மெளனசாட்சி


உலகத்தின்
பெருந்துயரக்காரன்
யதேச்சையாக எதிர்பட்டான்

உலர்ந்து
பிளந்திருந்த உதடுகளில்
உட்கார்ந்திருந்தது
விரக்தியும் பரிதவிப்பும்...



கடைசி ஈரத்தையும்
தொலைத்துவிட்டு
கடுந்தீயாய்
விழிகளில்
கனன்று தெறித்தது கங்கு...

கண்முன்னாலேயே
மொத்தத்தையும்
வாரிகொடுத்த ஈழக்கோபம்...
உக்கிரச் சிரிப்பாகி
ஊர் மேல் விழுந்தது!

"நாசமாப் போவீங்கடா"வென‌
அடிவயிற்று வலி இழுத்து
முகம் சிலுப்பி
தூற்றிய சாபம்
கடைசி டத் துளி விஷமாய்
நெஞ்சறுக்க....
குற்றவுணர்வில்
கட்டிக்கொள்கிறேன்
என் குழந்தைகளை...!

நானும்
வேடிக்கை பார்த்தவர்களில்
ஒருவன்!

-‍‍
இரா.சரவணன்
ஜூனியர் விகடன்

நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

நக்கிப் பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித் தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

ஆரிய பார்ப்பான்
அலறி சொன்னான்
நீ போய்
சேரலையேயென்று

வாய் சண்டையிட்டோம்..
அட்டை கத்தி சுழற்றினோம்

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

உன் நினைப்பே
அவர்களை அறுக்குதென்று...

உன் உயிர்ப்பே
அவர்களை உருக்குதென்று...

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

கண்ணீர் விட்டு
கதறியிருப்போம்...

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும் உனக்கு

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும்

ஆரிய பார்ப்பான்
ஆரிய பார்ப்பான்
என்றாய்
நீயே
சூத்திர பார்ப்பானாகி
எம்மினம் குடித்தாயே!

கொள்ளையிட்டு சேர்த்த
சொத்து காக்க நீ
கொள்கை விற்று சேர்த்த
சொத்துக் காக்க
கொள்ளைபோச்சே என்
இனம்...

அய்யோ போச்சே
அய்யோன்னு போச்சே!

நக்கிப்பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித்தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

மே13க்கு முன்
வந்தால் கெட்ட செய்தி
அது உமக்கும்
கெட்ட செய்தியே!

நீ நம்பாத கடவுளை
வேண்டிக்கொள்
எதுவும் மே13க்கு
பிறகே என்று

பதவி துண்டு
கொள்கை வேட்டி
அரசியல் வியாபாரிக்கு
வெறும் பேச்சு
போராளிகளுக்கு
அதுவே மூச்சி


அல்லக்கைக்கே
அமைச்சர் பதவியெனில்
'ரோ'ட்டில் விற்றிருந்தால்
தங்கதட்டில் தின்றிருக்கலாம்
ஆனால் நக்கிதான்...

சேகுவேரா
தங்கத்தட்டில் நக்கிதின்று
கடற்கரையில் சமாதியாகவில்லை
அகோர சாவென்றாலும்
அவன் சாவு
போராளி சாவு
அது அவன்
கெளரவ சாவு


நக்கியும் கக்கியும்
நீ தின்றுகொள்!

சொத்தையும் சொந்தத்தையும்
நீ காத்துகொள்!

இனி உனக்கில்லை
ஒரு சொட்டு கண்ணீர்!

இனி உனக்கில்லை
எம்மிடம்
ஒரு சொட்டு கண்ணீர்!

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை
சர்தார்ஜி ஜோக்குகள் மூலம் முட்டாளாக வர்ணிக்கப்படும் சீக்கியர்கள், நிஜத்தில் புத்திசாலிகள். சக சீக்கியனை கஷ்டத்தில் வைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அவ்வளவு சகோதரத்துவம் உள்ளவர்கள். ஆனால் சீக்கியர்கள் கோபப்பட்டால்? 25 ஆண்டுகள் ஆனாலும் அது ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதைத் தமிழரான(?) ப.சிதம்பரம் தன் மீதான "காலணி" வீச்சு சம்பவத்தால் உணர்ந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவே உணர்ந்தது.

அந்த சம்பவம் உணர்த்தும் சேதி? அந்த உணர்வை அப்படியே உள்வாங்கி, நம் "தன்மான"(?!)த் தமிழனத்தைத் திரும்பிப் பார்த்தால்..?

சீக்கியர்களுக்கு எதிரான கேவலமான திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த மாபாதகச் செயல்கள் உண்மையாகவே கொடுரமான இன் வெறித்தாக்குதல். கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டித்தனம். மறுக்கவே முடியாது.

ஆனால், அந்தக் கலவரத்தில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை.(சீக்கியர்கள் மன்னிக்க!) சீக்கியக் குழந்தைகளின் அனாதை இல்லங்களில் குண்டு போடவில்லை. தன் குடும்பத்தார் கொலை செய்யப்படுவதைப் பார்த்து அழுத "மாபெரும்" தவறுக்காக எந்த சீக்கிய பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை. (மீண்டும் மன்னிக்க) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து எந்தக் குழந்தையும் கத்தியால் கிழித்து எடுக்கப்பட்டு, காலணியால் சதைக்குழம்பாக ஆக்கப்படவில்லை. கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், பல்முனையில் பாய்ந்து தாக்கும், கொடிய குண்டுகள் சீக்கியர்கள் மேல் போடப்படவில்லை. விச வாயு செலுத்தி அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்படவில்லை.

அந்த மாபாதகத்தைச் செய்தவர்களுக்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கவில்லை. வட்டியில்லாக் கடன் கொடுத்து கத்தி வாங்கச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணம் அவர்களுக்குக் கிடைக்காமல், அதையும் வன்முறையாளர்களுக்கே தரவில்லை. அப்பாவி சீக்கியர்களை கொடூரமாக அழிக்க வதை முகாம்கள் அமைக்கச் செய்யவில்லை.

நல்ல வேளை, நம் சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இது எல்லாம் நடக்கிறது. இதற்கு மேலும் நடக்கிறது. எழுதக்கூடாததும் நடக்கிறது.

சீக்கியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது நேற்றல்ல... போன வருடம் அல்ல...பத்து வருடம் முன்பு கூட அல்ல..1984-ல், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு! பொதுவாக நம் குடும்பத்தில் யாராவது ஒரு ரத்த உறவு.. ஒரே ஒரு ரத்த உறவு அநியாயமாகக் கொல்லப்பட்டால், நாமும் சீறி எழுவோம். எவ்வளவு நாட்களுக்கு? சில பல வருடங்கள்? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டால் மனைவி நம்மிடம், " நடந்தது நடந்துப் போச்சு பழிக்குப் பழி வாங்கணும்னு போய் வங்களை அனாதையாக்கிடாதீங்க" என்பாள். பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டால் அதே விசயத்தை மகனோ, மகளோ சொல்வார்கள். பாரம் கடவுள் மேல் போடப்படும்.

ஆனால் பொதுவில் தமிழனைவிட பக்தி நிறைந்த சீக்கியர்கள்? 25 என்ற நீண்ட கால் இடைவெளி அவர்களது மீசையில் உள்ள ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை. அசைக்க முடியவில்லை. செருப்பு வீசிய அன்றே சோனியா வீடு முற்றுகை, செருப்பு சீக்கிய நிருபரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முயற்சிகள்!

ஆனால் ஈழத்தில்..?

சீக்கியர்கள் டெல்லியில் தாக்கப்பட்ட 1984-ம் ஆண்டுக்கு ஒரு வருடம் முன்பு 1983-லேயே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொதிக்கும் தார் பீப்பாய்களில் குழந்தைகளைத் தூக்கிப்போட்டது...கசாப்புக் கடைகளில் தமிழனின் உடலை உறித்து ஆட்டுக்கறி போலத் தொங்கவிட்டு, "தமிழனின் ரத்தம் இங்கே கிடைக்கும்" என்று எழுதி வைத்தது...என்னென்னவோ நடந்தது...
தொடர்ந்து நடந்தது...நடந்துகொண்டே இருந்தது...இருக்கிறது. இன்னும்...இப்போதும்... இந்த நிமிடமும் நடக்கிறது.

ஆனால் தமிழன்?

ஆம்! 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அநியாயத்துக்கு எதிராக - இன்று நடந்ததுபோல் பொங்கி எழுகிறது சீக்கிய இனம். ஆனால் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டே..இருக்கிற கொடுமைகளுக்கு எதிராக, இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அரசிரல்வாதிகளின் கபட நாடக அரசியல் வேசித்தனத்தை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது தமிழினம்.
சீக்கியர்களிடம் மட்டும் ஆளும்கட்சி, எதிக்கட்சி, கூட்டணிக் கட்சிகள்... இவரைக் கவிழ்க்க அவரின் சதி, அவரைக் கவிழ்க்க இவரின் சதி இவை எல்லாம் இல்லையா? அங்கும் உண்டு. ஆனாலும் உலகின் எந்த மூலையில் ஒரு சீக்கியன் பாதிக்கப்பட்டாலும் இன்னொரு சீக்கியன் சும்மாயிருக்க மாட்டான்.

ஆனால் சீக்கியர்களின் கோபத்திலும் ஒரு கண்ணியம். அந்த நிருபர் ப.சிதம்பரத்தை "காலணி"யால் அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், மிக அருகில் இருந்த அவரின் அடியில் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும். ஆனால், அவர் காலணியை தூக்கிப்போட்டார். மிகச் சரியான லட்சியம் உள்ள, ஆக்கபூர்வமான, உணர்ச்சிவசமில்லாதத் திட்டமிட்டு செலுத்தப்பட்ட கோபம்! அதுதான் கோபத்தின் அழகு! (இச்செயல் கண்டனத்துக்குரியது என்றாலும்).
ஆனால் இழங்கைத் தமிழனுக்கு ஆதரவான தமிழனின் கோபம்?
ஒரு நாள் உண்ணாவிரத்தில் உட்கார்ந்து, தொண்டை வறளக் கத்திவிட்டு, தமிழினத் துரோகம் செய்யும் நமது அரசியல்வாதிகளில் பிடிக்காதவர்களை மட்டும் கரித்துக்கொட்டிவிட்டு, தனக்கு எலும்புத்துண்டு போடுகிற இன்னொரு தமிழினத் துரோக அரசியல் தலைவனுக்கு ஆரத்தி எடுத்து, பூசி மெழுகி, மழுப்பி உண்ணாவிரதம் உட்கார்ந்ததன் நோக்கத்தைத் தானே கெடுத்து அழித்துவிட்டு...இரவில் சாராய போதையிலோ அல்லது தனது மன்க்கொதிப்புக்கு ஒரு தற்காலிக மருந்து கிடைத்துவிட்ட சமாதான போதையிலோ தூங்கிவிடுவது. என்ன அசிங்கமான கோபம்! இது எங்கே உருப்படும்?

அன்று சீக்கிய கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட்டு, இன்று "சீக்கியர்கள் நடத்தும் போராட்டத்தில் சீக்கியருக்கு ஆதரவாக நானும் கலந்துகொள்கிறேன்" என்று ஜெகதீஸ் டைட்லரோ அல்லது கலவரத்துக்குக் காரணமான வேறு யாருமோ, 25 ஆண்டுகள் ஆனபிறகும்கூட சொல்ல முடியாது. நடப்பதே வேறு. கிழிந்துவிடும்.

ஆனால், சிங்கள அரசுக்கு ரேடாரும், வட்டியில்லாக் கடனும், உயிர்க்கொல்லி ஆயுதங்களும், ராணுவ வீரர்களையும் வழங்கும்போது, அதற்குத் துணை போய்விட்டு, "இலங்கை அரசைக் கண்டித்து மாபெரும் பேரணிக்கு வாரீர்..." என்று கூவி, கலைஞரும், தங்கபாலுவும் பேரணியே நடத்த முடியும்.
ஏன், சோனியா காந்தியே வந்து நடத்தினாலும் தமிழன் வேடிக்கைப்பார்ப்பான். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் சுமார் நான்காயிரம் பேர். அந்தக் கோபம் எட்டுக்கோடி தன்மானச் சிங்கங்களின் கோபமாக இன்று சீக்கிய இனத்தில் பொங்கிப் பாய்கிறது. ஆனால் ஈழத்தில் தினசரி நான்காயிரம் பேர் கொல்லப்பட்டாலும்கூட, ஏழுகோடி தாயகத்தமிழர்களும், அரசியல் வியாபாரிகளின் வாய்ப் பந்தல் பேச்சில் மயங்கி சுரணையில்லாமல், தங்களுக்குள் கட்சி ரீதியாக அடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

இந்திரா கொல்லப்பட்டதும், பிரதமராகப் பதவி ஏற்ற "பைலட்" ராஜிவ்காந்தி அரசியல் விவரம் புரியாமல், அல்லது மனிதாபிமானமின்றி - சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில் - ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது, சுற்றியுள்ள நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுவது சகஜம்தானே" என்று பேசினார்.

ஆனால் 1984-ம் ஆண்டு ராஜிவ் பேசிய பேச்சை சீக்கிய இனம் கடைசிவரை மன்னிக்காததன் விளைவாக 1998-ம் ஆண்டு 14 வருடம் கழித்து கணவரின் பேச்சுக்காக மனைவி சோனியா மன்னிப்புக் கேட்டார். அது சீக்கியரின் இனமான உணர்வு. ஆனால், இங்கே கலைஞர் தூக்கும் காங்கிரஸ் பல்லக்குகளின் விளைவாக, உணர்வுபூர்வமாக நடக்கும் சில போராட்டங்களும்கூட வலுவிழந்தும் அர்த்தமற்றும் போய்விடுகின்றன.
டெல்லியில் நடந்த, அந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து, பல சிறுகதைகள், நாவல்கள் வந்தன. தமிழில்கூட பல டெல்லிவாலா எழுத்தாளர்கள் "குருத்து குருத்தாக" சிறுகதை எழுதினார்கள். அது சிக்கிய இனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தது.

ஆனால் அப்படி சீக்கியர்கள் பரிதாபம் பற்றி தமிழில் பிலாக்கனமாக எழுதிய எழுத்தாளர்களே-ஈழத்தில் பொழியப்படும் குண்டு மழைகளுக்கு நடுவே தன் கைக்குழந்தையை தன் உடலுக்குக் கீழே மறைத்து தரையோடு தரையாகத் தவழ்ந்து செல்லும் பாச வீரத் தாய்மார்களைப் பற்றி ஒரு குட்டிக்கதை எழுதக்கூடத் தயாரில்லை.

ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் காலணி வீசிய சம்பவத்தைச் சிறு பொறியாகக் கொண்டு எரியத் தொடங்கிய சீக்கிய வீரத்தின் வெம்மையில் பொசுங்கி அலறிய சோனியாவின் ஆணவம்...இந்தத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெகதீஷ் டைட்லரையே வாபஸ் வாங்கிக் கொண்டது.
1984-ல் சீக்கியனுக்குச் செய்த தவறின் பலனை இன்னும் காங்கிரஸ் அனுபவிக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் போனாலும் அது அனுபவிக்கும். ஒரு சீக்கியரை ஐந்து வருடம் பிரதமராக வைத்திருந்து, இன்னும் ஐந்து வருடம் பிரதமராக வைக்க தயார் என்று காங்கிரஸ் கூறியும் அதனால் விலை போகாத சுத்தமான் தன்மானம் சீக்கியனுக்குச் சொந்தமானது.

ஆனால் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மறைவிற்குப் பின்பு, 1988-ல் இருந்தே இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயலை இந்திய மத்திய அரசுகள் மிக அதிகமாக காங்கிரஸ் அரசுகள் செய்துதான் வருகின்றன. அதுவும் ஈழப்பிரச்சனையில தமிழினத்திற்கு ஆதரவாகப் பேசிய அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் போட்ட அத்தனை பிள்ளைப் பிடிப்பவர்களும், இதோ காங்கிரஸ் வேட்பாளர்களாக - அந்தக் கூட்டணி வேட்பாளராகப் பவனி வரப்போகிறார்கள்.

பொங்கி எழுந்து - அப்படிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவரையாவது வாபஸ் பெற்றுக்கொள்ளும் நிலைமையை டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படுத்தும் தெம்போ, திராணியோ, இன உணர்வோ தமிழனுக்கு உண்டா? ஓட்டுக்குப் பணம் வாங்கும் மந்தையால் எப்படி முடியும்?
இந்திராகாந்தியைச் சுட்டுக்கொன்ற பியாந்த் சிங் மனைவியை சுயேச்சையாகத் தேர்தலில் நிறுத்தி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தவர்கள் சீக்கியர்கள். மாமியாரைக் கொன்ற அந்த இனத்தைப் பாராட்டிதான் அதற்குப் பரிசாக ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கினார் மருமகள் சோனியா. இதோ இப்போது சிதம்பரம் மீது காலணி வீசியவரை நாடாளுமன்றத்தேர்தலில் வேட்பாளராக ஆக்கத் தீர்மானித்துள்ளனர் சீக்கியர்கள்.

ஆனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசும் எல்லோரையும், அட, தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டாம்...ஜெயிலில் உட்கார வைத்துக் களி திங்க விடாமல் தூங்குவதில்லை என்று கங்கணம் கட்டியதா தமிழினம்?
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த அந்த 1984 கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று தற்போது சி.பி.ஐ.-யால் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பஞ்சாபில் சில் இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றிபெறும். இப்போது அதுக்கூட இல்லை என்கின்றனர். பிரதமர் பதவியைக் கொடுத்தும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்படி பார்த்தால் அதே வகையில் ஈழத்தமிழர்கள் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட 450 ராமேஸ்வரம் மீனவர்கள் விசயங்களில் தமிழனுக்கு நியாயமான சூடு, சுரணை, மானரோசம், கோபம் இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு தொகுதியிலகூட டெபாசிட்டை மீட்கக் கூடாது. ஆனால் பிரதமர் பதவி எல்லாம் தேவையில்லை. சில ஆயிரங்களைப் பிச்சையாகப் போட்டே, தமிழனின் ஓட்டுகளைப் பெற்றுவிட முடியும். எனவேதான் கரன்சி வாசத்தில் "நாற்பதும் நமதே" என்கின்றனர்.

மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கிய இனம் சிங்க இனமாகவே உள்ளது. ஆனால் அரசியல் நயவஞ்சகர்களின் வாய்ச்சவடால்களை நம்பிய தமிழினம் அசிங்க இனமாகி விட்டது.

-நன்றி- 17.04.09 - 23.04.09 அன்று வெளிவந்த வார இதழ் "தமிழக அரசியல்"-ல் திருமொழி எழுதிய கட்டுரை

ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

இம்முறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக என் வாக்கு என்னும் செருப்பால் அந்த கட்சிகளை அடிக்க தயாராகிறேன்.

காங்கிரஸ் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் திமுக? திமுகவை மட்டும் செருப்பால் அடிப்பதேன்? திமுக மட்டும் தான் குற்றவாளியா? கடைசி நாள் வரை காங்கிரசோடு இழைந்துவிட்டு ஓடிப்போன பாமக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மதிமுக இவர்களையெல்லாம் எதால் அடிப்பது?

இயல்பாக எழும் கேள்விகள் தான்! ஏன் திமுக என்றால் தமிழ் பெயரை சொல்லி ஓட்டு வாங்கி தின்றது திமுக தான்

பாமக என்ற கட்சி ஒரு சாதிகட்சியாக வன்னியர் கட்சியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது
அப்படியாக நடந்துகொள்கிறது! அதற்கான விளைவாக வன்னியர் அல்லாத பிற சாதியினர் பெரும்பாலும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை, அதன் நிலைப்பாட்டுக்கான பின் விளைவை அது பெறுகின்றது... அதே போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.

அதிமுக தலைமையின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை. முற்போக்காளர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே உள்ளனர். அதிமுக தலைமையின் நிலைப்பாட்டிற்க்கு அது அதன் பின் விளைவை எதிர்கொள்கிறது.

பாமக, விடுதலை சிறுத்தைகள், அதிமுக என அத்தனை கட்சிகளும் அதன் நிலைப்பாட்டிற்கான பின் விளைவுகளை எதிர்கொள்ளும் போது தமிழ், தமிழர், முற்போக்கு மற்றும் தமிழர் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக தமிழ் இன ஆதரவு நிலைப்பாடு மற்றும் முற்போக்காளர்கள் திமுக ஆதரவு எடுத்திருந்தனர்கள் (கலைஞரின் ரசிக கண்மணிகள், கழக பிரியாணி குஞ்சுகள், கழகத்தின் சார்பில் காண்ட்ராக்ட் பெற்று வாழும் உடன்பிறப்புகளையெல்லாம் இந்த கணக்கில் சேர்க்கவில்லை) இவர்களின் வாக்குகளையும் எவ்வித பலனும் எதிர்பாராமல் இவர்கள் செய்கின்ற திமுக ஆதரவு பிரச்சாரங்களை(சென்ற முறை நானே பல கட்டுரைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திமுக ஆதரவு பேச்சுகளை செய்தேன்) இது நாள் வரை பெற்று வந்த திமுக ஈழத்தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் பாசிச காங்கிரஸ் இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்து அக்கூட்டணியை தாங்கி பிடித்து ஈழத்தமிழ் போராட்டத்தை கொச்சை படுத்திக்கொண்டிருக்கும் திமுகவுக்கு என்ன செய்ய போகிறோம்.

வேறு வழியில்லை இருப்பதில் இவர் பரவாயில்லை என்று மீண்டும் சூரியனுக்கும் கைக்கும் ஓட்டு குத்தி கலைஞர் செய்தவைகளுக்கு அங்கீகாரம் வழங்க போகிறோமா? அல்லது தமிழர்கள் பெயரை சொல்லி வாக்கு வாங்கி தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் தமிழர்களின் உரிமை பறிபோனபோது அதிகாரத்தை மட்டும் சுவைத்து கொண்டிருந்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் அடையாள தோல்வி தந்ததை போல கலைஞருக்கும் திமுக-காங்கிரசுக்கு தோல்வியை தரப்போகிறோமா?

தமிழ் பெயரை சொல்லி ஓட்டுவாங்கி தின்ற திமுக அதே தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது எனில் மோகன் கந்தசாமி பாணியில் சொல்வதென்றால் விபச்சாரியிடம் படுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஓடுவதற்கு சமம்.

பின்குறிப்பு
--------------
வழக்கம்போல இதற்கும் என் சாதி முத்திரையும் பாமக ஆதரவு முத்திரையும் குத்தப்படும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான முத்திரைகள் வாங்கித்தான் இணையத்தில் வளையவருகிறேன். என்ன ஒவ்வொரு முறையும் யாருக்கு ஒவ்வாத கருத்தை சொல்கிறேனோ அவர்கள் குத்துவார்கள்.

எனக்கு ஓகேப்பா சாதி முத்திரை கட்சி முத்திரை குத்துவிங்க, கலைஞரை கிழி கிழியென்று கிழித்த தியாகி முத்துகுமாருக்கு என்ன முத்திரை குத்தப்போறிங்க?

பாரி.அரசு அவரின் ஒரு பதிவில் சொல்லியுள்ளார் கலைஞரை தாக்கும் அளவிற்கு இராமதாசை தாக்காததற்கு இணைய புரட்சியாளர்கள் பலரும் வன்னியர் என்பதனால் என்று, கிட்டத்தட்ட மக்கள் தொகையில் 20% வன்னியர் சாதி(உள்ளதாக சொல்லப்படும்) என்பதால் கொலைகாரன்களில் 20% மொள்ளமாறிகளில் 20% குடிகாரன்களில் 20%(குடிகாரன்களில் இதற்கும் மேலாக இருக்கும்) இருப்பதை போல இணைய புரட்சியாளர்களில் 20% இராமதாஸ் வாங்கி கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்து இணையத்தை நோண்டுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருத்துவர் இராமதாசை தாக்கி இந்த விசயத்தில் நான் எழுதிய கட்டுரைகள்

கலைஞர், மக்கள் தொலைகாட்சி உரிமையாளர்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

கலைஞரின் ரசிக குஞ்சாக, கழக பிரியாணி குஞ்சாக, காண்ட்ராக்ட் பெற்று வயிறு வளர்க்கும் உடன்பிறப்பாக இல்லாமல் கலைஞரையும் திமுகவையும் தமிழுக்காக, தமிழ் இனத்திற்க்காக ஆதரிப்பவர்களே ஒரு நிமிடம் யோசியுங்கள் தமிழினத்தை கை கழுவிய திமுகவை என்ன செய்ய போகிறீர்கள் இந்த தேர்தலில்?

தமிழன் என்று எவனாவது ஓட்டு கேட்டால் செருப்பால் அடியுங்கள்

மனசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் ரசிக மனோபாவத்துக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...

ஒருத்தர் முதல்வர் பதவிக்காக, ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால் இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை.

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசியாக, தலித் புதியதமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழக தமிழனை கூட்டி கொடுப்பார்கள் என்பதால் தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்

சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?

கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம் மட்டுமே.

முற்போக்காளர்கள்/பெண்ணியவாதிகள் கற்பழிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும், இன்றைய ஆணாதிக்க சூழலில் வன்புணர்வு என்ற வார்த்தை கண் முன் நிறுத்தும் கொடூரத்தைவிட கற்பழிப்பு என்ற வார்த்தை அந்த நிகழ்வை விளக்குவது அதிகம். எனவே தான் கொடூரத்தை விளக்க வேண்டிய இடத்தில் இந்த வார்த்தையை போட வேண்டியுள்ளது.

ஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.

ஆணாதிக்க சமுதாயத்தில் மண்ணின் மீதான ஆதிக்கத்தையும் அதன் குறியீடாக பெண்ணையும் பாதுகாப்பதே பெரும் கடமையாக உள்ளது, அதற்காக பல மாதிரியான உத்திகளை கடைபிடிப்பார்கள், ஆதிக்கத்தின் குறியீடாக பெண்ணை கவருவது அமைவதால் எதிரி மண்னை பிடித்துவிட்டால் ராஜபுத்திர பெண்கள் கூட்டமாக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளுதல் என இருந்தது இதன் மூலம் பெண்ணை தொடும் உட்ச பட்ச அதிகாரத்தை எதிரியின் ஆளுமையை அவர்கள் அழிக்கிறார்கள்.

"பாப்பத்தியோடு படுத்தால் பாவம்" என்று வாய்வழியாக தலைமுறையாக பரப்பப்பட்டிருக்கும் கருத்தாக்கத்தை கேள்விப்படிராதவர்கள் அரிது, இதுவும் கூட பார்ப்பன பெண்களை எவ்விதமாகவும் பிற சாதியினர் தொடக்கூடாது அதன் மூலம் பார்ப்பனர்கள் மீதான மற்றவர்கள் ஆதிக்கம் செய்யாமலிக்கும் குறியீடு பாதுகாக்கப்படுகிறது. இதெல்லாமே தம் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பெண்களை பாதுகாப்பதன் மூலமான குறியீடாக வைத்துள்ளார்கள். கற்பழிப்பு என்றல்ல காதல் மூலமாகவும் பெண்களை வேறு சாதி/இனம்/மதம்/மொழி ஆட்கள் தொடுவதை தம் மீதான ஆக்கிரமிப்பாகவும் அதிகாரமாகவும் பார்ப்பதால் நடைபெறுவதே "ஹானர்" கொலைகள்.

அந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்சேவால் தமிழ் ஆண்களை வெட்டி கடலில் போடுங்கள் பெண்களை உங்களுக்கு விருந்தாக்கிக்கொள்ளுங்கள் என சொன்னான்.

ஒரு சிங்க கூட்டத்தின் (வயதான)தலைவனை இன்னொரு (இளம்)சிங்கம் தலைமை பொறுப்பிற்காக சண்டையிட்டு அடித்து வீழ்த்தினால் முதலில் வெற்றிபெற்ற சிங்கம் செய்வது அந்த பழைய தலைவனின் மனைவிகளான கிழ பெண் சிங்கங்களை வரிசையாக உட்காரவைத்து புணருகிறேன் என இரண்டு குத்து குத்திவிட்டு போகும், அதன் பின்னே தனக்கான புதிய இளம் பெண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கும். கிழசிங்கங்களை பின்னால் குத்தியது புணர்ச்சிக்காக அல்ல, தன்னுடைய ஆளுமையை, தன் உட்சபட்ச அதிகாரத்தை தெரிவிக்கவே இப்படி செய்தது.

எந்த ஒரு பிரச்சினையென்றாலும் பெண்கள் கற்பழிக்கப்படுவது இதனால் தான், காவிரி பிரச்சினையில் தமிழ் ஆண்களை கொலை செய்தும் போதாதென்று கன்னட வெறியர்களால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுவும் இங்கே கன்னடர்களான நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம், உச்சநீதிமன்றத்தின் ஆதிக்கம் இங்கே இல்லை என நிரூபிக்க செய்யப்பட்டது. முசல்மான்களின் குறிகளை வெட்டுவோம் பீவிகளின் இறுகிய யோனிகளை பிளப்போம் என்றெல்லாம் கோஷமெழுப்பி குஜராத் இந்து மதவெறியர்கள் செய்தது காமத்துக்காக மட்டுமல்ல, தங்களின் அதிகாரத்தின் குறியீடாகவும் முஸ்லீம்களின் மீதாக அதிகபட்ச ஒடுக்குமுறையாலுமே நடந்தன அந்த கற்பழிப்புகள்

இந்திய அமைதி(?)படை ஈழத்தில் வயதான தமிழ்பெண்களை கற்பழித்ததும் இங்கே நாங்கள் தான் உட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என சொலவதற்கே. சிங்கள இராணுவ கூலிபடையினர் தமிழர்களின் மீதான தம் அதிகாரத்தை காண்பிக்கவே போரிட்டு இறந்த பெண் புலிகளின் உடல்களை நிர்வாண படுத்தி அதை படம் எடுத்து ரசித்ததும், தமிழ்பெண்களின் மீதான கற்பழிப்பை நடத்துவதும்.

திருடர்கள் கற்பழிப்பதும் இப்படியான ஒன்றே, ஆளில்லாத நாளில் கன்னம் வைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து போவது ஒருவகை...அவர்கள் பொருளை மட்டுமே திருடுகிறார்கள், ஆனால் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கணவன்,மகனை அடித்து கட்டி வைத்து பின் மனைவி மற்றும் மகளை கற்பழித்ததுவும் மிகவும் கொடூரமானது, அதற்க்கு காமம் மட்டும் தான் காரணமென்றால் அந்த வீட்டில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வேறு எங்காவது அந்த காமத்தை அவர்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் அன்றைய இரவில் அந்த வீட்டின் உட்சபட்ச ஆளுமையையும் அதிகாரத்தையும் அந்த கொள்ளையர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அந்த வீட்டினரின் மீதான ஒடுக்குமுறையை பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலம் மட்டுமின்றி கற்பழிப்பின் ஊடாகவும் நடத்தினார்கள்.

வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை கற்பழிக்கும் இந்தியர்களுக்கும் இதே மாதிரியான காரணம் தான்...

கற்பழிப்பு என்பது உட்சபட்ச ஒடுக்கு முறையின் கொடூரமான சாட்சி, ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்தால் அந்த இடத்தில் உட்ச பட்ச ஒடுக்குமுறை நடக்கிறது என்று அர்த்தம், அது தவிர வேறு எந்த வியாக்கியானமும் சாட்சியும் அங்கு நடைபெறும் உட்ச பட்ச ஒடுக்குமுறையை அறிவிக்க தேவையேயில்லை.


அ.மார்க்ஸ் இன் அரைலூசு பேட்டி என்ற என் முந்தைய பதிவில் "மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே! என்று கேட்டிருந்தார்... சுகுணா திவாகர்.

சுகுணா திவாகருக்கும் அதற்கு ஆமாம் போட்ட சஞ்சய்க்கும் சிங்கள-தமிழ் இன முரண்களுக்கும் தமிழ்-தமிழ் பிரதேச முரண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அரை லூசுத்தனமாக உளறும் அ.மார்க்ஸ்க்கும் இக்கட்டுரை சில பதில்களை சொல்லியிருக்கலாம்.

வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூசு பேட்டியும் சில எதிர்வினைகளும்

புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் என்று கீற்றில் வெளியான "புதிய புத்தகம் பேசுது" இதழில் ஒரு செவ்வி வழங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

பேட்டி முழுக்க தம் இலக்கிய சகா "ஷோபா சக்தி"யை போல முழுக்க பேசியிருப்பது புலிகளின் மீதான விமரசனங்கள் மட்டுமே, காங்கிரஸ்காரர்களும் புலி எதிர்ப்பாளர்களும், திடீரென ஞானோதயம் பெற்ற திருவாளர் மு.கருணாநிதி யும் அவரவர்கள் பாணியில் செய்யும் புலியெதிர்ப்பு என்பதன் ஊடக தமிழர் போராட்டங்களை சிறுமைபடுத்தும் வேலையை இங்கே அ.மார்க்ஸ் தம் அறிவுஜீவி பாணியில் செய்திருக்கிறார்.

வித்தியாசங்களின் அரசியல் பேசியவர் அ.மார்க்ஸ், இன்னமும் கேட்டால் அ.மார்க்ஸ் என்னை கவர்ந்த இடம் அவரின் "வித்தியாசங்களின் அரசியல்" பற்றிய எழுத்துகளுக்கு பின் தான்.... ஆனால் அந்த வித்தியாசங்களின் அரசியலை வக்கனையாக பேசிவிட்டு, தமிழ் - சிங்கள இன வித்தியாசம், தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையான முரண்பாடுகள், சிங்கள இனம் தமிழினத்தின் மீதான அழிப்பு என கடும் முரண்களோடு இருக்கும் தமிழ்-சிங்கள இன முரண்பாடும், கிழக்கு-வடக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கிடையேயான வேறுபாடுகள், யாழ்மேலாதிக்கம் பற்றி பேசுதல் என்பதும் ஒன்றா? நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே? கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ? மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா? Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது? எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ்? இரண்டும் சமமென சொன்னால் பிறகென்ன வித்தியாச அரசியல்?

அதிலும் குறிப்பாக "வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை." என்று கூறும் அ.மார்க்ஸ் குறைந்த பட்சம் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக இல்லை, இருந்தும் ஏன் இன்னும் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேற்றப்பட வைக்கப்படவில்லை? அதன் பின்னுள்ள அரசியல் என்ன? என்ற கேள்வி எழவில்லையா இந்த அறிவுஜீவி அ.மார்க்ஸ்க்கு

அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?

அடுத்ததாக கம்யூனிச இயக்கங்களுக்கு தன் ஜால்ராவை ஓங்கி ஒலிக்க தட்டும் போது "இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே." என்று சொல்லும் அ.மார்க்ஸ்க்கு சிரீதுங்க ஜெயசூர்யாவை ஞாபகம் வைத்தும் சொல்லும் அ.மார்க்ஸ்க்கு இடதுசாரி ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான அகோர கொலைவெறி எதிர்ப்பை மறந்துவிட்டாரோ...

மறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது "ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி "ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே? அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...

சந்தடி சாக்கில் தமிழ் தேசிய கருட்துடையவர்களை பார்ப்பன ஆதரவாளர்கள் போன்ற தொரு தோற்றம் தரவைக்கும் முயற்சி, "திராவிட" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது.


முற்போக்கு கருத்துகள், சிந்தனைகள் என்பவைகள் எல்லாம் இவர்களுக்கு இடத்துக்கு இடம் மாறும் போல....

ஈழம் இன்னும் எத்தனை பேரின் முகமூடியையும் முற்போக்கு வேசங்களையும் கலைக்கப்போகிறதோ தெரியலையே!!!

வன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு

வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

முதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்

'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்


-- அடேடே தேர்தல் வந்துருச்சா?

சாருநிவேதிதாவின் ஓX மாறித்தனம்

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தலைப்பில் உள்ள X க்கு பதில் அந்த தமிழ்வார்த்தையை போட்டிருக்க வேண்டும், சாரு நிவேதிதா ரேஞ்சிற்கே இந்த அளவுக்கு தலைப்பு வைக்கலைன்னாலும் சரியா இருக்குமா என்ன?

சாரு இலங்கை பிரச்சினை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்து வந்தார்... ஒரு கடிதம் எழுதினேன்... இதே போல நிறைய பேர் எழுதியிருக்கிறார்களாம்...அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என ஒரு கட்டுரை எழுதியுள்ளார்... அதில் சைலண்ட்டாக ஒரு குசும்பு வேலை செய்துள்ளார்...

தினமலரில் கருணாவின் பேட்டியை வெளியிட்டார்கள். உடனே தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப் பட்டது. ஆக, என்னுடைய நேர்மையை கவிதா போன்ற நல்லிதயங்களுக்கு நிரூபிப்பதற்காக என் உயிரை விட வேண்டுமா?

எனக்கு தெரிந்து இந்த மாதிரியான சம்பவம் நடக்கவில்லை, மேலும் பல நண்பர்களிடம் விசாரித்த போதும் அவர்களுக்கும் தெரியவில்லை, அப்படியே நடந்திருந்தாலும் என்ன சொல்ல நினைக்கிறார் சாரு? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இவர் எழுதினால் இவர் மேல் குண்டு வீசிவிடுவார்கள் என்றா? கக்கா போய்விடுவார்கள் என்றா? இதன் மூலம் போராளி எழுத்தாளர் சாரு கொடுக்கும் மெசேஜ் என்ன? இது ஒரு பச்சை அய்யோக்கியத்தனம்,

விமர்சித்து எழுதினால் கொன்று விடுவார்கள் என்று ஒரு இமேஜை உருவாக்க நினைக்கும் காவாலித்தனம். இது புலி புலி என்று பூச்சாண்டி காட்டும் ஓழ் மாறித்தனம்(சாருவை கலாய்க்கும்போது சாரு ரேஞ்சுக்கு இருக்க வேண்டாமா?).... சுப்புரமணியசாமியும், சோவும், தினமலரும் இன்னபிறவும் உயிரோடு தான் இருக்கிறார்கள்

புலி பிலி என்று பேசிக்கொண்டு மவுனமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு இன அழிப்பிற்கு வக்காலத்து வாங்கும் பொறம்போக்குத்தனம் இது.

புலியை விமர்சி அல்லது விமர்சிக்காமல் போகுமய்யா... ஆனால் இன அழிப்பில் செத்துக்கொண்டிருக்கும் மக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க இதெல்லாம் காரணமென்று சொல்லிக்கொண்டு இருப்பதை பார்த்தால் இனியும் நீங்கள் எங்கேயாவது மனித உரிமை, புரட்சி புண்ணாக்கு, அதிகார ஆமனக்கு, கருத்து சொதந்திரம் மண்ணாங்கட்டி என்று பேசினால் வாயால் அல்ல வாயு பிரியுமிடத்தால் தான் சிரிக்க வேண்டியிருக்கும்...

பின்குறிப்பு:
எந்த தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது என்று தெரியவில்லை ஒரு வேலை இலங்கையிலோ? பல நண்பர்களிடமும் விசாரித்து விட்டேன், கூகிளில் தேடோ தேடென்று தேடிவிட்டேன், மீடியா நண்பர்களிடமும் விசாரித்தேன், கருணா பேட்டியை வெளியிட்டதற்காக தினமலர் அலுவலகத்தில் குண்டுவீசியதாக செய்தி எதுவும் இல்லை, ஆனால் சாரு உறுதியாக சொல்கிறார்,ஒரு வேளை இது உண்மையென்றால் நேரமெடுத்து உறுதி செய்துகொள்ளாத இதற்காக மட்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மற்றபடி சாரு பற்றி பதிவின் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை....

இன்னுமொரு பின்குறிப்பு
சாரு எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றால் இதுவரை சாரு எழுதி தீர்ந்த பிரச்சினை என்ன? தீரவில்லையென்றால் பின் ஏன் எழுதினார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலே இதற்கும்

சாருவுக்கு ஒரு கடிதம் - எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும்

வணக்கம் சாரு,
ஒரு சாதாரண எழுத்தாளனை இதை எழுது இதை எழுதாதே என சொல்ல எவனுக்கும் உரிமையில்லை, ஆனால் ஒரு போராளி எழுத்தாளன், அதிகாரத்துக்கு எதிரான குரல் கொடுப்பவன், முற்போக்கு எழுத்தாளன் எனப்படுபவன் எதையெல்லாம் எழுதுகிறான் என்பது மட்டுமல்ல எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும் அதன் பின்னனி அரசியலும் முக்கியமானது மட்டுமல்ல அவைகளும் சேர்ந்தேதான் அந்த எழுத்தாளனின் அதிகாரத்துவத்துக்கு எதிரான குரல், போராளி எழுத்தாளன் என்பவற்றின் உண்மை தன்மையை நிரூப்பிப்பவைகள்...

பின்குறிப்பு:
-----------
நீங்கள் ஈழத்தமிழர் படுகொலை குறித்தும் பற்றி எரியும் அப் பிரச்சினை பற்றியும் எழுதவில்லை

தமிழக அரசின் நியமன பதவியை தூக்கியெறிந்த பாவலர் அறிவுமதி


காசு பணத்திற்காகவும், புகழ் பதவிக்கும் ஆசைப்படாத அது கிடைத்தாலும் கொள்கைக்காக அதை தூக்கி எறிவது மிகச்சிலர் தான்...

கொள்கையில் தொழில் செய்து கொண்டிருக்கும் காலத்தில் தொழிலில் கொள்கையை கடைபிடிப்பவர் பாவலர் அறிவுமதி , இவர் மட்டும் திரைத்துறையில் கொள்கை அட்ஜெஸ்ட் செய்திருந்தால் எத்தனையோ பணம் சம்பாதித்திருப்பார், ஆனால் கொள்கைக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டில்லை...

போராளி எழுத்தாள புடுங்கிகளும், அதிகாரத்துவத்துக்கெதிரான எழுத்தாளன் என்னும் புடுங்கிகளும் ஈழப்படுகொலை விசயத்தில் கள்ள மவுனம் சாதிக்கின்ற முற்போக்கு எழுத்தாள புடுங்கிகள் இருக்கும் நாளில் ஒரு கௌரவ பதவியை தூக்கியெறிந்திருக்கிறார் பாவலர் அறிவுமதி

ஜூவி செய்தியில் வெளியான தகவல் சமீபத்தில் திரைப்பட விருதுகளைத் தேர்வுசெய்யும் குழுவில் பாவலர் அறிவுமதியை உறுப்பினராக நியமித்திருந்தது தமிழக அரசு. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்த அறிவுமதி, தன் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிவிட்டார். கடிதம் மட்டுமல்ல... ஈழப் பிரச்னையில் தி.மு.க-வின் துரோகத்தைக் கண்டித்து ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதிவருகிறாராம் அறிவுமதி. 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் 'கிளஸ்டர்' குண்டுகளாக தி.மு.க-வைத் தாக்கும்' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இதே ரீதியில், இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து வந்த தமிழக காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான தமிழருவி மணியன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அத்தனை பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார்

அறிவுமதி அண்ணா உன் தம்பிகளில் ஒருவனாக இருக்க பெருமைப்படுகிறேன்..

மீடியா மாஃபியா

முத்துகுமார் செய்திகள் இருட்டடிப்பு




















முத்துகுமார் செய்திகள் இருட்டடிப்பு







கலைஞரை கும்மாமல் ஹர்பஜன்சிங்கையா கும்முவது?

ஈழப்பிரச்சினையில் அனேகமாக கலைஞர் ஜூரம் பல உடன்பிறப்புகளுக்கு தனிந்துவிட்டாலும் கலைஞரை கும்முவது தவறு என்றோ அல்லது இன்னமும் மற்றவர்களை கைகாட்டி அவர்களை கலைஞரை கும்மும் அளவுக்கு கும்மாமல் கலைஞரை மட்டும் இப்படி கும்முவது ஏனென்ற மிகக்கடுமையான கவலை வெகு சில உடன்பிறப்புகளை வாட்டோ வாட்டென்று வாட்டுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் அல்லது ஒவ்வொரு முதன்மையான கொள்கை அல்லது கடமை இருப்பதாக அடையாளப்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஒரு கட்சியோ தலைமையோ அந்த அடையாளத்திலிருந்து விலகும் போது மற்றவர்களும் அதையே செய்திருந்தாலும் மற்றவர்களை விட இவர்களே மிகக்கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள்.

கம்யூனிஸ்ட்கள் முதன்மை கொள்கையாக கொள்வதும் அவர்களின் அடையாளமும் தொழிலாளர் முன்னேற்றமும் பாட்டாளி வர்கத்தினை வளமை படுத்துவதும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், குஜராத் எங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்து விளைநிலங்களை முதலாளிகளுக்காக தாரை வார்த்த போது பாஜக விமர்சிக்கப்பட்டதை விட நந்திகிராமில் கம்யூனிஸ்ட்கள் முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்கியபோது கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்கப்பட்டது மிக மிக அதிகம், ஏனென்றால் பாஜக பாட்டாளி நலம் என்று சொல்லி ஆட்சியை பிடிக்கவில்லை, பாஜகவின் கொள்கையும் அதுவல்ல, ஆனால் கம்யூனிஸ்ட்கள் பாட்டாளிகள் நலமென்றும், விவசாயிகள் நலமென்றும் சொல்லி அதனால் ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள். இப்படிபட்ட நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் தொண்டர் வந்து பாஜகவை கும்மாமல் கம்யூனிஸ்ட்களை கும்முகிறார்களே என்று வருத்தப்பட்டால் காமெடியாக இருக்குமா? இருக்காதா?

டெண்டுல்கர் ரன் குவிப்பதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், ஹர்பஜன் சிங் பந்து வீசவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், டெண்டுல்கர் சரியாக ரன் குவிக்கவில்லை அதனால் அவரை அணியை விட்டு தூக்குங்கள் என்றால் ஹர்பஜன் கூட தான் பேட்டிங் செய்தார் அவரும் தான் ரன் அடிக்கவில்லை அவரை அணியில் வைத்துக்கொண்டு டெண்டுல்கரை தூக்க சொல்றாங்களே என்று டெண்டுல்கர் ரசிகர்கள் கதறினால் எப்படியிருக்கும்?

அப்படித்தான் தமிழர்களுக்காக என்றும் தமிழுக்காக என்றும் தமிழின உணர்வையும் முன்னிறுத்தி அரசியல் செய்த கருணாநிதி இனஅழிப்பில் இருக்கும் ஈழத்தமிழருக்காக தம்மால் முடிந்த விசயங்களை கூட செய்யாமல் பதவிக்காக மூடிக்கொண்டு இருக்கும் போது தமிழுக்காவும், தமிழ் உணர்வுக்காகவும் மற்றவர்களை எல்லாம் விட கருணாநிதியை ஆதரித்தவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் விட கருணாநிதியை அதிகமாக கும்மு கும்மென்று கும்மத்தான் செய்வார்கள் உடன்பிறப்பே!

சரி இவ்வளவு நாள் தமிழுக்காக கருணாநிதியை பாராட்டாதவர்களும் ஆதரிக்காதவர்களும் கும்முகிறார்களே என்றால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு , கருணாநிதியின் தமிழ் பற்றை பாராட்டியவர்கள் தான் கருணாநிதியை கும்மலாமென்றால் திக காரர்கள் இந்து மதத்தின் அருமை பெருமைகளை பாராட்டியிருந்தால் தான் இந்து மதத்தை விமர்சிக்கலாமென்பதோ, ஜெயலலிதாவின் துணிச்சலான(?) நடவடிக்கைகளை பாராட்டியவர்கள் மட்டும் தான் ஜெயலலிதாவின் அகங்கார அராஜகத்தை விமர்சிக்கலாம் என்று சொல்வதற்கு இணையானது, இது கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அந்த வாய்ப்பை அவர்களுக்கு அள்ளி வழங்கியது திருவாளர் மு.கருணாநிதியே...

வைகோவை ஏனய்யா கும்ம மாட்டேங்கிறார்கள் என்றால் "வர்றார் சண்டியர்" என்று நெப்போலியன் படத்திற்கு வைத்த பெயர் பிரச்சினை ஆகவில்லை ஆனால் "சண்டியர்" என்று கமல் பெயர் வைத்த போது பிரச்சினையானது, மேலும் வைகோ தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார் என்பது மட்டுமல்ல அவருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவ்வளவு தான் செய்ய முடியும்.

பாமக இராமதாசை ஏன் கம்மியாக கும்முகிறார்கள் என்றால் நீயே சொல் உடன்பிறப்பே திமுகவையும் பாமகவையும் ஒரே தட்டில் வைத்தா பார்த்தாய்? நீ மட்டுமல்ல பெரும்பாலானோர் அப்படித்தான் என்பதால் அவருக்கு கொஞ்சம் கும்முதல் லைட்டா தான் இருக்கும். அது கூட அவர்கள் போடும் இரட்டை வேடத்தினால் தான்.

ஜெயலலிதாவை ஏன் கும்மவில்லை என்றால் ஜெயலலிதாவின் அரசியலே வேறு, ஜெயலலிதாவின் தமிழ் ஆதரவற்ற அல்லது எதிர்ப்பு அரசியலுக்காகத்தான் தமிழ் உணர்வாளர்கள் ஜெயலலிதாவை விட்டுவிட்டு கருணாநிதியை ஆதரிக்கிறார்கள்.

உடன்பிறப்பே, தமிழை வைத்து அரசியல் செய்து தமிழுக்காகவே ஆதரிக்கப்பட்ட கருணாநிதி தமிழருக்கு பாதகம் செய்தால் மற்ற எல்லோரையும் விட அவர் ஆதரிக்கப்பட்ட தமிழரசியலுக்காகவே அதிகமாக கும்மப்படுவார்....

சரியாக ரன் குவிக்காததற்கு டெண்டுல்கர் தான் கும்மப்படுவார், பவுலர் ஹர்பஜன்சிங் அல்ல...

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முழு அடைப்பு நடைபெறவிருக்கிறது, இந்த அமைப்பின் முக்கிய கட்சியாக பங்கேற்றுள்ளது பாமக, ஆனால் இங்கு மட்டுமல்ல இனவாத சிங்கள அரசிற்கு தமிழர்களை அழிக்க ஆயுத உதவி, ரேடார், பீரங்கி டாங்கி அனுப்புதல் என்று மட்டுமல்லாமல் ஆள் உதவியும் செய்து கொண்டிருக்கும் மத்திய அரசிலும் பங்காளியாக உள்ளது.

பாமக தம்மை வெறும் சாதிக்கட்சியாக மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டிருந்தால் யாரும் கேள்விகேட்க போவதில்லை, ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக ஈழத்தமிழர்களை அழிக்கும் மத்திய அரசிற்கு பங்காளியாக முட்டுக்கொடுத்துக் கொண்டே இங்கே ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கெடுப்பது மிக கடுமையான முரணாக உள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை, நீக்குபோக்கான நிலைப்பாடும், அதிகாரத்திற்கான சமரசங்கள் தேவை, ஆனால் எதை எதற்காக சமரசம் செய்கிறோம் என்பது மிக முக்கியமானது, தமிழர் அழிவை தடுப்பதை தாண்டி வேறென்ன காரணத்துக்காக சமரசம் செய்து கொண்டுள்ளார்கள் தற்போது அமைச்சரவையில் தொடர்வதற்கு.

நாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா? என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.

முந்தைய காலங்களில் சட்டமன்றத்திலேயே ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மாணத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியிருக்கலாம், கடந்த கால கதைகளை சொல்வதை விட தற்போது மத்திய அரசிலிருந்து விலகாமல் பாமக ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேச பாமகவிற்கு எந்த அருகதையுமில்லை.

கலைஞரின் தமிழ்துரோக அரசியலை சுட்டிக்காட்டும் விரல்கள் பாமகவையும் சுட்டி காட்டும் என்பதும் உறுதி.

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழ் பாதுகாப்பு இயக்கம் முழு அடைப்பு போராட்டம் நடத்தும் முன் பாமக மத்திய அரசிலிருந்து வெளியேறினால் மட்டுமே பாமகவிற்கு தார்மீக உரிமையுள்ளது, இல்லையென்றால் எத்தனையோ பேர் தமிழன் தலையில் அரைத்த மிளகாய் கணக்கில் பாமகவும் சேர்ந்து கொள்ளட்டும்.

உதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண அரசியல்


முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது, இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது, சொன்னது வேறு யாருமில்லை அன்று உதயகுமார் பிணத்தின் மீதும், ஜெயலலிதா ஆட்கள் கொளுத்திய மூன்று மாணவிகளின் பிணத்தின் மீது இடைத்தேர்தலுக்காகவும், மதுரையில் அஞ்சாநெஞ்சன் அனுப்பிய ரவுடிகள் கொளுத்திய மூன்று ஊழியர்கள் பிணத்தையும் வைத்து அரசியல் நடத்திய அதே தமிழின தலைவர் கருணாநிதி தான் சொல்கிறார் முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாதாம்...

முத்துக்குமார் இறுதி மரியாதை செலுத்துமிடத்தில் நேற்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் பாபுவுக்கு கிடைத்த கவனிப்பு அப்படியல்லவா இருந்தது, அதான் தலைவர் பொங்கி எழுந்து பண்பாடு பற்றியெல்லாம் கிளாஸ் எடுக்கிறார்.

மற்றவைகள் எல்லாம் விவரமாக தெரிந்திருக்கும் அதென்ன உதயகுமார் மரணம் என்று தெரியாதவர்களுக்கு இன்னமும் கடலூர் மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செய்தியாக சொல்லப்படும் மூன்று கொலைகள், முதல் கொலை சிதம்பரத்தில் நெருப்பில் புகுந்து கடவுளோடு சேர்ந்த நந்தனார் என்ற கதைகளை ஒரு வரியில் உடைத்து சொல்லுவார்கள் தீட்சிதர பசங்க நந்தனாரை எரிச்சிட்டு நெருப்புல போயிட்டாருன்னு கதை உடுறானுங்க... இரண்டாவது கொலை வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஜோதியில் ஐக்கியமானார் என்பதை, பாப்பார பசங்களோட அடியாளுங்க அடிச்சி கொண்ணுட்டானுங்க வள்ளலாரை என்பார்கள், மூன்றாவது கொலை தான் உதயகுமார், கலைஞரின் வீரபிரதாபங்களில் கட்சி வித்தியாசமின்றி கடலூர் மாவட்டத்தில் சொல்லும் ஒரு விசயம் கலைஞருக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடிய மாணவர்களில் அடித்துக் கொள்ளப்பட்டவர் உதயகுமார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமாரின் பெற்றோர்களிடம் உதயகுமார் தன் மகன் அல்ல என்று எழுதி வாங்கப்பட்டது தான் இதில் உச்சகட்ட கொடுமை.

இன்றைய காலத்தில் உள்ளது போல உடனடி செய்திகள் தொலைக்காட்சி, இணையமென இல்லாமல் உதயகுமார் காலத்தை போல முதல்நாள் நடக்கும் நிகழ்வுகள் மறுநாள் செய்தி தாளில் தான் காண முடியுமென்றால் அதிகார பலம் முத்துக்குமார் தீக்குளிப்பை காதல் தோல்வியால் எடுத்த முடிவென்றல்லவா இருட்டடிப்பு செய்திருப்பார்கள்.

இதே கலைஞர் எதிர்கட்சியக இருந்திருந்தாலோ கலைஞர் புறங்கையை நக்கியவர் என முத்துக்குமாரால் விமர்சிக்கப்படாமலிருந்திருந்தாலோ முத்துகுமார் பிணத்தை வைத்து என்ன அரசியல் செய்திருப்பார் என நிச்சயம் யோசிக்க முடிகிறது.

தன் பிணத்தை கைப்பற்றி துருப்பு சீட்டாக வைத்து போராடுங்கள் என்றார் முத்துக்குமார், இப்படியாக பிணங்களின் மீது அரசியல் செய்த தமிழின தலைவர் தான் சொல்கிறார்
பிணத்தின் மீது அரசியல் செய்யக்கூடாது என்றும் பண்பாடு என்றும்.


உடன்பிறப்புகளே நீங்க திமுக கட்சி பொறுப்பில் இருக்கின்றீரா? கவுன்சிலராகவோ அதற்கு மேலும் பதவி வகிக்கின்றீர்களா? உங்களின் இருப்பை புரிந்து கொள்ள முடிகிறது, கலைஞரின் அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு கட்டிட காண்ட்ராக்டோ கக்கூஸ் காண்ட்ராக்ட்டோ எடுக்க முடியாமல் உங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமென்பதால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

இவையெதுவும் இல்லாமல் இருக்கும் கலைஞரின் ரசிக கண்மணிகளே, கலைஞர் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும், கலைஞரை எதிர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லது பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி அல்லது ஏதோ ஒரு இயக்க முத்திரை அல்லது அனுதாபி அல்லது ஏதேனும் ஒரு சாதி முத்திரை என மூடிய மனதுடன் திரைப்பட ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இணையாக இருக்கும் கலைஞர் ரசிகர்களே, தமிழின தலைவரை நார் நாராக கிழித்திருக்கும் முத்துக்குமாருக்கு எந்த சாதி முத்திரை, எந்த இயக்க முத்திரை தரப்போகின்றீர்கள்?

கலைஞரின் ரசிகர்களே திறந்த மனதுடன் யோசியுங்கள், தமிழர்களுக்கான அரசியல் என்ற ஒற்றை காரணத்திற்காக மனசாட்சியை மூடி எத்தனை விசயங்களில் கலைஞரை ஆதரித்திருப்போம், ஆனால் அந்த தமிழர்களுக்கான அரசியலே இல்லாமல் இருக்கும் போது எதற்காக ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதாவின் எதிர் அரசியல் என்ற சப்பைகட்டு காரணம் சொல்லாதீர்கள், முழுக்க தேநீர்
நிரம்பியிருக்கும் கோப்பையில் வேறு எவ்வளவு ஊற்றினாலும் கீழே வடியத்தான் செய்யும், அது போல கலைஞர் உங்கள் மனதில் நிரம்பியிருக்கும் வரை வேறு மாற்றுகளை சிந்திக்க கூட செய்யாது உங்கள் மனம், கொஞ்சம் உங்கள் மனதை காலி செய்துவிட்டு சிந்தியுங்கள், கலைஞர் என்ற இந்த துரு பிடித்த போர் வாள் இன்னமும் உங்களுக்கு தேவையா என்று?

முத்துக்குமாரின் மரண சாசனத்தை இங்கே படிக்கலாம்

ஈழத்தமிழர் பிரச்சினை மீண்டும் ஒரு தீக்குளிப்பு

‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு. என்ற செய்தியை தொடர்ந்து சென்னைக்கு தொடர்பு கொண்ட விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த ரவி என்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர் தீக்குளித்தது உண்மையென்றும் இவர் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

ஒரு முத்துகுமார் போதும், வேண்டாமே மீண்டும் மீண்டும் இந்த தீக்குளிப்புகள், மிகுந்த துயரத்தை தருகின்றது. முத்துகுமார் தந்த துயரமே தாங்கவில்லை இப்போது ரவியுமா?

தலைவர்களும் தொண்டர்களும் வெவரமாத்தானே இருக்கானுங்க முத்துகுமரா


முத்துக்குமரா போயும் போயும் இந்த ஈன தமிழினத்துக்காக உயிர்விட்டாயே, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தெளிவில்லாமல் லூசுத்தனமாக எரித்துக்கொண்டாய் என்று திட்டிக்கொண்டே தான் உன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன், பாதி படிக்கையிலேயே தெரிந்து போனது நீ தெளிவில்லாமல் எரித்துக்கொள்ளவில்லை, அரசியல், சமூகம் உலக வரலாறு என அத்தனையும் தெரிந்தே இருந்திருக்கிறாய் என்று.

தலைவன் கேட்கிறான் நான் ஆட்சி இழந்தால் நாளையே தமிழீழம் கிடைத்துவிடுமா என்று, தொண்டன் கேட்கிறான் நான் பதிவு போட்டா நாளைக்கே தமிழீழம் கிடைக்குமா என்று, நாளையே தமிழீழம் கிடைக்குமென்றால் நான் கத்திக்கொண்டே இருக்க தயார் என்கிறான், இப்படிபட்ட வெவரமான தலைவனும் அந்த தலைவனுக்கேற்ற வெவரமான தொண்டனும் வாழ்கிற நாட்டில் உனக்கு மட்டும் ஏனடா இப்படி கேட்க தோன்றவில்லை, இந்த தலைவனும் தொண்டனும் நாளை கேட்பார்கள் நீ செத்து போனதால் தமிழீழம் கிடைத்துவிட்டதா என்று?

மத்தியில் ஆட்சியின் பங்களியாக இருந்து கொண்டே எல்லா கேபினேட் முடிவுகளுக்கும் தலையாட்டி கொண்டு இங்கே வந்து அறிக்கையில் சத்தத்தையும் பேட்டிகளில் உணர்ச்சி கூச்சல் போடும் தலைவர்கள் தான் தமிழை பாதுகாக்க போகிறாராம் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காண்பிக்கும் தமிழ் பாதுகாவலர். எவ்வளவு வெவரமா இருக்காங்க பாருடா முத்துகுமரா.

எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம். உன்னை ஓரிருநாளில் புதைச்சிருவாங்க, அப்புறம் அடுத்த வருசம் எவனாவது நினைவு வைத்திருந்தால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தோட ஒரு நினைவு அஞ்சலி வரும், அதுக்கு பின் அதுவும் நின்னு போயிரும்....

ஆனால் உன்னை போன்ற உணர்வாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் தானடா, உன்னை போன்ற உணர்வோடு ஆழ்ந்த அறிவும் எழுத்தாளுமையும் உடையவர்கள் இலட்சத்தில் ஒருத்தன் தானடா, அடையாளத்திற்காக தமிழை பயன்படுத்தி அதில் பணத்தையும், புகழையும் அறுவடை செய்யும் தலைவர்களும், எழுத்தாள தொண்டர்களும் உள்ள கூட்டத்தில் உன் போன்றவன் கோடியில் ஒருவன் தானடா? ஏன்டா போய்விட்டாய்?

உன் மரண செய்தியை கூட மழுங்கடித்தது கலைஞர் டிவி, ஹிந்து வோ செய்தியாக கூட போடவில்லை, மற்றவர்களும் லேசாக காண்பித்தன. போதும்டா முத்துகுமரா போய்ட்டு வா... ஆனால் ஒன்று எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம்.

முத்துகுமாரின் கடைசி கடிதம் "விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... " படிக்க இங்கே செல்லுங்கள்

கெஞ்சி பிழைக்கும் தமிழினத்துக்கு குடியரசு தினம் ஒரு கேடா?

இம்மாதிரியான ஒரு நிலை தமிழினத்துக்கு எப்போதும் வந்ததில்லை, இதற்கு முன் எத்தனையோ சோதனைகள் வந்திருந்த போதும் அந்த நேரத்தில் இனப்போராட்டங்கள் நடத்த முடியுமென்ற நம்பிக்கையும் தன்னலமில்லா தலைமையும் இருந்தன.

நம் முன் இன்று இரண்டு முக்கிய விசயங்கள், இந்தியாவில் தமிழகத்தின் பங்கென்ன? தமிழகத்தில் தமிழ் இன அரசியல் எப்படியுள்ளது?

தமிழனனின் கச்சத்தீவு நிலங்களும் உடைமைகளும் இந்திய அரசினால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது மட்டுமின்றி தேவிகுளம்,பீர்மேடு, கோலார், சித்தூர், திருப்பதி என கர்நாடகா, கேரளா, ஆந்திரம் என சுற்றியுள்ள அனைத்து பிற தேசிய இன மாநிலங்களுக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நிலம் மட்டுமின்றி நீர் ஆதாரங்களும் இயற்கை அளித்த நிலக்கரி தமிழ்நிலத்தின் தாது வளங்களும் இந்தியாவினால் சுரண்டப்படுகிறது.அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போதும் இந்திய அரசிடம் கெஞ்சல், இன்று தமிழினம் அழிக்க உதவிசெய்யாதே என்றும் வெறும் கெஞ்சல்.

தண்ணீருக்கு கெஞ்சல், மீனவர்களை கொல்வதை தடுக்க கெஞ்சல், பெரியாறு அணைக்கு கெஞ்சல், கண்ணகி கோவில் வழிபாட்டுரிமைக்கு கெஞ்சல்,கெஞ்சுவதும், பிச்சையெடுப்பதும், கோரிக்கை வைத்துமே ஒரு தமிழ் தேசிய இனம் வாழும் இலட்சணத்துக்கு குடியரசும் சனநாயகமும் தான் ஒரு கேடா?

இதற்கு முன்பு இந்திய அரசில் எந்த வலுவும் பிடியுமில்லாமல் இருந்த நிலை, ஆனால் எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் இப்போது இந்திய அரசின் உச்சிகுடுமியே தமிழகத்தின் கையில், ஆனால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்படும் இன அழிப்பை தடுக்க இந்திய தலைமைக்கு எந்த அழுத்தத்தையும் தர சுயநல தமிழக தலைமைகள் தயாராக இல்லை.முன்பு தமிழினம் அழிவை எதிர்நோக்கிய போதெல்லாம் குறைந்தது போராடமுடியுமென்றும் அதற்கான போர்வாளாக தமிழின தலைமைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இன்றோ தமிழின தலைமைகள் துரு பிடித்த போர்வாள்களாக பயனற்று உள்ளன. தம்மால் முடிந்த ஒரு அழுத்தத்தை தம் தயவால் இருக்கும் அரசுக்கு தமிழினத்துக்காக தரமுடியாத சுயநல தலைமைகள்.

தமிழினத்துக்கு எதிரான தலைமைகளும் கட்சியும் எப்போதும் ஏதோ ஒரு பெயரில் இருக்கவே செய்யும், அதை எதிர்க்க சுயநலமில்லா, புள்ளை குட்டிகளின் பதவிக்காக கோமணத்தையும் கழற்றி தராத, அதிகாரத்துக்காக தம் இனத்தை அழிவை தடுக்காத தலைமையை தேர்ந்தெடுப்போம், துரு பிடித்த போர்வாள்களை தூக்கி எறிவோம்.

அடப்போய்யா லூசு குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்னு நாலு படம் போட்டிருக்காங்க, நடிகைகளின் சிறப்பு பேட்டிகள் டிவியில் அதை பார்ப்போமான்னா இல்லாம சும்மா கத்திக்கினு.... வந்தே மாதரம்....

ஈழத்தமிழனா? புலிகள் அழிந்து போகட்டும் - கருணாநிதியின் கடுப்பு

நாளை ஈழம் உருவாகுமென்றால் ஆட்சியையே இழக்க தயாரென்று மற்றுமொரு காமெடியை ஆரம்பித்து வைத்துள்ளார் தமிழின தலைவர்(?) மு.கருணாநிதி.

இதற்கு முன் இரு முறை ஆட்சியை கருணாநிதி ஏன் இழந்தார் என்பதை நாக.இளங்கோவன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் இங்கே

தமிழின உணர்வாளர்களிலிருந்து எல்லோருக்கும் கலைஞரின் அமைதியை கண்டு ஆச்சரியமும் ஆவேசமும் குழப்பமும் அடைந்துள்ளார்கள், ஈழப்போராட்டத்தின் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி இப்போது புதிய கண்டுபிடிப்பாக சொல்லிக்கொண்டிருப்பது பிற போராளி இயக்கங்களுடனான புலிகளின் மோதல் என்றும் அதையே கிளிப்பிள்ளை போல பல உடன்பிறப்புகள் நம்புவதும் கருணாநிதிக்கும் திமுகவிற்கு இவர்கள் வாழ்க்கைப்பட்டவர்கள்(நன்றி அறிவுமதி) என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

இதற்கும் மேல் யாராவது உண்ணாநிலை போராட்டம், போராட்டம் என்றால் அய்யகோ... ஆரிய சதியை பாரீர் என்று போலி கூச்சல் வேறு.

தயாநிதி மாறனுக்கு கேபினேட் மந்திரி பதவி வாங்குவதற்கும், டிஆர்ஸ் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறையை அடம்பிடித்து மீண்டும் வாங்கிய கருணாநிதிக்கு ஈழத்திற்காக சோனியாவிடம் ஒரு துரும்பை கூட தூக்கி போடமுடியாததன் காரணம் என்ன? கருணாநிதியால் முடியது என உடன்பிறப்புகள் தொடர்ந்து நினைக்கலாம், ஆனால் கருணாநிதி யின் புலிகளின் மீதான "ஈகோ" ஈழத்தமிழருக்காக எதையுமே செய்ய நினைக்கவில்லை என்பதே காரணம்.

கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.

80களின் மத்தியில் ஈழத்தமிழ் போராளி இயக்கங்களுக்காக கருணாநிதி திரட்டியபோது(இதுவும் கூட எம்ஜிஆருக்கு போட்டியாக)கருணாநிதியிடமிருந்து நிதி பெறக்கூடாது என பிரபாகரனுக்கு எம்ஜிஆர் தெரிவித்தார்.

போராளிகள் தமிழகத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனையோ தலைவர்களோடு பழகிய புலிகள் கருணாநிதியுடன் எந்த நெருக்கத்திலும் இருந்ததில்லை.

எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் டெலோ, இந்த டெலோ இப்போது இருக்குமிடம் தெரியாமல் உள்ளது, ஈழப்போராளிகள் எம்ஜிஆரா கருணாநிதியா என்றால் கருணாநிதி பக்கம் என்ற அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் என்பதாலும் தற்போது ஈழத்தமிழர்கள் அழிவு என்றால் அதில் புலிகளும் சேர்ந்ததே என்பதுமே கருணாநிதியின் கனத்த மவுனத்தின் பிண்ணனி காரணங்கள்.

புலிகள் சரியா தவறா என்பதை விட புலிகளை அழிக்கிறோமென மொத்த ஈழத்தமிழர்களையும் அழிக்கும் சிங்கள, இந்திய அரசாங்கங்களுக்கும், தன் ஈகோவிற்காக ஈழத்தமிழினமே அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழிந்து போகட்டும் என அமைதிகாக்கும் தமிழின தலைவர்(?) கருணாநிதியும் காரணமே.

தன் இனத்திற்காக அதன் மேன்மைக்காக, அதன் சுதந்திரத்திற்காக உயிரையும் தர தயாரக உள்ள, தந்த தமிழர்கள் எங்கே? தன் சொந்த ஈகோவிற்காக தமிழீழ இனமே அழிந்தாலும் பரவாயில்லை என இருக்கும் தமிழினதலைவர் எங்கே.

பார்பனியத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்று கூறி அரசு, அதிகாரம், தொழில்,மகன், மகள், சொந்தம் பந்தமென எல்லாவற்றிற்காகவும் மேலும் சொந்த ஈகோவுக்காகவும் தம் இனத்தை அழிக்கும் செயலுக்கு உடைந்தையாக உள்ள தலைமை வேண்டுமா?

தமிழின உணர்வாளர்களே அடையாளம் காண்பீர்கள் புதிய தமிழின தலைமைய, தன் இனத்திற்காக தம் உயிரை தர தயாராகும், இளைய தலைமையாக இருக்கட்டும். தன் புள்ளைகுட்டிகளின் மந்திரி பதவிக்காக எம் இனத்தை அடகு வைக்காத தலைமையாக இருக்கட்டும்.

ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை, உடைக்கப்பட்ட புனித பிம்பம்

தமிழகத்திலே உயிரிழந்த ஒரே காரணத்திற்காக யாராலும் விமர்சிக்கப்படாத புனித பிம்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியின் எழவுக்கு பின் எந்த அரசியல்வாதியாலும் எந்த பத்திரிக்கையாலும் விமர்சிக்கப்படாதது மட்டுமின்றி ராஜீவ்காந்தி மரணத்தை வைத்து தமிழர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஊட்டப்பட்டது.

தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு, ராஜீவ்காந்தி செக்கச்செவேல் என்று இருப்பதலாயே நல்லவரோ புனிதரோ அல்ல, சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்று குவித்த போது மரம் விழுந்தால் சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சீக்கியர்களின் மீதான கொலைகளை நியாயப்படுத்தியவர்தான் ராஜீவ்காந்தி.

குசு குசு என்று பலராலும் ஓரிருவரால் ஓங்கியும் விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். இதை ராஜீவுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்பதை விட, ராஜீவ் மரணத்தின் பெயரால் தமிழர்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தையும், எண்ணத்தையும் மவுனத்தையும் உடைக்கும் நிகழ்ச்சியே, இந்த செருப்புமாலை நிகழ்ச்சி பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த அதே அதிர்ச்சி வைத்தியத்துக்கு இணையானதே என்று கருதுகிறேன்.

ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.

இங்கே பதவிக்காக வேட்டி துண்டு என்று மட்டுமல்ல கோமணத்தையே கழற்றி தந்திருக்கும் கட்சிகளின் மத்தியின் தொல்.திருமாவின் போராட்டங்கள் புதிய நம்பிக்கை அளிக்கின்றன.