பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு
பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு
இன்று காலை சென்னையில் உள்ள பிரபல உள்ளரங்கு படப்பிடிப்பு தளத்தினுள் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
------------------------------------
------------------------------------
--------------------------------
பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு காட்சியில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் இயக்குனருடன் சச்சரவு ஏற்பட்டு படப்பிடிப்பு நடைபெறவில்லை என நமது ஓநாயார் செய்தி தந்தார்.
செய்திக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? செய்தியை திரிக்கும் ஒரு சோமாறித்தனம், உத்தி என திட்டுபவர்களே ஒரு நிமிடம் சிந்திக்கவும், பதிவு என் பதிவு , தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.மேலும் தலைப்பு, செய்தியின் ஒரு வரி என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.
சோ அவர்கள் ஆசிரியராக இருக்கும் துக்ளக் வார இதழில் பதிப்பிக்கப்பட்ட ஒரு செய்தி.
அதன் தலைப்பு
"மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்" - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...
ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம் புது டெல்லியில் CBSE மற்றும் ICSE என இரண்டு வகை கல்வித்திட்டங்கள் மட்டுமே உள்ளன, ஆதலால் CBSE பாடதிட்டத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
டெல்லி தமிழ்ப் பள்ளி ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளி, மிகவும் புதிய சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து 'மேடர்-டே' என்ற பெண்களி பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம்.
என் மகள்களின் பெயர்,நகராட்சி அலுவலகம்... என்று மெனக்கெட்ட நீங்கள், இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து துருவி துருவி ஆராய்ந்திருந்திருக்கலாம்.
இங்கு பொதுவாக எல்லா பள்ளி கூடத்திலும் முதல் மொழிப் பாடம் ஆங்கிலம், இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம்.
தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக இருப்பினும் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ஆவர்கள் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 'மேடர்-டே' பள்ளியின் முதல்வர் சகோதரி டோரினாவாஸ் அவர்கள், சிறப்பு சலுகையாக என் மகள்கள் இருவரும் அவர்களின் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழிப்பாடமாக அனுமதி அளித்தார்கள். இவர்கள் இருவருக்காக மட்டுமே தமிழாசிரியை ஒருவரை நியமிக்க முடியாத காரணத்தினால் லோதி எஸ்டேட்டில் உள்ள டெல்லி தமிழ்ப் பள்ளியில் படிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிடும் ஏழாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு உரைநடை, செய்யுள் பகுதி கொண்ட பாடபுத்தகங்களைத்தான் இவர்கள் படிக்கிறார்கள். மூன்றாம் மொழித் தேர்வு சமயம் கேள்வித்தாள்கள் தயாரித்து திருத்தி மதிப்பெண்களை 'மேடர்-டே' பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடும்படி ஒரு புது ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.
இத்தனை சிரமும் எதற்காக? குழந்தைகள் தமிழைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான், ஏதோ துக்ளக் கேள்வி கேட்டு விட்டது என்பதற்காகவோ, தமிழ் பாதுகாப்பிற்காக போராடுகிறோம் என்பதற்காகவோ அல்ல, குடும்பமே தமிழின் மேல் உள்ள பற்றினால் பாசத்தினால் ஏப்ரல் மாதமே சிறப்பு அனுமதி வாங்கி விட்டோம்.
குழந்தைகள் மற்ற பாடங்களை விட தமிழில் எப்போதுமே எடுத்திருக்கிறார்கள். தாய்மேல் பாசத்தை காட்ட மற்றவர் சொல்லித் தரவேண்டியதில்லை, தமிழ்ப்பற்றை நீங்கள் சொல்லித் தந்து நாங்களோ நாங்களொ எங்கள் பிள்ளைகளோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
டெல்லியில் ஹிந்தி மொழியை படிக்காமல் ஒருவர் பள்ளி கூட படிப்பைக் கூட முடிக்க முடியாது, ஆனால் தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடிக்க முடியும்.
எல்லோருக்கும் இருக்கும் தாய் மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இருப்பதில்லை? அதை உணர்த்துவதற்குதான் மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்ப் பாதுகாப்பு போராட்டங்களை நடத்துகிறார்.
ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தை 12-ஆம் வகுப்புக்குள் ஒரு மொழிப்பாடமாக கற்று மாணவர்கள் ஆங்கில புலமை பெற வேண்டும். அதே சமயம் கட்டாயம் தமிழையும் பிழையின்றி பிற மொழிக் கலப்பில்லாமல் தெளிவாக பேச வேண்டும் என்பதே அவரின் அவா. அந்த உண்மையை புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லையா? அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா?
ஒரு பிரபல பத்திரிக்கையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தங்களுடைய பத்திரிக்கையில் தவறான தகவல்களை தந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் அளித்துள்ளது. ஆகவே என்னுடைய இந்த மறுப்பு கடித்தையும் வெளியிடுவீர்கள் என நம்புகின்றோம்.
- சௌமியா அன்புமணி
ஆசிரியர், பசுமை தாயகம் - சுற்று சூழல் சென்னை-34.
என்ன ஒரு அருமையான தலைப்பு, ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டோண்டு அய்யாவின் ஜோவின் கேள்விக்கான பதில் கீழே
//டோண்டு ஐயா,
உங்களுக்கு பிடித்த துக்ளக்-கின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள அன்புமணியின் துணைவியாரின் கடிதத்தை படியுங்கள் .அதோடு அதற்கு தலைப்பு கொடுத்திருக்கும் விதத்தில் சோ(மாரி)த்தனத்தை கொஞ்சம் கவனியுங்கள்.நன்றி!
# posted by ஜோ : July 30, 2005 8:57 PM
தலைப்பில் என்ன தவறை கண்டீர்கள் ஜோ அவர்களே?
"மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்" என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.//
துக்ளக் ஆசிரியர் 'சோ' அவர்கள் கீழ் காணும் தலைப்புகளைக் கூட இந்த கடித்திற்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்.
1.இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...
2.ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...
3.புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லை - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...
இன்னும் என்ன என்ன தலைப்பு வைக்கலாம் என ஒரு போட்டி வைப்போம் எல்லாம் நம் திறமையை காண்பிப்போம்.
டோண்டு அய்யாவின் இந்த பதிவிற்கான சில விளக்கங்கள்
//வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்//
மேலே உள்ள தலைப்பு அதற்கு நியாயம் கற்பிக்கும் 'சோ'வின் தாங்கிகள் அன்புமணி தாங்கிகள் என கூறுவது வியப்பொன்றுமில்லை. 'சோ'வின் தாங்கிகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் முதலில் அன்புமணி தாங்கி என்பதைப்போல 'சோ' தாங்கி என எழுதினால் 'சோ' விற்கும் 'தாங்கி' இடையில் உள்ள வெற்றிடம் காணமல் போய் வேறு அர்த்தம் கற்பிக்கப் படலாம், மேற்கண்ட தலைப்பிற்கே நியாயம் கற்பிக்கும் போது இது நடக்காது என என்னால் உறுதியாக கூற முடியாததால் எச்சரிக்கையாக 'சோவின்' என மாற்றிவிட்டேன்.
//தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.
//
சிறிது நாட்களுக்கு பிறகு இதற்கு பதிலாக நான் கூறியது தில்லியிலிருக்கும் நண்பருடன் பேசியபோது மேடர் டே பள்ளியின் உள் கட்டமைப்பு,ஆசிரியர்கள், தரம் ஆகியவற்றை பற்றி யும் மற்ற தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரும் பள்ளியின் தரம் பற்றி ஒப்பிட்டு பார்த்தால் மேடர் டே சிறந்த பள்ளி என்றார், எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக மேட்டர் டே பள்ளியின் தரம் அந்த பள்ளிகளைவிட மேல் என மறுக்காமல், தமிழகத்திலே இருந்தால் நல்ல தமிழ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருப்பார் என கூறிய போது அந்த குழந்தைகளின் தாத்தாவிற்கு(மருத்துவர் இராமதாசு) தமிழ்நாட்டிலே தானே இருக்கின்றார் அவரிடத்திலில்லாத ஆள்,அம்பு படை பலமா அந்த குழந்தைகள் தமிழகத்திலேயே இருக்கலாமே, (அதாவது சிறிய குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டும் அவர்களின் தந்தை, தாத்தா தமிழ் பற்றி பேசினால் ) இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது, விவாதம் வேறு திசைக்கு சென்றதால் இனி பேசிப் புண்ணியமில்லை என்று அந்த பதிவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.
தரம் என்பது ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் மாறுபடும், உதாரணத்திற்கு அரசு ஊழியரின் குழந்தைக்கு நகராட்சிப் பள்ளியை விட கிறுத்துவ திருச்சபைகள் இலவசமாக நடத்தும் பள்ளிகள் தரமானது, பொறியாளருக்கு அதைவிட மேம்பட்ட பள்ளிகள், பொறியாளர் தரம் என்று நம்புவதையும் விட மேம்பட்ட பள்ளிகள் இல்லையா என்ன?
மேடர்-டே பள்ளியின் தரத்திற்கான ஒரு சிறிய உதாரணம்
Mater Dei school
AD-Venture
Beats
Indian Music Competition
roup song(Sr.)
Best Team
Over-all Best School
1st Position
http://www.dpsrkp.net/links/activity.htm
அய்யா கூறிய பள்ளி மேற்கண்ட சுட்டியில் எங்கே உள்ளது என எனக்கு தெரியாமல்.
(ஹைய்யா இனி மேடர்-டே பள்ளியின் இணைய கொ.ப.ச. குழலில் தான் என கேள்விகேட்கலாம் என நினைப்பவர்களே நான் ஓடிவிட்டேன்)
நான் பள்ளிகளின் தரம் பற்றி கூறியது கூட நண்பருடன் பேசியதின் அடிப்படையில் அமைச்சர் அன்புமணியுடன் பேசியதின் அடிப்படை என கூறவில்லை.
//இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.//
தலைவன் கல்லடியும் சொல்லடியும் தலைமறைவு வாழ்க்கையயும் நடத்தி உயிரையும் பணயம் வைத்து தொண்டர்களை மட்டுமல்ல என் போன்ற சாதாரணரையும் வாழ வைத்ததால் தான் இன்று அன்புமணி அமைச்சராக உள்ளார், தலைவனுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அன்புமணி தந்தை இல்லாத பிள்ளையாகத் தான் வளர்ந்திருப்பார், எனவே அமைச்சராக அன்புமணியிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
இந்த விடயத்தில் பத்திரிக்கைகளின் பங்கு
பத்திரிக்கைகள் மிக சாதுரியமாக இந்த விடயத்தில் நடந்து கொண்டன, தினமலரும், குமுதமும் செய்தியாகவோ கட்டுரையாகவோ மேடர்-டே அன்புமணி குழந்தைகள் பற்றி குறிப்பிடவில்லை, வாசகர் கடிதம், இது உங்கள் இடம், அந்துமணி வாசகர் கேள்வி பதில்கள் என வாசகர்கள் பெயரை சொல்லிதான் எழுதின, ஏனென்றால் நாளை இந்த செய்தி பொய் என தெரிந்தால் எச்சரிக்கையாக வாசகர்கள் எழுதியது இது பத்திரிக்கை செய்தி இல்லையே இது என கூறிவிடலாம், வழக்கு என்று போனால் கூட தப்பிவிடலாம்.
எத்தனை முறை இந்த கடிதங்களை பிரசுரித்தனர் (உதவி ஆசிரியர்களே வாசகர்களின் பெயரில் கடிதம் எழுதியிருக்கலாம்), ஒரே ஒரு முறையாவது அன்புமணியிடம் செய்தியை உறுதி செய்து கொண்டனரா? எத்தனை முறை இந்த பிரச்சினைக்கு பிறகு அன்புமணியும் மருத்துவர் இராம்தாசுவிம் பேட்டியளித்தனர், ஒரே ஒரு முறையாவது இதைப் பற்றி கேள்விகேட்டனரா? (நமது எம்ஜியாரிலிருந்தும் முரசொலியிலிருந்தும் வரும் செய்திகளை தயவு செய்து உதாரணத்திற்கு காட்டாதீர்கள்), ஏன் அன்புமணியோ, மருத்துவர் இராமதாசுவோ சொல்லியிருக்கலாமே என கேள்வி கேட்பார்கள் உடனே, இப்படி வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி , மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்வது மட்டுமே முழு நேர வேலையாக இருக்கும், இங்கே இணையத்திலே நான் சொல்லிக்கொண்டிருப்பது போல.
தின மலரும், குமுதமும் துக்ளக்கும் அமைச்சர் அன்புமணியின் மனைவியின் கடிதத்திற்கு பிறகு தங்களின் தவறான செய்தி மற்றும் பிரச்சாரத்திற்கு மன்னிப்பு கேட்பார்களா அவர்களின் பத்திரிக்கையில், இது பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்.
பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன அவர்களுக்கு பாமக மீதும் அமைச்சர் அன்புமணி மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதுமான காழ்ப்புணர்ச்சியை.
நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, ஆனால் பாமக மீதான நச்சு பிரச்சாரம் வலைப்பூக்களில் ஓங்கியிருந்த போது அதைப்பார்த்தும் எனக்கு தெரிந்த உண்மைகளை கருத்துகளை சொல்லாமல் இருந்தால் அது நான் செய்யும் துரோகம். அது மட்டுமின்றி prejudice மனப்பான்மையுள்ளவர்களிடம் எத்தனை எடுத்துக் கூறினாலும் மாற்ற முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும், பத்திரிக்கைகள் சில வலைப்பதிவர்களின் பாமக விரோத மனப்பாண்மை போக்கினால் பரப்பட்ட விடயங்கள் நடுநிலையாளர்களிடத்தில் படிந்திருக்கும், அவர்களுக்கு பாமக வின் மற்றொரு பக்கத்தையும் கோணத்தையும் காண்பிப்பது தான் என் நோக்கம், நடுநிலையாளர்கள் தான் என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ், அதில் பெருமளவு வெற்றியும் பெற்றேன் சிலருக்கு இதெல்லாம் எனக்கு தெரியாதே இப்போது தான் புரிந்தது என்றனர், தனி மடல்கள் நேரடி பேச்சுகள் மூலமாக எனக்கு இதெல்லாம் தெரியவந்தது. என் நோக்கமும் நிறைவேறியது.
பாமக வோ, மருத்துவர் இராமதாசுவோ, மத்திய அமைச்சர் அன்புமணியோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எங்கேயும் நான் குறிப்பிடவுமில்லை, நடுநிலையான எல்லோருக்கும் கடைபிடிக்கும் அளவுகோலோடு விமர்சனம் செய்யுங்கள், சோவின் தாங்கிகளாகவோ, வேறு எவரின் தாங்கிகளாகவோ இருந்து கொண்டு அன்புமணி தாங்கிகளை கேள்வி கேட்கும்முன் ஒரு நிமிடம் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் அது சொல்லும்.
நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, என் எழுத்துக்கள் இதுவரை ஒரு 20 என்ற எண்ணிக்கையிலான நட்பு வட்டாரத்தில் இருந்தது அதை 200, 500 என விரிவாக்கிக் கொள்ளத்தான் இங்கே வந்தேன், இந்த பதிவிற்கு இத்தனை பெரிய விளக்க பதிவு எழுத வேண்டுமென்ற எண்ணமில்லை, ஆனால் என்னிடம் பதிலில்லாததால் தான் விளக்கம் தரவில்லை என்று குறிப்பிடப் படலாம் என்பதால் தான் எழுதினேன்.
இப்படி பதில் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான், முடிவில்லா விவாதம் என் மற்ற எழுத்துக் களையும் பாதிக்குமென்பதால் இத்துடன் பாமக தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலையை நிறுத்துகின்றேன்.
பாமக பற்றி மீண்டும் அதே செட் கேள்விகளுடன் வந்தால் என் முந்தைய பதிவுகளில் இருக்கும் அதற்கான விடைகள், புதிய கேள்விகள் வந்தால் நேரம் கிடைத்தால் பதிலிறுக்கின்றேன்.
நன்றி : துக்ளக்
நன்றி : டோண்டு ராகவன் அய்யா
நன்றி : இத்தனை பொறுமையாக படித்த உங்களுக்கும்
எழுத்து பிழையிருப்பின் மன்னிக்கவும் இரண்டு மணி நேரங்கள் தட்டச்சு செய்தேன், நள்ளிரவிற்கு மேலாகிவிட்டதாலும் நாளை வேலைநாள் என்பதாலும் மீண்டும் படித்து பார்த்து சரி செய்ய முடியவில்லை
நன்றி