தமிழிசை - விகடன் தலையங்கம்

27-12-2006 வெளியான ஆனந்த விகடன் இதழின் தலையங்கம் தமிழிசை பற்றி எழுதப்பட்டுள்ளது, டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா' தான்!
என்று ஆதங்கத்தோடு வெறும் தலையங்கம் எழுதுவதோடு விகடன் நின்றுவிடாமல் தமிழிசை பற்றிய செய்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் டிசம்பர் மாத கச்சேரிகளுக்கு பக்கம் பக்கமாக இடம் ஒதுக்கி நிகழ்ச்சி விமர்சனங்கள், கர்நாடக சங்கீத பாடகர் பாடகிகளின் பேட்டிகள் , நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை வெளியிடுவது போல தமிழிசைக்கும், தமிழிசை கலைஞர்களுக்கும் விகடன் செய்யவேண்டும், விகடன் தருமா தமிழிசைக்கு இடம்? காத்திருக்கிறோம் தமிழிசை தலையங்கத்தோடு நிற்கிறதா? உள் பக்கங்களிலும் செல்கிறதா என்று, விகடனின் இந்த தலையங்கத்திற்கு முதலில் நன்றி


தமிழிசையை முன்னிறுத்திக் கச்சேரிகள் நடக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

காலகாலமாகக் காற்றில் கலந்துவரும் ஆதங்கக் குரல் இது. ஆனாலும், டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா'தான்!

வயிற்றுப் பசிக்கு வழியில்லாதவர்கள் வேறு வீட்டில் கையேந்தலாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமல்லவா நம் தமிழ்!

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை தராத மயக்கத்தை வேறு எந்த மொழிப் பாடல் தந்துவிடும்? சங்க காலம் தொட்டு சுப்ரமணிய பாரதி காலம் வரை... தெய்வ பக்திப் பாடல் தொடங்கி தேச பக்திப் பாடல் வரை... ஊனுக்கும் உயிருக்கும் இன்பம் சேர்க்கும் பாடல் வரிகளுக்கா பஞ்சம்?

பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற கட்டுக்கோப்பான மேடைக் கச்சேரி வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர் பாடல்களை எங்கே தொலைத்தோம்? "ஆடிக் கொண்டார் & அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ" என்ற அவரது பாடலைக் கேட்டால் ஆடாத தலையும் இருக்க முடியுமா, என்ன?

மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன் ஆகியோரின் வார்த்தை மகுடிகளை எடுத்து ஊதினால் மயங்காத இதயம் எது?

தமிழ் விளக்கை சுடர்விடச் செய்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாமே..!

இசை தாகம் கொண்ட எவருக்கும் மொழிகளைத் தாண்டிய நாட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், மண்ணின் மொழியாம் தமிழைத் தள்ளி வைத்தால் நிஜமான தாகம் எப்படித் தணியும்?

சிந்தனை செய் மனமே..!

சிங்கப்பூரில் பொங்குதமிழ்ப் பண்ணிசை விழா

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை நடுவில் வைத்து அழகு பார்த்தது தமிழ், ஆனால் இன்று தமிழர்களிடத்திலே இசையில் தமிழில்லாமல் வேற்று மொழிகள் ஆக்கிரமித்து விட்டன, இந்த நிலையை மாற்றி 'ஆதி' இசையான தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறுவனராக இருக்கும் "பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம்" சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை விழாக்கள். இவ்விழாக்கள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, கடல் கடந்து வெளிநாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூரில் இயேசு பிறந்த நன்னாளாம் கிறிஸ்த்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று மாலை காலாங் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"விலும் சிங்கப்பூர் வானொலியிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மாலை ஆறு மணி சில நிமிடங்களில் மருத்துவர் இராமதாசு இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரங்கினுள் நுழைந்தார், ஆதி இசையாம் தமிழிசை மழையில் நனைய வான் மழையும் வந்து சேர்ந்ததால் தமிழிசை நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரமானது, கவிஞரும் எழுத்தாளருமான பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் அவரோடு இணைந்து சிங்கப்பூர் வானொலி சேவை ஒலி 96.8ன் அறிவிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கவிஞர் இனியதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலோடு விழா இனிதாக ஆரம்பித்தது, திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் தமிழிசை பற்றிய பல தகவல்களோடும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்.

பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் திரு.ஜே.வி.கண்ணன் அவர்களின் தொடக்க உரையை தொடர்ந்து தேவார இசைமணி பழனி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தேவார இசைமணி கரூர் சுவாமிநாதன் அவர்களின் மூவர் தேவாரம், திருவாசகப்பாடல்கள் அரங்கிலுள்ளோர் உள்ளம் உருகப் பாடினார்கள்.





திருமதி டி.கே.கலா திருவருட்பா பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் அரங்கம் ரசிக்க பலத்த கைதட்டல்களோடு பாடினார்.









சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல், திருமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோகாசனக்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு பண்ணிசைப்பாணர் மா.கோடிலிங்கம் அவர்கள் திவ்யபிரபந்தம், சித்தர் பாடல்கள், குனங்குடி மஸ்தான் பாடல்களை பாடினார், "ஆடு பாம்பே" பாடல் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.



தமிழிசையில் ஆய்வு செய்திருக்கும், லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவியுமான திருமதி.சங்கரி கிருஷ்ணன் அவர்கள் மும்மூர்த்திகளின் முன் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்

பெரும்பாண நங்கை பட்டம் பெற்றவரும், திருச்சி காவேரி நுண்கலை கல்லூரியின் முதல்வருமான அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் வீரமாமுனிவர் பாடல்களை பாடினார்

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் இசையான நாட்டுப்புற இசையை பாடினார் இசையில் முனைவர் பட்டம் பெற்ற திரு.மதுரை சந்திரன், இவரின் பாடல்கள் அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது, கிராமிய காதல் பாடல்கள், காசு பணம் பற்றிய பாடல்களோடு "கத்திரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு" என்று தொடங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களும், நம் நெஞ்சில் நீங்க துயராக இருக்கும் கும்பகோணம் பள்ளி எரிந்தது மற்றும் இயற்கை பேரிடரான சுனாமி சோகத்தையும் பற்றிய பாடல்கள் நெஞ்சைப்பிழிய வைத்தன.

நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக தலைவர்களின் உரை அமைந்தது, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் வரவேற்புரை வழங்கினார், அவரைத்தொடர்ந்து திரு.ஜே.வி.கண்ணன், திரு.எஸ்.எம்.ஃபாருக், திரு.எஸ்.குலாம், பேராசிரியர் திருமிகு.திண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியத்தொடர்வண்டித்துறை முன்னாள் அமைச்சர் திருமிகு.ஆ.கி.மூர்த்தி மற்றும் திருமிகு.கணேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்.

இறுதியாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றினார், இயேசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்து கூறி தன் உரையை ஆரம்பித்தார்,தமிழிசையின் தற்போதைய நிலை அதன் பெருமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் பற்றி விரிவாக தம் பேச்சில்

பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருக்கும் அவரவர்கள் உரிமையை கொடுத்து அவரவர்கள் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல் அரசாக இருக்கும் சிங்கப்பூர் அரசை மக்கள் அரசு என்று பாராட்டினார்.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் பாடல்கள் இன்றைய இளைஞர்களை சென்று சேராததற்கு காரணம் நம்முடைய பெரியவர்கள் அதை நம் இளைஞர்களுக்கு படிப்பிக்காததுவேயாகும் அதனால் வரும் தலைமுறைக்கு உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இவைகளை கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு இந்த பண்ணிசையை சேர்ப்பியுங்கள் என்றார்.

6 வயதிலிருந்து ஏன் 4 வயதிலிருந்து பண்ணிசையை தமிழிசையை குழந்தைகளுக்கு படிப்பியுங்கள், 6 வயதிலிருந்து +2 வரை தமிழிசை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டும் அதற்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார். ஐரோப்பா மற்றும் கனடாவில்உள்ள ஈழத்தமிழர்கள் சனி, ஞாயிறுகளிலே தமிழ்ப்பண்ணிசையை அவர்களே பள்ளிக்கூடங்கள் வைத்து பயிற்றுவிக்கின்றனர், அதனாலேயே ஈழத்தமிழர்களுக்கு இதில் மிக்க ஆர்வம் இருக்கின்றது, இதே போல் இங்கிருக்கும் தமிழர்களும் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்ப்பண்ணிசையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு காரணம் இங்கே யார் யாரோ வந்து இசை என்ற பெயரிலே ஆடியிருப்பார்கள், பாடியிருப்பார்கள் அதனால் இப்படியான இசையை அறிமுகப்படுத்த விரும்பினோம்.

தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள், இந்த நிலை மாற வேண்டும், இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறிவருகின்றோம், பொங்குதமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றம் அமைத்து மற்றவர்களிடமிருந்து தமிழிசையை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், தமிழகத்திலே சென்னையிலே 150 சபாக்கள் உள்ளன, ஆனால் அங்கேயெல்லாம் தெலுங்கு பாடல்களும் வடமொழிப்பாடல்களும் பாடப்படுகின்றன, தமிழ் பாடல்கள் வெறும் துக்கடாவாக பாடப்படுகின்றன, அந்த நிலை மாற வேண்டுமென்றார், பண்ணிசை ஆய்வுகள் பற்றிய கருத்துகள் ஒரு நாள் அல்லது அரை நாள் வரும் காலங்களில் பட்டறையாக நடத்தப்படுமென்றார். பிறப்பிலிருந்து இறப்புவரை நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார், மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும், திரைப்படத்தின் தாக்கம் இல்லாமல் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகின்றோம், மேலும் நல்ல தமிழிற்கு தமிழோசை பத்திரிக்கையை நடத்தி வருகின்றோம் என்று பேசினார், தமிழிசை விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி கூறி தம் உரையை முடித்தார்.

மேலும் படங்கள் இந்த சுட்டியில்

இது தொடர்பான பிற சுட்டிகள்

கோவிக்கண்ணன் சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

ஹரிகரனின் (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

கருத்தடை டாட் காம்

பொதுவாகவே பாமரனின் எழுத்தில் நக்கல் நையாண்டி கொஞ்சம் விளையாடும்.... தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தை பற்றி விழிப்புணர்வு இதழில் எழுதியுள்ளார் பாமரன், கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு.

"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்

மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் அதாவது---

இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்....

ஆம் இந்த ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான் :

இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன?

கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்ற அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க வின் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?

அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?

அல்லது

3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?

ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா?

என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.

1931 கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காக காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய கணக்கெடுப்பு இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பது தான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில், நல்ல வேளையாக சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்.

1931ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?

சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா....?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்....?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961ல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%...

இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் இந்த நாடு கடலில் மூழ்கட்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.

ஆக இன்றுவரை இந்த சுதந்திர இந்தியாவில் ஆகா ஓகோ என்று ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?

இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8% என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41%மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.

சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க

79306 நகர்ப்புற வீடுகளிலும்

45377 கிராமப்புற வீடுகளிலும்

இந்த சர்வே நடத்தினோம் என்பவர்களிடம் சர்வே சரி....

எந்த நாட்டில்....

எந்த மாநிலத்தில்....

எந்த நகரத்தில்....

எந்த கிராமத்தில்....

நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது அகண்டபாரதக் கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?

வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ....?
யாமறியோம் பராபரமே.

காட்கோ வாலிஸ்... பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

நன்றி
கீற்று

சிலைகளுக்கு வலிப்பதில்லை ஆனால்...

சில நாட்களுக்கு முன் நடை பெற்ற அம்பேத்கார் சிலை உடைப்பு பற்றியும் அதை தொடர்ந்து எழுந்த கலவரங்களும் வலைப்பதிவில் பெரிதான விவாதத்தை ஏற்படுத்தவில்லை, வெகு சில பதிவுகள் மட்டுமே அதைப்பற்றி வெளிவந்தன, இது வழக்கம் போல வெறும் இன்னொரு சிலை உடைப்பு என்றளவிலேயே இங்குள்ள மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது, ஆனால் இது வெறும் இன்னொரு சிலை உடைப்பு அல்ல, சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த/செய்கின்ற அநீதிகளுக்கு கொடுக்கும் விலை, இந்த சமூக அமைப்பு மாறதவரை இந்த மாதிரியான விலைகளை நாம் கொடுத்துக்கொண்டே இருப்போம், இது கலவரமல்ல, இது ஒரு எதிர் கலவரம், சமூகம் தொடுத்த தாக்குதலுக்கு ஒரு சிறிய பதிலடி, பொதுவாக இது மாதிரியான நிகழ்ச்சிகளின் போது வெகுசன ஊடகங்கள் மிக மேலோட்டமான ஒரு செய்தியையும் கட்டுரையையும் அளிக்கும், ஆனால் ஜீனியர் விகடனில் ஜென்ராம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தை மக்களுக்கு எடுத்து சென்றிருக்கும், அந்த கட்டுரையின் சில கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும் அந்த கட்டுரையை இங்கே பதிவிடுகின்றேன், ஜீனியர்விகடனில் வெளியாகும் ஜென்ராமின் கட்டுரைகள் மிக ஆழ்ந்த சிந்தனைகளோடும் பிரச்சினையின் உண்மையான காரணங்களையும் பேசுகின்றது. ஜென்ராம் நமது சக வலைப்பதிவாளரான ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கப்பலில் ஒரு சிறிய தீப்பொறி விழுந்தாலே போதும்; கப்பல் எரிந்து சாம்பலாகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சில தலித் இளைஞர் களின் மனநிலையும் கிட்டத்தட்ட அந்தக் கப்பலின் நிலையில் இருந்திருக்கிறது. அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் கான்பூரில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடன், மகாராஷ்டிர மாநிலத்தின் பல நகரங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. இரண்டு ரயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கும்பலைக் கலைப்பதற்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகியிருக்கிறார்கள்.


"ஒரு சிலைக்கு ஏற்படுத்தப்படுகின்ற சேதம் பெரும் வன்முறைக்குக் காரணமாகலாமா? பெரும் கலவரத்துக்குக் காரணமாகும் அளவுக்கு சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" &நகர்ப்புறத்தில் இருக்கும் பெரும்பாலான படித்த, நடுத்தர மக்களின் கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. "தேர்தல் வந்துவிட்டால் பகுத்தறிவு, சமதர்மம், தர்க்க நியாயம் என்ற அனைத்துப் பண்புகளும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுகிறது... மக்களுக்கு முக்கியமில்லாத ஒரு பிரச்னையை மிகவும் அவசியமான ஒரு பிரச்னையாகப் பெரிதாக்கி, கொந்தளிக்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கி விடுகிறார்கள்" என்ற கருத்தும் அவர்களிடம் பரவலாக உள்ளது. இந்த எண்ணம் தற்போது ஊடகங்கள் மூலமாக சாதாரண மக்களிடத்திலும் படிப் படியாக வேகமாகப் பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை என்று எப்படி முழுமையாக உதறித் தள்ளிவிட முடியாதோ அதேபோல் இந்தக் கருத்தை முழுமையாக அப்படியே ஏற்றுக் கொள்வதும் இயலாது.

முதலில் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள். சோவியத் யூனியன் சிதறும்போது ஆங்காங்கே இருந்த லெனின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இராக்கில் பாக்தாத் நகரம் அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், சில இராக்கியர்கள் சதாம் உசேனின் சிலையை அகற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையைத் தாலிபான்கள் தகர்த்தார்கள். ‘பண்பாட்டுப் புரட்சி’ என்ற பெயரில் காந்தி சிலைகளுக்கு இடதுசாரி தீவிரவாதிகள் குண்டு வைத்தனர்.

சென்னையில் ஓர் ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை, அடுத்த ஆட்சியில் மீண்டும் நிறுவப்பட்டது. தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சிலைகள் சிலருக்கு முக்கியம். அதேபோல சில வரலாற்று நாயகர்களின் சிலைகள் வேறு சிலருக்கு முக்கியம். ஏனெனில், தாங்கள் மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை இந்தத் தலைவர்கள்தான் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுத் தந்தார்கள் என்று மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.

சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டால் கலவரம் வெடிக்கிறது. எனவே சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காவல்துறை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறைக்கு கடினமான செயல் என்பதால், சிலைகளை எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் வாழ்ந்து மறைந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடைய சிலைகளுக்கு மட்டுமே இத்தகைய பரிந்துரையை வழங்குகிறார்கள். அனைத்து மத கடவுள்களின் சிலைகளையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் கட்டி பாதுகாப்பளிக்கலாம் என்று இவர்கள் பேசுவதில்லை.

கான்பூரில் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏன் கலவரம் நடக்கிறது? தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றழைக் கப்படும் மும்பை, இந்த மாநிலத்தின் தலைநகர். அதிக அளவிலான முதலீடும், தொழில் வளர்ச்சியும், அதிசய உலகங்களும் இந்த மாநிலத்தில் உள்ளன. இருந்தும் இங்கு அவ்வப்போது நிகழும் வன்செயல்கள் இதுபோன்ற வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். சட்டங்கள் எத்தனை வந்தாலும் நடைமுறையில் இன்னும் தாங்கள் மற்றவர்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. இந்த அறிவு அவர்களிடம் அடக்கப்பட்ட கோபமாக எப்போதும் கனன்று கொண்டே இருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மகராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியான சுனிதா பாபுராவ் என்ற பெண்மணியால் அவரது கிராமத்தில் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இவர் பிறப்பால் தலித் என்பதே இதற்குக் காரணம். இப்படி ஏற்கெனவே சமூகரீதியாக பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் தலித் இளைஞர்களிடம், அரசாங்கத்தின் செயலற்ற தன்மை அல்லது அரசாங்கத்தின் ஒருபக்க சார்பு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயல்பான கோபத்தை ஜனநாயகரீதியில் பிரதிபலிப்பதற்கு தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைமை தவறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் அரசியல் கட்சித் தலைமையிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாக தலித் இயக்கம் பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன. வழிகாட்டுவதற்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இளைஞர்கள் தங்கள் கோபத்துக்கு வடிகாலாக வன்செயல்களில் இறங்குகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நகரங்களில் நடந்தவை மட்டுமே வன்முறை அல்ல. கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதும் ஒரு வன்செயலே. எவ்வளவுதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும் வன்முறையை ஒரு வழிமுறையாக நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமில்லாத நிலைப்பாட்டில் இருப்பவர்களே முதன்முதலில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். ஒரு சக மனிதனை ஆயுதத்தால் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல; அவனை சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார நிலை போன்ற எந்தக் காரணம் கொண்டும் வெறுப்பதும் வன்முறைதான். அப்படி மனதளவில்கூட வன்முறை எண்ணம் இல்லாமல் இருப்பதே அஹிம்சை தத்துவத்தின் உயிர்நாடி.

மக்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை எந்த அரசாங்கமும் அரசமைப்புச் சட்டமும் ஆதரிப்பதில்லை. மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது, அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள். ஒருவேளை, வன்முறை மூலம் சமூகத்தில் நீதி நிலைநாட்டப் பட்டாலும் அது அநீதியான முறையில் கிடைத்த நீதியாகவே கருதப்படும். வன்செயலும் கலவரமும் அராஜகமும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அவை கண்டிக்கத்தக்கவையே. ஏனெனில், ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது!

செல்போன் விற்கும் கைப்புள்ள - 1



சங்கத்து சிங்கமெல்லாம் கைப்புள்ள தலைமையில் சங்கத்தில் ஒன்று கூடுகின்றனர்.

சங்கத்து சிங்கம் 1: தல என்ன தல கூப்புட்டிங்க, சொல்லு தல ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்

கைப்புள்ள: யேய் யேய் என்ன என்ன இப்போ ஓவரா சலும்புற, தல நான் இருக்கன்ல, ஏன் வாலு ஆடுது?

ச.சி. 1:(சசினு படிச்சிப்புடாதிங்கப்பு, சங்கத்து சிங்கத்தத தான் சுருக்கி ச.சி. அப்புடினு சொல்றோம், நல்லா பாருங்கப்பு "ச"க்கும் "சி"க்கும் நடுவுல புள்ளிவச்சிருக்கு) ஸாரி தல, தல நீயே சொல்லு தல

கைப்புள்ள: ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா, முடியலைடா இந்த சங்கத்தை வச்சிக்கிட்டு மாரடிக்க முடியலை, இப்போலாம் நாம காட்டுற படத்தையும் எவனும் பாக்க மாட்டேங்குறானங்க, அதான் நம்ம சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி ஒங்களை நம்பி

ச.சி.2: எங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கப்போறிங்களா?

கைப்புள்ள: அஹ்ஹ்ஹா அஹ்ஹா, நீ ஒருத்தனே போதும் டா, என்னிய குளோஸ் பண்றதுக்கு என்னிய குளோஸ் பண்றதுக்கு

ச.சி.1 : அப்போ வேற என்னதான் தல, சீக்கிரம் சொல்லுங்க

கைப்புள்ள: சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி செல்போன் கடைவைச்சி பிசுனஸ் பண்ணப்போறேன் டா பிசுனசு

ச.சி.2: சூப்பர் தல, சூப்பர், ஆமா எனக்கு ஒரு சந்தேகம்

கைப்புள்ள: சொல்றா சொல்றா சொல்றா

ச.சி.2: தல ஏற்கனவே நம்மூர்ல 4 செல்போன் கடை இருக்கு, ஒருத்தரு கேமரா செல்போனை விக்குறாரு, ஒருத்தரு கேமராவோட வீடியோவும் சேத்து விக்குறாரு, இன்னொருத்தரு ரேடியோ செல்போன் விக்குறாரு, ஒரு அக்கா வெறும் சொல்போனை விக்குது, நீங்க எப்புடி தல விக்கப்போறிங்க

கைப்புள்ள: வாடா என் வென்று தல இதை கூட யோசிக்காம இருப்பனா? இப்போ கேமரா செல்போனு வெல அதிகம், வீடியோ செல்போனு வெலையும் அதிகம், வெயிட்டும் அதிகம், ரேடியோ செல்போனு ரேடியோ கேக்குறவங்க மட்டும்தேன் வாங்குறாங்க, இந்த அக்கா விக்குதே செல்போனு அதுல ரிஜப்சன் ரொம்ப கம்மி, அது மட்டுமில்லை, அந்த கேமரா செல்போன்காரனை புடிக்காதவங்கள்ளாம் இந்த அக்கா கடைக்கு தான் வருவாங்க.

ச.சி.1: சரி தல அது இருக்கட்டும் நம்ம செல்போனை எப்படி விக்கப்போறோம், எல்லாருமே ஏதோ ஒரு குருப்பை கவர் பண்ணிட்டாங்களே, நீங்க என்ன பண்ணப்போறிங்க

கைப்புள்ள: செல்போன் எதுக்கு? எதுக்கு?

ச.சி.1:எதுக்கு தல

கைப்புள்ள: ஹைய்யோ ஹைய்யோ, இது கூட தெரியலையா, செல்போன் பேசுறதுக்கு.

ச.சி.2(மனதினுள்): ஆகா தலைக்கு ஏறிடுச்சி டோய், இனி பிச்சி ஒளறப்போவுது.

கைப்புள்ள: ஹேய் என்ன என்ன லுக்கு

ச.சி.2: ஒண்ணுமில்லை தல நீங்க சொல்லுங்க

கைப்பு: ஆங்.... அது....அந்த செல்போன் விக்குற எதுலயுமே ரிஜப்ஷன் சரியில்லை, எல்லா செல்போனும் வெயிட்டு அதிகம், வெலையும் அதிகம்.

ச.சி.1: தல சூப்பர் தல

கைப்பு: இப்போ நாம மத்த செல்போனை விட வெயிட்டு கம்மியா, நல்ல ரிஜப்ஷன் வர்றமாதிரி, வெலையும் கம்மியா செல்போன் விக்கப்போறோம். எப்புடி நம்ம ஐடியா?

ச.சி.2: தல சூப்பர் தல, ஆனா அப்புடி ஒரு செல்போன் வச்சிருக்கியா தல

கைப்பு: அது எவன்கிட்ட இருக்கு, அரைலோடு செங்கக்கட்டி தான் இருக்கு

ச.சி.1: தல செல்போனு இல்லைனா எப்புடி தல விப்ப

கைப்பு: சும்மா அப்புடி சொல்லி செங்கக்கட்டிய வித்துட்டா அப்புறம் 50 வருசத்துக்கு எவனும் நம்ம கடையை உட்டு வேற கடையில வாங்கமாட்டான்.

ச.சி.2: சூப்பர் தல சூப்பர், தல இப்புடி கலக்குறிங்களே, எல்லாம் அண்ணி ஐடியா தானே?

கைப்பு: டாய் யார்ராவன், நீ என்ன கட்டதொரை ஆளா? ஒனக்கும் கட்டம் சரியில்லை சொல்லிப்புட்டேன், ஆமாம், "வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கிட்ட ஐடியா கேட்காம வேற ஒருத்தர் கிட்ட எப்படி ஐடியா கேட்க முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி ஐடியாகேட்க முடியுமா இல்ல வேற பொண்ணுங்க கிட்ட ஐடியா கேட்க முடியுமா?..."

கைப்பு சொல்லி முடிக்கும் முன் கைப்பு மூஞ்சியில மேல இருந்து இரண்டு அழுகிய தக்காளி வீசப்பட்டது, கொஞ்சம் ஆளுங்க கோபத்தோடு கத்த


கைப்பு: ஏய் ஏய் யாரு அது மேல இருந்து எம்மேல தக்காளி எறியறது? ஹேய் ஹேய் வேணாம் அழுதுடுவேன், நான் சொன்னா மட்டும் எல்லாம் கோவப்படுறிங்க, நம்ம கேப்டன் விஜயகாந்த்தும் இதைத்தானே சொன்னாரு

கேப்டன் விஜயகாந்த் பெயரை சொன்னவுடன் கூட்டம் அமைதியாக.

கைப்பு: (மனதினுள் ஆங் கேப்டன் பேரை சொன்னாதான்பா அடங்குறாங்க) ராஸ்கல்ஸ் என்ன இது சின்னபுள்ளத்தனாமா? மேல எறிஞ்சிக்கிட்டு, அதை கையில குடுங்க சூசு வச்சி குடிக்கிறேன், இல்ல சட்னி அரைச்சு சாப்புடறேன்,

(கூட்டம் அமைதியானதை பார்த்து கேப்டன்ங்கற பெயரை தானும் வைத்துக்கொள்ளனும்னு கைப்புவுக்கு ஆசை வந்துடுச்சி.)

கைப்பு: என் சங்கத்து சிங்கங்களா, இனிமே என்னை தல தலனு கூப்புடாதிங்க, சிலுக்குவார்பட்டி கிட்டிப்புள்ளு டீம் கேப்டனா இருந்ததால எல்லாருமென்னை கேப்டன் கேப்டன்னு கூப்புடுங்க

ச.சி.1: சரி தல, ஸாரி ஸாரி, சரி கேப்டன்.

கைப்பு என்கிற கேப்டன்: அஹ்ஹா அஹ்ஹா, நாளைக்கு எல்லாம் மதுர மார்க்கெட்டுக்கு வந்துடுங்க, அங்கே தான் நம்ம கடையை ஆரம்பிக்கறோம்.....

பின்குறிப்பு:
மக்களே நாளைக்கும் மறக்காம இங்க வந்துடுங்க, நம்ம கேப்டன் கைப்பு செல்போன் விக்கபோறது நேரடி கவரேஜ் பாக்கலாம்

பொய் சொல்லும் விஜயகாந்த், பாராட்டும் இட்லிவடை

இட்லிவடை பதிவில் விஜயகாந்த் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியை படித்தேன்.

அதில் ஒரு கேள்வி பதில்.

கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.

கேப்டன்(?!) விஜயகாந்த் செப்டம்பர் 19, 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார், அதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு 2005 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விஜயகாந்த் ஒரு சந்திப்பு நடத்தினார், இது தொடர்பாக மே 30, 2005 அன்று இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும் என்று ஒரு பதிவெழுதியிருந்தே.

அதிலிருந்து சில வரிகள் (நினைவில் கொள்ளுங்கள் கீழ் கண்ட வரிகள் எழுதப்பட்டது மே-30, 2005)


நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய
மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு
வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.



கட்சி தொடங்கியது செப்டம்பர் 14, 2005 மேற்கண்ட பதிவு எழுதப்பட்டது மே 30, 2005, மண்டபம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கலைஞருடன் சந்திப்பு மே 2005ல் நடந்துள்ளது.

ஆனால் இப்படி கூசாமல் ஒரு பொய்யை சொல்லியுள்ளார் விஜயகாந்த், இப்படிபட்ட பதில்களை பாராட்டி இட்லிவடை நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று சான்றிதழ் வேறு வழங்கியுள்ளார். பாவம் இட்லிவடை ஒலகம் அறியாத(?!) புள்ளையா இருக்கார்.

சிறுவர் போர்னோகிராபி

நீண்டு போன நேற்றைய இரவில் டிஸ்கவரி சேனலில் நம்மோடு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றிய படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு அதில் வந்த ஒரு விளம்பரம்,அது சிறுவர் போர்னோகிராபி பற்றிய விளம்பரம். அதில் சில புள்ளிவிபரங்கள்.

* கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இணையத்தில் 1,500% அதிகரித்துள்ளது.

* இன்றைய அளவில் ஒரு இலட்சம் சிறுவர் போர்னோகிராபி தளங்கள் இணையத்தில் உள்ளன, வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

* சிறுவர் போர்னோகிராபி தளங்களில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சிறுவர்கள் வரை காண்பிக்கப்படுகின்றனர்.

* ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து வரையான புதிய சிறுவர்கள் வருகின்றனர்.

* The victims keep getting younger

* அத்துமீறல்கள் மேலும் மேலும் மோசமடைகின்றன.

* சிறுவர் போர்னோகிராபியில் பயன்படுத்தப்படுபவர்களின் சராசரி வயது ஒன்பது

* மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

* ஆன்லைன் சிறுவர் போர்னோகிராபி ஒரு மல்ட்டி பில்லியின் டாலர் வியாபாரம், இது ஆன்லைன் இசை விற்பனையை விட பல மடங்கு அதிகம்.

இந்த விளம்பரத்தில் உங்களின் பணம் எங்களுக்கு தேவையில்லை, உங்களது ஆதரவே எங்களுக்கு தேவை என்று கோரிக்கை வைக்கின்றனர்.

நம் ஆதரவை காண்பிக்க lightamillioncandles.com என்ற இணையதளம் சென்று ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.

விளம்பரப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இட்லிவடை கருத்து கணிப்பு முடிவுகள்

கள்ள ஓட்டு, இலவசத்துக்கு ஓட்டு, காசுக்கு ஓட்டு, வன்முறை ஓட்டு, சாதி ஓட்டு, அந்த சாதிக்கு எதிர் ஓட்டு, கட்சி ஓட்டு, அந்த கட்சிக்கு எதிர் ஓட்டு, கூட்டணி ஓட்டு, சொந்தக்காரங்க ஓட்டு, தெரிஞ்சவங்க ஓட்டு, புடிச்ச ஆளுக்கு ஓட்டு, புடிக்காத ஆளுக்கு எதிர் ஓட்டு இந்த ஓட்டெல்லாம் அரசியல் கட்சிகள் பங்கு பெறும் படிக்காத சிந்திக்காத மக்களுக்குத்தான் என்று நம்புவோம், படித்த, பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்வங்கள் நிறைந்த வலைப்பதிவுலகில், இங்கே "மனசாட்சி" ஓட்டு மட்டும் தான்னு சொல்லத்துடிக்குது மனசு.

இட்லிவடை வலைப்பதிவை பற்றிய கருத்து கணிப்பில் இட்லிவடையின் பதிவு சூப்பர் பதிவு என்று 45% வாக்குகள் விழுந்துள்ளன, அதாவது பதிவான 272 வாக்குகளில் 123 வாக்குகள் இட்லிவடையின் வலைப்பதிவு சூப்பர் என வாக்களித்துள்ளனர். அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள்.... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாக்கு விவரங்களை இந்த சுட்டியில் காணலாம்



இந்த கருத்துக்கணிப்பிற்கு இவ்வளவு பேர் ஆர்வமாக வந்து வாக்களித்தமைக்கு நன்றி, இந்த ஆதரவு மேலும் மேலும் இது போன்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

உங்களின் பேராதரவிற்கு நன்றி.... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்குப்பதிவிற்கு தன் மேலான ஆதரவையும் அளித்து, விளம்பரமும் அளித்த வலைப்பதிவர் இட்லிவடைக்கு என் மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.