனரை தாங்கிபிடித்தார்கள், இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை சூதுகவ்வும்மின் சூரமொக்கை இயக்கத்தை பலரும் விமர்சித்திருந்தால் இயக்குனர் நலனுக்கு இன்று கொம்பு முளைத்திருக்காது. ஆனால் விமர்சகர்கள் இவைகளை எல்லாம் சாய்ஸில் விட்டதன் பின் பெரும் உளவியல் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் சுமார் மொக்கை சூதுகவ்வுமை ப்ளாக் ஹ்யூமர், தமிழ் இண்டஸ்ட்ரியின் போக்கை மாற்றும் படம் என்று ஒன்றிரண்டு பேர் சொல்ல நலனின் கொம்பு மேலும் வளர்ந்துவிட்டது போலும்.

ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதி ஒரு படத்தின் வெற்றியை தடுக்க முடியாது என்று ஒரு நண்பர் அதில் கமெண்ட் போட்டுள்ளார், ஆக்சுவலா சூதுகவ்வும் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் என்பது அதன் ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் அதை யூடியூபில் இலட்சம் பேர் பார்த்தனர் என்பது தான், அது எப்படி ஒரு இலட்சம் வியூ ஒரே நாளில் வந்தது என்று பிறர் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம், ஆனால் ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் பல ஆண்டுகளாக பழம் தின்று கொட்டை போட்ட எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு என்ன மாதிரியான மார்க்கெட்டிங் உத்தி பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ள முடியாதா என்ன? (அது என்ன உத்தி என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இன்பாக்ஸுக்கு வரவும், இண்டஸ்ட்ரி ஆட்களுக்கு கன்சல்டிங் சார்ஜ் உண்டு)

கந்தசாமி என்ற ஒரு படம் வெளிவந்தது படம் முதல் ஷோ ஓடும் போதே முதல் டிவிட் விழுந்தது "கந்தசாமி ஒரு நொந்தசாமி" என்று அதையடுத்து நான்கு நாட்கள் கந்தசாமி யை கிழித்த்து நொந்த சாமி ஆக்கினார்கள், டிவியில் அந்த படத்தை பின்னொரு நாள் பார்த்த போது அடடா படம் நல்லா லாஜிக்காக, சூப்பர் ஹிட் பாடல்களுடன், விக்ரமின் நடிப்பு, ஷ்ரேயாவின் கிரேஸ் உடன் படம் ஓகேவா தானே இருக்கு ஏன் கிழித்தெடுத்தார்கள் என்று பார்த்தால் என்றால் அது இயக்குனரின் வாய்க்கொழுப்பினால் தான் என்பது புரிந்தது, படம் வெளியாகும் முன் நலன் கூறிய அதே வார்த்தைகளை தான் கொட்டியிருந்தார் இயக்குனர், படம் எடுப்பது எவ்ளோ கஷ்டம் தெரியாம் ஈஸியா சோஷியல் மீடியாவில் விமர்சிக்கிறார்கள் என்று, படம் வெளியான உடன் ஸ்ட்ரிக்ட் வேல்யூவேஷன் செய்யும் வாத்தியார்களை போல படத்தின் அத்தனை மைனஸ்களையும் கிழித்து எடுத்து விமர்சித்தார்கள், விளைவு ஊத்தல்.

சூதுகவ்வுமில் இன்ஸ்பெக்டர் சூத்தில் சுட்டுக்கொள்வதில் ஆரம்பித்து ஹெலிக்காப்டரில் பணத்தை கோத்துக்கொண்டு வருவதை வரை சூதுகவ்வும்மில் இயக்குனரின் சூர மொக்கையை விமர்சிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்த போதும் இதை யாரும் விமர்சிக்கவில்லை, ஏனெனில் விமர்சகர்கள் என்னும் வாத்தியார்கள் அட நம்ம பசங்கய்யா என்று ஸ்ட்ரிக்ட் வேல்யூஷன் செய்யாமல் லிபரல் வேல்யூவேஷன் செய்தனர்.

நலன் எடுத்து காட்டியதை போல சினிமாவில் இம்மி அளவிலும் பயிற்சி பெறாது, தமது குடும்பக் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருக்கும் அத்தனை பேருக்கும் சினிமா என்ற உலகத்தில் நுழைய ஆசை உண்டு, தமிழ் சினிமா உலகில் பெரும்  பணக்காரர்கள், பழம்பெருச்சாளிகள், வாரிசுகள் தான் வாழ முடியும் என்ற நிலையை கண்டு சாதாரணர் ஒவ்வொருவருக்கும் ஒரு கடுப்பு உண்டு, அப்போது தங்களை போன்ற ஒருவன் சினிமாவில் வெற்றியடையும் போது அவனை நம்ம ஆளுடா என்று போற்றி தூக்கி கொண்டாடுவார்கள், அப்படி தான் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இன்று கொண்டாடப்படுகிறார்கள். சினிமாவில் நேசிப்பவராக திறமையானவர்களை அடையாளம் காட்டும் தயாரிப்பாளராக சிவிகுமார் இருப்பதால் அவரின் வெற்றிகளை இந்த சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள், நலன் கார்த்தி சுப்பாராஜ் போன்றவர்கள் ஃபேஸ்புக்கோடும் யுடியூபோடும் குறும்படங்கள் மூலமாக வளர்ந்தவர்கள், இவர்களின் வெற்றியை தன் வெற்றி போல கருதிய இந்த விமர்சகர்கள் இவர்களின் வெற்றிக்கு இடையூறு ஏற்படாதவாறு விமர்சனங்களை வைத்தார்கள். வில்லா-2 வின் விமர்சனத்தில் இதை நீங்கள் நன்றாக பார்க்கலாம். 

சூதுகவ்வுமில் இந்த உளவியல் தான் எல்லோரும் படம் நல்லா இருக்கு என்று ஸ்டேட்டஸ் போட காரணம், ஸ்பான்சர் வியூ மார்க்கெட்டிங்கை விட பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் ஒரு பிராடெக்டின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும், சூதுகவ்வும் டீம் செய்த மார்க்கெட்டிங்கை விட அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பிய சினிமா ரசிகர்கள் கொடுத்த பெர்சனல் வியூ மார்க்கெட்டிங் அதிகம். சூதுகவ்வும் படம் நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டதில் பாதி பேர் வத்திக்குச்சி, தடையற தாக்க போன்ற அட்டகாசமாக இயக்கப்பட்ட நல்ல படங்களுக்கு நல்லா இருக்குன்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தால் இந்த படங்கள் பெரும் வெற்றிகளை பெற்றிருக்கும், யுடியூபில் போய் பாருங்கள் தடையறதாக்கவும், வத்திக்குச்சியும் எத்தனை லட்சம் பேர் பார்த்திருக்கிறாகள் என்று தெரியும்.

ஒரு வயசில் ஒரு குழந்தை தத்தக்கா பித்தக்கா என்று நடந்து கீழே விழுந்து எழுந்தாலும் அதை கைதட்டி வரவேற்று பாராட்டுவார்கள், ஆனால் 10 வயசிலும் அதே குழந்தை கீழே விழுந்து எழுந்து நடந்தால் அதை கைதட்டி யாரும் பாராட்ட மாட்டார்கள், 10 வயதில் நடக்க தெரியாது விழுந்து எழுந்தால் திட்டத்தான் செய்வார்கள்.

சூதுகவ்வும் படத்தை அதன் தகுதிக்கு அதிகமாக பாராட்டியதன் விளைவு அதை தமிழ்சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் என்று எல்லாம் சிலர் எழுதியதன் விளைவு இன்று அதன் இயக்குனர் நலனுக்கு விமர்சனங்களே செய்யக்கூடாது என்ற மனநிலைக்கு கொண்டு போய் உள்ளது. எப்ப சார் இந்த மாதிரி யோசிக்க தோணுது, விஜய் டிவி விருதுகள் அரங்கில் கேலரி சீட்டிலிருந்து ரவுண்ட் டேபிளில் போய் உட்காரும் போதா?

பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்கியராஜ், பார்த்திபன் உட்பட தமிழ்சினிமாவின் வெற்றி படங்கள் தந்த அத்தனை இயக்குனர்களும் அந்தந்த காலகட்டத்தின் ட்ரெண்ட் செட்டர்கள் தான், பாராதிராஜாவும் பாலச்சந்தரும் கடைசி காலங்களில் ஹிட் அடிக்க முட்டியடிக்கின்றனர், ஆனால் முடியவில்லை, இன்னும் சினிமா உலகில் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, அதற்கு சகிப்புத்தன்மை முக்கியம்.

அவனவன் துணை இயக்குனராக 10 வருசம் 15 வருசம் குருகுல கல்வி மாதிரி திரையுலகில் அடிபட்டு மிதிபட்டு அசிங்கப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு ஒரு புரொட்யூசர் பிடித்து படம் இயக்கி இயக்குனராக வந்து தன் ஒருவனின் திறமையை மட்டுமே நம்பி அமெச்சூர் டீமை வைத்து படம் எடுத்து ரிலீஸ் செய்து அதன் பிறகு அது வெற்றிபெற்று கிடைக்கும் வாய்ப்பும் புகழும் பெயரும் பணமும், குறும்படங்கள் என்றும் முதல்படத்திலேயே பெரும் திறைமைசாலிகளுடன் இணையும் வாய்ப்பு கிடைத்து ஈஸீயாக வெற்றியை சுவைத்தால் இப்படித்தான் கொம்புமுளைக்கும்

https://www.facebook.com/kuzhalipuru/posts/10204262728918541

பாலுமகேந்திரா - கறுத்த நாயகிகளின் காதலன், நானும் கூட...

பாலுமகேந்திராவின் நாயகிகள் ஷோபா வில் ஆரம்பித்து அர்ச்சனா, சரிதா, மெளனிகா, ஈஸ்வரிராவ், ரோகினி, பிரியாமணி வரை அத்தனை நாயகிகளையும் எனக்கும் மிகவும் பிடிக்கும். கறுத்த பெண்களின் மீதான ஈர்ப்பும் அதிகம். இந்த விசயத்தில் பாலுமகேந்திராவின் கண்களும் என் கண்களும் ஒன்றே.

பாலு மகேந்திரா என்றால் எனக்கு எதையும் விட அழியாத கோலங்களும், வண்ண வண்ண பூக்களும், ராமன் அப்துல்லாவுமே எனக்கு நினைவுக்கு வரும், இந்த மூன்று படங்களுமே பாலுமகேந்திராவின் தோல்வி படங்கள் என்றாலும் எனக்கு நெருக்கமான படங்கள்.

ஷோபா என்னை சுற்றி சுற்றி பறந்து என் மேல் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மெளனிகா என்ற இன்னொரு வண்ணத்துப்பூச்சி சுற்றி வந்தபோது அதை விரட்டி விடாமல் விட்டுவிட்டாரே இந்த மனுசன் என்றும் தோன்றியது, வலிகள் என்னவோ எப்போதும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தான்.

In the end, only three things matter:

how much you loved,
how gently you lived,
and how gracefully you let go of things not meant for you.

பாலுமகேந்திரா சில வண்ணத்துப்பூச்சிகளை விரட்டிவிட்டிருக்கலாம் அவைகள் அவர் மீது உட்கார ஆசைப்பட்டிருந்தாலும்.

பாடிலாங்க்வேஜூம் வடிவேலுவும் - உடல்மொழி - 2

உடல்மொழியின்(பாடிலாங்க்வேஜ் ) முக்கியத்துவம், இரண்டாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வடிவேலுவின் இடம்

பாடில்ங்க்வேஜ் பற்றி சும்மா ஒரு போஸ்ட் போட்டேன், நிறைய நண்பர்கள் உள்பெட்டியில் வந்து (சரி சரி இரண்டு நண்பர்கள் தான்) இதைப்பற்றி அடிக்கடி எழுதலாமே என்றார்கள், சரி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன்,


நம்ம வடிவேலு என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர் படங்களில் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வந்ததற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அவருடைய வாய்ஸ் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்களில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலு ஃபீல்டில் இல்லாத போதும் இன்னும் வடிவேலுவின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணம்.


நாம் பேசும் வார்த்தைகள் மூலமே பெரும்பாலும் பிறருடன் கம்யூனிகேஷன் செய்துவிடுகிறோம், நம்முடைய வார்த்தைகளே பிறருக்கு நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்களா? அது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் இல்லை.

"ராஸ்கல் என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு"

இது வடிவேலுவின் பிரபலமான ஒரு டயலாக், இந்த டயலாக்கை ரகுவரன் சொல்வது போல நினைத்து பாருங்கள், வடிவேலு சொல்வதை போல நினைத்து பாருங்கள். ரகுவரன் சொல்வது வில்லத்தனமாகவும் வடிவேலு சொல்வது காமெடியாகவும் இருக்கும்.

ஆராய்ச்சி முடிவுகள் நிரூபிப்பது என்னவென்றால் நாம் தொடர்புகொள்ள பயன்படுத்தும் மொழி, சொற்கள் மூலம் பிறர் புரிந்து கொள்வது வெறும் 7% மட்டுமே... ஆனால் 93% நாம் சொல்வதை பிறர் புரிந்து கொள்வது நம் வார்த்தைகள் மூலம் அல்ல.

நம்ப முடியவில்லையா? நம் வார்த்தைகள் நாம் சொல்ல வருவதை பிறருக்கு புரிய வைப்பதில் வெறும் 7% மட்டுமே துணைபுரிகிறது மீதி 93% என்பது நம் குரல், மாடுலேஷன், நம் உடல்மொழிகள் மூலம் தான் பிறருக்கு புரியவைக்கிறோம்.

நம் வார்த்தைகள் பிறருக்கு வெறும் 7% மட்டுமே புரியவைக்கும் என்றால் மிச்சம் 93%த்தை ஏன் நாம் கவனிக்காமல் இருக்கிறோம்? இந்த 93% ஐயும் திறமையாக பயன்படுத்தியதால் தான் சிவாஜி கணேசன், வடிவேலு போன்றவர்கள் காலத்தை தாண்டியும் நிற்பதும் எல்லா டயலாக்கையும் ஒரே மாடுலேஷனில் பேசும் நடிகர்கள் டொக்காவதும் காரணமாகும்.

நாம் பிறரிடம் தொடர்புகொள்வது

1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - 7%
2) நம் குரல் (வாய்ஸ் டோன், மாடுலேஷன்) - 38%
3) நம் உடல்மொழி(பாடிலாங்க்வேஜ்) - 55%

நம் குரல் மூலம் நம்மை பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் நாம் நன்றாக அறிந்ததே.

ஆனால் 55% உடல்மொழிகள் மூலம் நாம் தொடர்புகளை மேற்கொண்டாலும் நாம் அதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதே இல்லை.

ஒருவர் பேசும் வார்த்தைகளை அவர் உண்மையாக பேசுகிறாரா, அல்லது மறைத்துக்கொண்டு பேசுகிறாரா என்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடிந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?

பிசினஸ் டீலிங்குகளில் கலக்கலாம், மேனேஜர் அப்ரைசலில் பட்டைய கிளப்பலாம், யாரேனும் டிவியில் பேட்டி கொடுத்தால் ஏய் பார்ரா டுபாக்கூர் உடறான் என்று கண்டுபிடித்து கலாய்க்கலாம். ஆனால் சில கில்லாடிகள் இருக்கிறார்கள் உடல்மொழியை வைத்து எங்கே நாம் டுபாக்கூர் விடுகிறோமா என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பொய் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது, டிவி விவாதங்களில் பேசும்போது மண்டையை மண்டையை ஆட்டி முடியை சிலுப்பி விடுவதும், உடல் மொழியில் ஆக்ரோசமாக வெளிப்படுத்துவதையும் உற்று நோக்கினால் அது உண்மையான உடல் மொழிகளை மறைக்கும் உத்தியாக இருப்பதாக‌ கருத வேண்டியுள்ளது.

ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம் ஆனால் எவ்வளவு தான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.

ஐந்தறிவு நாய் ஒன்று கூட்டல் கழித்தல் கணக்கிற்கெல்லாம் கூட சரியான விடையை சொன்ன அதிசயம் நடந்தது எப்படி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தலித்கள் பொய்வழக்குகள் போடுபவர்களா? தலித்களுக்கு எதிரான சாதிவெறி பிடித்த கட்சி திமுக!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரது தலித் சாதியை குறிப்பிட்டு திட்டியதாக போலிசில் பிசிஆர் கேஸ் கொடுத்தார்.

ஒரு நியாயமான கட்சியாக தலித் ஆதரவு கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சித்தலைமை தலித் கொடுமை புரிந்த கட்சிகாரரை தானே கட்சியை விட்டு நீக்க வேண்டும்? ஆனால் இன்று காலை அழகிரியை அழைத்து கோபாலபுரத்தில் வைத்து கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள் அந்த வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று.

இந்த மாதிரி வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கவேண்டுமென்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தலித் சாதி மருமகனை கூப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள் சாதிவெறி பிடித்த தலித் விரோதி கருணாநிதி குடும்பத்தினர்கள். தலித் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் தானே அழகிரிக்கு இந்த அவமானத்தை செய்துள்ளது சாதிவெறி பிடித்த கருணாநிதி குடும்பம்.

ஒரு பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெறவைக்க தலித் மருமகனை மிரட்டியும் அடிபணியாததால் சாதிவெறிபிடித்த திமுக தலைமை ஆதிக்க முதலியார் சாதிவெறியர் அன்பழகன் மூலம் ஒரு தலித் விரோத அறிக்கையை வெளியிடுகிறார்கள், அதில் சாதிவெறியால் பாதிக்கப்பட்டவரையே கொடுமை செய்ததை போல சித்தரித்து வன்கொடுமை கேஸ் கொடுத்தவர்கள் பழிவாங்கும் நோக்குடன் பொய் புகார் கொடுத்துள்ளார்கள் என்று முதலியார் சாதிவெறி அன்பழகன் அறிக்கை சொல்கிறது, பிசிஆர் கேஸ்களை பொய்யாக கொடுப்பவர்கள் தலித்கள் என்று சாதிவெறியர் அன்பழகன் கூறுகிறாரா?

தலித்களுக்கு எதிரான சாதிவெறி கொண்ட திமுக தலைமை பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்க சொல்லி கட்டை பஞ்சாயத்தும் செய்து, தலித்கள் பொய்யாக கேஸ்கொடுக்கிறார்கள் என்பது போன்று அறிக்கையும் கொடுத்து கடைசியாக தலித்களின் மீதான மிரட்டலை அஞ்சாமல் எதிர்கொண்டு கேசை வாபஸ் வாங்காத தலித்களின் மருமகன் அழகிரியையும் கட்சியை விட்டு நீக்கி தான் ஒரு ஆதிக்க சாதிவெறி பிடித்த, தலித்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவும், அதன் தலைமையும் நிரூபித்துள்ளது.

----சாவுங்கடா---

ஒரு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஒரு சமுதாயம் அந்த காலகட்டத்திற்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஏற்கனவே இதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன், தற்போது இங்கேயும்

சமூகம் காலத்துக்கேற்றவாறு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் வலிமை உடையது, அதற்கு தேவை ஏற்படும் போது அந்த பிரச்சினையின் தீர்வுக்கும் மாற்றத்துக்குமான‌ தலைவர்களை தானே உருவாக்கும், அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் இல்லாத அரசியல் என்ற ஒரு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரத்துக்கு பின்பும் சில காலங்கள் இருந்து வந்தது. ஆனால் அது சமூக பிரச்சினைகளை சுத்தமாக ஒதுக்கிவைத்திருந்தது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அதிகார பரவலாக்கத்துக்கு தேவையான தலைவர்கள் அப்போது தேவைப்பட்டதால் சமூகம் பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காக அது சோஷலிஸ்ட் கட்சி ஆட்கள், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அண்ணாதுரை, கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றவர்களை சமூகம் தனது தேவைகளுக்காக உருவாக்கியது.

அரை நூற்றாண்டுகாலத்தில் தற்போது மீண்டும் அரசியலில் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், அரசியலில் வெளிப்படை தன்மை இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சமூகம் தனக்காக அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்குகிறது. தேவை ஏற்படின் மீண்டு இந்த சமுதாயமே பெரியார், அம்பேத்கார், லல்லு, முலாயம், கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்ற தலைவர்களையும் உருவாக்கும்.

பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்...

ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி அதன் சமூக பார்வை குறித்து டிப்பிக்கல் தமிழ்நாட்டு முற்போக்கு ஸ்டைல் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன, அர்விந்த் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல விமர்சனங்கள் வரட்டும் நல்லது தான்.

இந்திய தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என முழங்கும் கெஜ்ரிவால் போல தமிழ்தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என்று தமிழகத்தில் வந்தால் ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்படலாம். கவிஞர் தாமரை சில நாட்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மையில்லாதவர்களால் நல்ல‌ அரசியலை முன்னெடுக்க முடியாது.

மாற்று கொண்டு வருவோம் என முழங்குபவர்கள் புதியவர்களை, பொது வாழ்வில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதேவை உள்ளது, விஜயகாந்த் மாற்று கொண்டு வருகிறேன் என மற்ற கட்சியில் சீட்டு கிடைக்காதவர்கள், பணக்காரர்கள், உள்ளூர் தாதாக்களை எல்லாம் களம் இறக்கினால் சீன் தான்.

அப்படி வரும் புதியவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்றால் இந்த டெக்னிக்கெல்லாம் தெரிய வர கொஞ்ச நாளாவது ஆகும், அது வரை சமூகத்துக்கு லாபம் தானே!

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? - உடல் மொழி

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா?