தேனிலவு(ஹனிமூன்) கொண்டாட கிளம்புறிங்களா? சில டிப்ஸ்



இது திருமணங்கள் நிறைய நடைபெறூம் நேரம், புதிதாக திருமணம் ஆன / ஆகப்போகும் தம்பதியர்கள் ஹனிமூன் கொண்டாட கிளம்புவார்கள் அதனால் உங்களுக்கான சில சின்ன சின்ன டிப்ஸ்கள், இது இரண்டாம் ஹனிமூன் கொண்டாடுபவர்களுக்கும் பொருந்தும்

தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் வேறு அனுபவங்களை தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது... அலுவலக வேலை உடனே போக வேண்டும் அது இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள்.

நாங்க சின்ன பசங்களாக இருந்த போது திருமணம் முடிந்த உடன் அந்த ஜோடியுடன் மொத்த குடும்பமுமே மெட்டேடார் வேன் எடுத்துக்கொண்டு 10 நாட்கள் கோவில் கோவிலாக சுத்துவார்கள் இப்பொது அந்த திருமண ஜோடிகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது...ம் அவங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்...


தேனிலவை உள்ளூரிலோ அல்லது உங்களுக்கு மிக மிக பழக்கமான ஊரிலோ வைக்காதீர்கள், தேனிலவு என்பது என்னமோ வெறும் அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டுமல்ல, அது துணையின் கைபிடித்து நடப்பது, உணவு உண்பது, வள வளவென்று பேசுவது என உங்களின் எல்லா இனிமையான பொழுதுகளும் அடக்கம், அந்த நேரத்தில் உள்ளூரிலோ அல்லது பழக்கமான இடத்திலோ தேனிலவு கொண்டாடினால் உங்களுக்கு திருமணம் முடிந்ததை அறியாத ஒருவர் உங்கள் தந்தையிடமே சென்று உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருக்கானே என்னா விசயமென கேளுங்க என்பார்.

தேனிலவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு விசயங்கள் Feel Free and Feel Safe... உங்களுடைய பிரைவசி(அந்தரங்கம்) மற்றும் உங்களுடைய பாதுகாப்பு.

தேனிலவுக்கு போகும் வலைப்பதிவர்கள், வேலை வேலை என அலையும் வேலை பைத்தியங்கள் எல்லாம் முதலில் துறக்க வேண்டியது லேப்டாப் மற்றும் இணையம், அவசர தொடர்பு தவிர வேறெதற்க்கும் கைத்தொலைபேசியை திறந்து கூட பார்க்காதீர்கள்...

1) திருமணத்திற்க்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே போகவேண்டிய இடத்த முடிவு பண்ணிடுங்க.

2) தேனிலவுதான அதுனால கொஞ்சம் கஞ்சத்தனம் பாக்கம செலவு பண்ணி நல்ல ரூம் புக் பண்ணுங்க. விலை கம்மியா புக்பண்ணினா சுகாதரக்குறைவாத்தான் இருக்கும், இல்லாட்டி வசதிகள் குறைவாகத்தான் இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஆலப்புழை(குமரகம்) மாதிரியான படகு வீடுகளுக்கு போகின்றீர்கள் என்றால் ஒரு படுக்கை அறை அல்லது இரு படுக்கை அறை கொண்ட தனி படகு புக் செய்யுங்கள், விலை மிகக்குறைவாக இருக்கிறதே என்று பேக்கேஜ் தருபவர்கள் பல நேரங்களில் ஒரே படகில் உள்ள அறைகளில் ஒன்றை உங்களுக்கு தந்துவிடுவார்கள் இதனால் உங்களுக்கு தனி அறை கிடைத்தாலும் ஒரே படகை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், இதனால் உங்கள் ப்ரைவசி கெடும்.

3) முடிஞ்ச அளவுக்கு நீங்க தங்குற இடம் நகரத்துகுள்ளேயோ அல்லது நகர எல்லைக்கு உள்ளேயோ இருக்கும் படி பாத்துக்கோங்க. மிகத்தனிமையான எங்கோ ஒரு ஆள் நடமாட்டமேயில்லாத இடங்களில் தங்காதீர்கள்.

4) நீங்க தங்கும் ஹோட்டலின் தொலைப்பேசி எண்களை குறித்து வைத்து கொள்ளுங்கள், அதை ஊரிலும் தெரிவித்து விடுங்கள், கைத்தொலைபேசி வேலை செய்யவில்லையென்றாலோ சிக்னல் கிடைக்கவில்லையென்றாலோ ஏற்படும் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.

5) பக்கத்தில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

7) மலைபகுதிக்கு தேனிலவு செல்பவர்கள், சூழ்நிலைக்கு தக்கவாறு ஆடைகளை கொண்டு செல்லுங்கள்.

8) மலைப்பாதைகளில் தனிமையை தேடி தனியாக செல்லவேண்டாம்.

9) இருட்டும் வேளைகளில் வெளியே செல்வதை முடிந்த அளவிற்க்கு தவிர்த்து விடுங்கள்.

10) மலைவிளிம்புகளில் நின்று சாகசம் செய்வதை (புகைப்படம் எடுப்பதை ) தவித்து விடுங்கள்.

11) பயணத்தில் புதிய நபர்களை சந்திக்க நேர்ந்தால் சீக்கீரம் பேச்சை முடித்து விடுங்கள்.

12) மிகவும் முக்கியமானது விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது நகைகளையோ அறவே தவிர்த்துவிடுங்கள். ஒரு சிறிய பொருள் தொலைந்தாலும் செண்டிமெண்ட்டாகவும் வருத்தம் ஏற்பட்டு ஹனிமூன் மூடையே கெடுத்துவிடும்

13) சில தேவையான மருத்துகளையாவது கைவசம் வைத்திருப்பது நல்லது, அதே போல கொஞ்சமாவது உலர் உணவுகள் பிஸ்கெட், ப்ரெட் போன்றவைகளை வைத்திருப்பதும் நல்லது.

14) நீங்கள் தேனிலவு செல்ல ஏற்ப்பாடு செய்து தரும் நிறுவனம் நல்ல நிறுவனமா அவர்களின் சேவைகள் என்ன என்ன , எத்தனை வருடமாக தொழில் செய்கிறார்கள், முதலில் அவர்கள் நம்பிகையானவர்களா என்றும் ஆராய்ந்து அதன்பின் அவர்களிடம் புக் செய்யுங்கள்

15) சிறிய சிறிய ஏற்பாட்டு குறைபாடுகளும் உங்களின் ஹனிமூன் மூடை கெடுத்துவிடும் என்பதால் நம்பிக்கையான, தெரிந்த நிறுவனங்கள் வழியாக ஹனிமூன் புக் செய்யுங்கள். முக்கியமாக ஏதேனும் ஏற்பாட்டு குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் அவர்களால் செய்து தர இயலுமா என்று பாருங்கள்

16) வெளிநாடுகள் அல்லது சுற்றுலா தளங்களில் ஹனிமூன் கொண்டாடுபவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா டூரிட்ஸ் அட்ராக்சன் இடங்களையும் பார்க்க வேண்டுமென காலையிலிருந்து நள்ளிரவு வரை சுற்றோ சுற்றென்று சுற்றாதீர்கள், ஆமாம் நீங்கள் காசு செலவழித்து தான் வந்திருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வந்திருப்பது தேனிலவுக்கு என்பதை மறக்காதீர்கள், சுற்றுங்கள் ஆனால் களைப்படைந்து விழும் வரை சுற்றாதீர்கள். நிறைய நிறைய கவர் செய்ய வேண்டுமென்று சுற்றாதீர்கள், மிக நெரிசலான இடங்களை தவிர்த்து அமைதியான இடங்களை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக மலேசியா வந்தால் பெட்ரோனஸ் டவர் கீழ் நின்று போஸ் கொடுப்பதற்காக சுற்றுவதை விட தியோமென் தீவு, லங்காவி, ஜென்டிங் ஹைலேண்ட் என்று சற்று ரிலாக்ஸ் ஆக இருங்கள்...

17) ஹனிமூன் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தயார் செய்யுங்கள்.

18) நண்பர்களுக்கு திருமணம் ஆகின்றதா? அவர்களுக்கு மறக்க முடியாத பரிசு தரணும் என நினைக்கின்றீர்களா? அவர்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றை திருமணப்பரிசாக புக் செய்து தாருங்கள்.

இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் பாக்கி இருக்கு, வெளிப்படையாக இங்கே சொல்லமுடியாது வேண்டுமெனில் என்னை ஜிடாக்கில் தொடர்பு கொள்ளுங்கள் சொல்கிறேன்...

நமது நண்பர் இளையகவி அவர்களின் S-Teamholidays நிறுவனம் பல ஆண்டுகளாக ஹனிமூன் பேக்கேஜ் டூர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள், நீங்கள் முதல் ஹனிமூன் செகண்ட் ஹனிமூன் போவதாக இருந்தாலும் நண்பர்களுக்கு ஹனிமூன் டிரிப் பரிசளிப்பதாக இருந்தாலும் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

மத்திய மந்திரிசபை லாபி ராசா, கருணாநிதி குடும்பம் மர்மம் உடைந்ததா?

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டார், நீரா ராடியாவிடம் பேசியது அவரா இல்லையா என்ற கேள்வி, பதட்டப்படாமல் சொல்லலாம், மேலும் அவரின் ஆட்கள் பத்திரிக்கையாளர்களை வீட்டுக்கு பாதுகாப்பா போக மாட்டே என்று மிரட்டும் அளவுக்கு இறங்கியிருக்கின்றார்கள்...

ஆ.ராசா ரொம்பத்தான் மோசம் ஊழல், லாபி செய்யறது என மத்ததெல்ல்ல்ல்ல்ல்ல்லாம் அவாங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட ராசா இன்னும் கோபத்தை அடக்கி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்ல கத்துக்கலை... ஆமா ஆங்கில மீடியா ஆட்கள் தானே நோண்டுறாங்க விகடன், நக்கீரன் குமுதமெல்லாம் என்னா ஆனாங்க... ஓ சாரி எல்லாம் கலைஞர் பாராட்டுவிழாவுக்கு போயிட்டாங்களா?

நீராராடியா ஆ.ராசா உரையாடல்

A.Raja : My case is clear a?

Nira Radia: your is cleared yeah, your case is cleared last night only, no butuuuu what is happening with daya

A.Raja : aang?

Nira Radia: Daya?

A.Raja: Then the rest of the thing is textile or fertilizers

Nira Radia: Not for daya

A.Raja: either one

Nira Radia: But alagiri or daya only one can come a?

A.Raja: No two, two can come

Nira Radia: both

A.Raja: Balu will be problem I hope

Nira Radia: I think it will be difficult for the leader to justify three family members.

A.Raja: ha ha , ya but everybody knows


மூன்று பேர் மினிஸ்டரியில், ஆ.ராசா, அழகிரி, மாறன்... அழகிரி மாறன் ஓகே கருணாநிதி குடும்பம், இதுல ஆ.ராசா எப்படி குடும்பத்துல ஒருத்தர்? கருணாநிதி சொல்றது போல கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகமா? அல்லது ஒரு வேளை நாஞ்சில் சம்பத்தை கேட்டா விலாவாரியா சொல்வாரா?

ஏ மக்களே பாருங்கள் எங்கள் தலைவர் கருணாநிதியை குடும்பத்துக்காக செயல்படுகிறார் என்கின்றீர்களே, தனது மகன் அழகிரிக்கும் பேரன் தயாநித்க்கும் எந்த துறை என்பது ராசாவுக்கு முடிவு செய்த பின் தான் என்றால் எப்படி குடும்ப உறுப்பினர்களை நடத்துகிறார் என்று தெரிகிறது.

தவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்

இணைய எழுத்துகள் தரம் வேறெந்த எழுத்துகளும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கம் பல எழுத்துகள் இங்கே உள்ளன, இணையத்தில் சிறுகதை கவிதைகள் என்றால் தெரித்து ஓடும் நிலை உள்ளது, இயல்பாகவே சிறுகதைகள் மேல் ஓரளவிற்க்கு ஆர்வம் உள்ளவன் என்பதால் இணையத்தில் கண்ணில் படும் சிறுகதைகளை படிக்காமல் விடுவதில்லை, பல சிறுகதைகள் பழைய விகடன் குமுதம் டெம்ப்ளேட் கதைகளாக இருப்பதும், பயிற்ச்சி இல்லாததால் ஏற்படும் சலிப்பூட்டும் நடைகளும், ஜெண்டில்மேன் கதைக்கருக்கள், அரதப்பழசான கதைக்கருக்கள் படிக்க கொஞ்சம் சிரமத்தை தந்தாலும் நல்ல கதை சிக்கிவிடாதா என்று படிப்பது உண்டு.

முதல் 4 வரியிலேயே கதையை மேலே படிக்கலாமா வேண்டாம என்ற முடிவுக்கு வாசகன் வந்துவிடுவான், அந்த 4 வரியை தாண்டி வந்துவிட்டாலும் சிறுகதை ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் போன்றது கடைசி வரை விறுவிறுப்பாக செல்ல வேண்டும்...

வேறு எந்த எழுத்துக்களுக்கும் குறைவில்லாத இணையத்தில் வெளியான இரண்டு இணைய சிறுகதைகளை இங்கே பகிர விரும்புகிறேன்...

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன் தாஸ் எழுதிய இந்த சிறுகதையானது "ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு" என்று ஆரம்பமாகும் கதை ஒரு பையனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியே அங்கீகாரத்துக்காக ஏங்கும் சேர்த்துக்கொண்டு வாழவைக்கப்படும் பெண்ணின் உணர்வு, முதல் தாரத்தின் அதிகாரம் கையை விட்டு போகாமல் இருக்க செய்யும் முயற்சிகள் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் காலிப்பெருங்காய டப்பா பேச்சுகள், என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா என்று கேட்கும் ஊர் ஆட்கள் என ஒரு திரைப்படத்தை நம் மனக்கண் முன் ஓட்டிவிடுகிறார்.... என் வாழ்க்கையில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும்...

வேட்டையாடு! விளையாடு!!!- விசை என்ற வலைப்பதிவில் எழுதப்பட்ட சிறுகதை முகமூடி சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற இந்த கதையானது வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!! என்ற ஆரம்பமாகும் இது விஸ்வநாத் ஆனந்த் மற்றும் காஸ்ப்ரோவை நினைவு படுத்தினாலும் நிறைய செஸ் பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் இருப்பது போல தோன்றினாலும் கதை சர சர வென வேகமாக செல்லுகிறது, மேலும் படக்காட்சிகளாக கதை விரிகின்றது, கதையின் கடைசி பத்தியில் ஒரு சஸ்பென்ஸ்ம் உடைகிறது... இந்த கதையை எழுதியவர் தற்போது பதிவுகள் எழுதவில்லை போலும், அவரோட வலைப்பதிவுகளில் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை...

இந்த இரண்டு சிறுகதைகளையுமே அவசர அடியாக படிப்பதைவிட நிதானமாக படித்து ருசிக்கலாம்...

ஈழம் தொடர்பாக கருணாநிதியை திட்டுவது ஏன்? உடன்பிறப்புகளே சிந்திப்பீர்...

தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்....

இதோ சாட்சியாக கோத்தபாய ராஜபக்சேவின் பேட்டி... திருமா 4 நாள் உண்ணாவிரதம் இருந்த போது இலங்கை அரசிடம் ஏற்படாத பதட்டம் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற உடன் ஏற்பட்டிருக்கின்றது என்றால் பொறுப்பு திருமாவுக்கு அதிகமா கருணாநிதிக்கு அதிகமா? அப்போ திட்ட வேண்டியது யாரை... உடன்பிறப்புகளே சிந்திப்பீர்...

இதோ கோத்தபய ராஜபக்சேயின் பேட்டியில் இருந்து சில வரிகள்

----------------------------

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.

---------------------------------

இதற்க்கும் கூட இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து கருணாநிதியை ஏமாற்றிவிட்டது என்றும் கூட சொன்னாலும் சொல்வீர்கள்

http://meenakam.com/?p=14892

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்

நாளை காரைக்குடியில் தெளி குறும்பட வெளியீடு

தெளி குறும்பட வெளியீடு



ஏப்ரல் 30, 2010 அன்று காலை காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மண்டபத்தில் காலை 10:30 முதல் மாலை 5.00 வரை ஓவியர் உமாபதி அவர்களின் ஓவியக்கண்காட்சியும் அதன் பின்

மாலை 6:00 மணிக்கு தோழர் வே.பன்னீர் அவர்கள் இயக்கிய தெளி குறும்பட தகட்டை திரையுலக படத்தொகுப்பு மேதை திரு.B.லெனின் அவர்கள் வெளியிடுகிறார்...

தெளி இயக்குனர் தோழர் வே.பன்னீர் அவர்களுக்கும் தோழர் ஓவியர் உமாபதி அவர்களுக்கும் தமிழ்வெளி தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது...

தெளி குறும்படம் பற்றிய மா.காளிதாஸ் அவர்களின் விமர்சனம் கீழே, தெளிவாக தெரிய படத்தின் மேல் அமுக்கவும்...





விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்



ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்? வெளிநாட்டு டூர்கள், விளம்பரங்கள் பற்றி சில டிப்ஸ்

ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்

இப்படி ஒரு விளம்பரம் பார்க்கின்றீர்கள்.. ஆகா இவ்வளவு குறைந்த விலையில் சிங்கப்பூர் செல்ல இயலுமா... என்று ஆர்வத்துடன் சிங்கப்பூர் செல்லலாம் என்று கணக்கு போட்டுவிட்டு உள்ளே போவீர்கள்... இருந்தாலும் ஒரு சந்தேகம் இருக்கும் ஒரு வேளை விமான கட்டணம் இல்லாமலோ என்று தோன்றும், கீழே இந்த விலையில் என்னென்னவெல்லாம் இனைக்கப்பட்டிருக்கும் என்ற இடத்தில் போக வர விமான பயணச்சீட்டும் இருக்கும் என போட்டிருக்கும், அடி சூப்பர் ஏர் டிக்கெட்டோடு சேர்த்தே இவ்வளவுதானா என்றிருக்கும்... அதற்க்கும் கீழே விலைக்கு பக்கத்திலேயே போட்டிருக்கும் *குறி பற்றிய குறிப்பு கொடுத்திருப்பார்கள்... அதில் என்னென்னவெல்லாம் இந்த கட்டணத்திலிருந்து விலக்கப்பட்டிருக்குமென்று...

Airport Tax excluded (விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் நீங்கலாக) அதை படித்தவுடன் அட என்ன டாக்ஸ் எவ்ளோ வரப்போகுது என்றால் அங்கே தான் சிக்கலே இந்த டாக்ஸ் விமானகட்டணத்தை போல இரண்டு மூன்று பங்கு.. சென்னை சிங்கப்பூர் விமாணகட்டனும் வெறும் 2500-4000ரூபாய் தான் ஆனால் இந்த ஏர்போர்ட் டாக்ஸ் ஏறக்குறைய ரூபாய்10,500 இரண்டாவதாக விசா கட்டணம் எக்ஸ்க்ளூடட் என்பார்கள் விசா கட்டணம் ரூபாய்1200-1500 இதெல்லாம் சேர்த்தால் 21,999 + 10,500 + 1500 = 33,999 ரூபாய்... இவைகளை Hidden Charges என்பார்கள்...

இது மட்டுமின்றி சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கான கட்டணங்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவு பணம் எடுக்கும், ஆக முக்கியமான இடங்கள் மட்டும் பார்க்கவேண்டுமென்றாலும் அது ஒரு குறிப்பிட்ட தொகு எடுக்கும், மேலும் இந்த இடங்களுக்கு செல்ல போக்குவரத்து செலவு பார்க்க வேண்டும்

எனவே எந்த விளம்பரமாக இருந்தாலும் கவனிக்க வேண்டியவை
1. ஏர்போர்ட் டாக்ஸ் சேர்த்துள்ளதா
2. விசா கட்டணமும் சேர்த்துள்ளதா
3. அங்கே சுற்றிபார்க்கும் இடங்கள் டூர் அட்ராக்சன்ஸ் டிக்கெட்டும் சேர்த்துள்ளதா. அப்படியென்றால் எவை எவை?

இல்லையென்றால் அது பற்றி முகவர்களிடம் கேளுங்கள் அதன் பின் முடிவுக்கு வாருங்கள்

நமது வலைப்பதிவர் இளையகவி மற்றும் நண்பர்கள் நடத்தும் www.S-TeamHolidays.com நிறுவனம் கேரளா, சிங்கப்பூர் / மலேசியா / இந்தோனேசியா மற்றும் பல பேக்கேஜ் டூர்கள் நடத்துகிறார்கள்... டூர் தொடர்பான தகவல்கள், செக் லிஸ்ட் மற்றும் எந்த சந்தேகமென்றாலும் தயங்காமல் இவர்களிடம் கேளுங்கள்... இலவசமாக டிப்ஸ்கள் தருவார்கள்...

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

சீமானின் நாம் தமிழர் இயக்க மாநாடு நேரடி ஒளிபரப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் கட்சிக்கொடி அறிமுக அறிவிப்பு மாநாடு இப்பொழுது (10.04.2010) தஞ்சையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது... இதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்


சீமான் உணர்ச்சிப்பெருக்கோடு பேசிக்கொண்டுள்ளார்...

வாழ்த்துகள் சீமான், தமிழகத்திலும் உலக தமிழர்களிடத்திலும் உங்களுக்கு நிறைய பணிகள் காத்திருக்கின்றன... சவாலான பணிகள் வென்று வர வாழ்த்துகிறேன்...

இப்படிக்கு யார் தமிழ் என்றாலும் தமிழன் என்றாலும் ஓடிவரும் ஒரு தம்பி...

என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன் டா? என்னாது டா வா?

சென்னை வலைப்பதிவர் சங்கம் என்பதை தமிழ் பதிவர்கள் சங்கம் என மாற்றியுள்ளார்களாம், யார் வேண்டுமானாலும் சங்கத்தில் சேரலாமாம் அதனால் நானும் சேரப்போகிறேன்... சங்கத்து கைப்புள்ளைகளா என்னை சேர்த்துப்பிங்க தானே?


சங்கத்தில் சேருவதால் ஏற்படும் நன்மைகள்

1. யாராவது நம்மை அடித்தால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவன் டா என்று 2 கைப்புள்ளைகள் நமக்கு சப்போர்ட்டா வரலாம்

2. நல்லாட்சி நடத்தும் கலைஞர் அய்யா அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தி அதில் நமீதா டான்ஸ் வைத்து அதனால் வீடு ப்ளாட் எதுனா கிடைக்கும் வாய்ப்புண்டு

3. தப்பிதவறி சங்கத்துல எதுனா பொறுப்பு வந்துடுச்சினா கிடைக்கிற லெட்டர் பேடை வைத்து என் பையன் டிராயிங் போடவோ என் பொண்டாட்டி காய்கறி பொருள் வாங்க சீட்டு எழுதி தரலாம்.

4. கைக்காசு போட்டாவது லெட்டர் பேட் அடிச்சி, விசிட்டிங் கார்டு வைத்து இளிச்சவாயன் எவனாவது மாட்டினால் எவ்ளோ பெரிய ஆளு நானுன்னு மொக்கை போடலாம்..

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் சமூகத்தில் சங்கம் வைப்பதற்குள்ளேயே ரத்த களறி ஆகிவிடும் போலுள்ளது, எல்லோரும் கருத்து சொல்லிட்டாங்க என் பங்குக்கு நானும் சொல்லிடறனே, அட கருத்தை சொல்லி என்ன நாட்டையா திருத்தப்போறோம்.

வலைப்பதிவாளர்கள் சங்கம் என்பது கண்டிப்பாக பத்திரிக்கையாளர் சங்கத்துடனோ தொழிற்சங்கத்துடனே இணை வைத்து பேச இயலாது, வலைப்பதிவு என்பது பெரும்பாலோனோருக்கு பொழுது போக்கு அதனால் இந்த சங்கம் இன்னொரு பேனா நண்பர்கள் குழுமம் போன்றோ "வெண்ணிலா கபடி குழு" போன்றோ தான், எனவே சங்கம் ஆரம்பிப்பதாலோ ஆரம்பிக்காமல் விடுவதாலோ ஒண்ணும் பெரியதாக கிடைக்கப்போவதோ இழக்கப்போவதோ இல்லை.

மற்ற சங்கங்களுக்கும் இந்த சங்கத்திற்க்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு, இணைய வெளி என்பது சுதந்திரமான ஒன்று என்பது மட்டுமல்ல ஒருவரே டபுள் டிரிப்புள் ஆக்டிங் எல்லாம் கொடுக்க முடியும், உதாரணத்திற்க்கு தானைத்தலைவருக்கு பாராட்டுவிழா நடத்தி சங்கத்துக்கு இடம் வாங்கப்போகிறோம் ஆதலால் சங்கம் தானைத்தலைவரை விமர்சித்து பதிவுகள் வரக்கூடாது என்று சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசித்துவிட்டு இந்த பக்கம் வந்து "உண்மை கலைஞர்" "பொய் புலவர்" என்று ஏதோ ஒரு பெயரில் தானைத்தலைவரை செக்க சாத்து சாத்தி அறிக்கைவாசித்தவரே பதிவெழுத இயலும், மேலும் இந்த பதிவரை புறக்கணி அந்த தளத்தை புறக்கணி என்றெல்லாம் சங்கம் கட்டுபடுத்தினால் சங்கத்தை புறக்கணித்துவிடுவார்கள், ஏனெனில் இந்த சங்கம் பதிவர்களின் வாழ்வியலையோ தொழிலையோ சார்ந்துள்ளது அல்ல.

இந்த சங்கம் ஒரு மதத்தை போன்றோ கட்சியை போன்றோ இறுக்கமானதாக(tightly coupled) இருந்தால் அது தானாகவே காணாமல் போய்விடும், சங்கம் பதிவர்கள் மீது செலுத்தும் ஆளுமையோ பிணைப்போ தளர்வானதாக இருக்க வேண்டும் (loosely coupled) அப்படி இருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக இருக்க இயலும்.

தற்போது வரை இணைய கதை கவிதை, கட்டுரை போட்டிகள்பெரும்பாலும்(மணற்கேணி மற்றும் சில முயற்சிகள் தவிர்த்து) தனிநபர் முயற்சிகளாகவே உள்ளன, தனி நபர்கள் சோர்வடையும் போது அந்த முயற்சிகளில் தொடர்ச்சி இருக்காது, பணம், வேலை பளு பகிர்தல் போன்றவையும் விட முயற்சிகளின் தொடர்ச்சி முக்கியம்.


இங்கே சிங்கை வலைப்பதிவர்கள் முயற்சியால் நடைபெற்ற மணற்கேணி போட்டி நிகழ்வுகளில் பதிவர்களின் ஒருவனாக நானும் பங்கெடுத்தவன் என்ற முறையில் தெரிந்ததை சொல்கிறேன்.அந்த போட்டிக்காக சிங்கை வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் பெரும் முயற்சி எடுத்துள்ளார்கள், இணைய தளம் வடிவமைப்பில் ஆரம்பித்து தலைப்புகள் விவாதித்தது, நடுவர்கள் தேர்ந்தெடுத்து தொடர்பு கொள்ளல், போட்டி பற்றி பலருக்கும் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்வது போட்டி கட்டுரைகளை கையால் எழுதப்பட்டு ஸ்கேன் செய்து வந்தவைகள், PDF வடிவத்தில் வந்தவைகளை எல்லாம் கை வலிக்க டைப் அடித்தது, பணம் நன்கொடை, தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களை அழைத்து வர அவர்களுக்கு பயணம் தொடர்பான உதவிகள் செய்தல், அடுத்த மாதம் அவர்கள் வரும்போதான நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புகள் மேலும் இதில் விடுபட்ட மேலும் பல பணிகள் என அத்தனையும் தனி நபர்களோ ஒரு சிலராலோ நிச்சயம் செய்ய இயலாது, இவை அனைத்தும் சிங்கை வலைப்பதிவர் குழுமம் என்ற 20க்கும் மேற்பட்ட பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்ததாலேயே சாத்தியமாகின்றது. இது எல்லாவற்றையும் விட இதை குழுமமாக செய்யும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும், இந்த ஆண்டு இந்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிங்கப்பூரில் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த முயற்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்கும், இதுவே குழுமமாக இல்லாமல் போனால் தனி நபர்கள் ஆர்வம் இழக்கும் போது அந்த முயற்ச்சி அதோடு நின்றுவிடும்.

மேலும் தமிழ் மெண்பொருட்கள் தயாரித்தல் என்பது தனி நபர் முயற்ச்சிகளாகவோ அல்லது சில நிறுவனங்களின் முயற்சிகளாகவோ உள்ளன, தனிநபர் மற்றும் நிறுவன முயற்சிகள் அவரவர்களுக்கே சொந்தமாகுமேயொழிய தமிழ் சமுதாயத்துக்கு சொந்தமாகாது, தமிழில் ஒரு நல்ல OCR, பிழைதிருத்தி போன்ற மென்பொருட்கள் இல்லை, தமிழ் OCR உருவாக்க முயற்சித்த போது 30,000 ரூபாய் செலவும் அதைவிட முனைப்பான முயற்ச்சியும் தேவைப்படுமென தெரிய அந்த முனைப்பு அப்படியே கிடக்கின்றது, இது போன்றவைகளை சங்கமாக இருந்தால் எளிதாக செய்யலாம் மேலும் சங்கமாக இருந்தால் முதலிலிருந்து வேறொருவர் ஆரம்பிக்காமல் விட்ட இடத்திலிருந்து புதியவர் தொடங்கலாம்.

இது மாதிரி முயற்சிகள் தவிர்த்து சங்கம் அமைத்தால் சட்டபாதுகாப்பு, ஆட்டோ பாதுகாப்பு என்றெல்லாம் சொல்வது நடைமுறை சாத்தியமில்லை, கருணாநிதியை,ஜெயலலிதாவை மற்றும் பலரை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி பதிவுகள் எழுதுகிறோம், இதையே தினம் கருணாநிதி பதிவு படிக்கிறார் அவரை விமர்சித்து எழுதுபவர் மீது காண்டாகி நடவடிக்கை எடுக்கிறார் என்றால் சத்தம் போடாமல் எழுதிய பதிவுகளை அழித்துவிட்டு வாயையும் டேஷ்ஷையும் மூடிக்கொண்டு போய் கொண்டே இருக்கலாமேயொழிய சங்கத்து சிங்கங்களை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு போவது சற்று கடினமே.

வலைப்பதிவர்களுக்காக ஒரு குழுமம் அல்லது சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன பைத்தியக்காரனிடம் பேசிய பாலபாரதி இன்று சங்கம் அமைக்க போகிறார்கள் என்றவுடன் "என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது." என்று எழுதுவதற்க்கு பின்னால் எத்தனையோ "சொந்த" "தனிப்பட்ட" காரணங்கள் இருக்கலாம் இவைகளையெல்லாம் விலக்கிவிட்டு பார்த்தால் சங்கம் என்ன செய்யப்போகிறது என்பதற்க்கு சரியானதொரு விளக்கத்தை தந்துவிட்டு போய்கொண்டே இருக்கலாம். சங்கம் "டைட்டானால்" மல்லாக்க படுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சங்கத்தால் பிடிக்காத பதிவர்களை புறக்கணிக்க சொல்ல முடியும் என்றால் தமிழ்மணம் தளத்தை எத்தனையோ முறை சிலர் புறக்கணிக்க சொன்னார்கள், ஆனால் இன்னமும் தமிழ்மணம் சிறப்பாக செயல்படுகிறது அது போல இணையத்தில் சாத்தியமில்லை, இணையவெளி முன்பு போல யாகூ குழுமங்கள் போன்றோ அல்லது கிராமமோ அல்ல ஊரைவிட்டு தள்ளிவைத்தவர்கள் வீட்டிற்க்கு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு போய் தான் பார்க்க வேண்டும் என...

ஆனால் இதை பார்ப்பனர்கள் சதி, ஆரிய அடிவருடிகளின் சதி என்று பாலிடிக்ஸ் செய்வதிலும் மூத்த பதிவர்களை வெத்தலை பாக்கு வைத்து அழைக்கவில்லை கலக்கவில்லை என்பதும் சங்க வேலைகளில் முனைப்பாக இருப்பவர்களின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் போன்ற எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிவிட்டு உண்மையிலேயே என்னடா என்று யோசித்தால் எதிர்ப்புக்கு காரணமாக வெளிப்படையாக சிலர் சொல்லவில்லையென்றாலும் கீழ் கண்ட காரணங்களை வைத்து எதிர்க்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

1. இந்த சங்கத்தை வைத்து பணம் சம்பாதிக்க போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இந்த சங்கத்தை ஆரம்பித்து 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கேபிள் சங்கர் படமா எடுக்கப் போகிறார்? இதில் புழங்கப்போகும் பணம் சிறுசா பெருசா என்பதெல்லாம் இப்போது தெரியாது, பெரிய பணம் புழங்க வாய்ப்பும் மிக குறைவு, அப்படியே புழங்கினாலும் சரியான ஆடிட்டிங் போன்றவைகள் இருந்தால் தான் தொடர இயலும். தொடக்கத்தில் சங்கத்து சிங்கங்கள் கைக்காசை இழக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்

2. இந்த சங்கத்தை வைத்து பிரபலமடையப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இருக்கலாம் வாய்ப்புகள் உண்டு, ஒரு வேலையை இழுத்து போட்டு செய்பவர்களுக்கு அதற்கான அங்கீகாரமாக இவர்கள் பெயர் நாலு பேருக்கு தெரிய வாய்ப்புண்டு, சென்ற முறை சென்னை பதிவர் பட்டறை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பாலபாரதி மற்றும் பல சிறந்த பட்டறை ஏற்பாட்டாளர்கள் பெயர் ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்களில் வந்தது இது அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற தளங்களின் பெயர்களும் வெளிவந்தது.

3. இந்த சங்கத்தை வைத்து வலைப்பதிவுகளுக்கு அத்தாரிட்டி ஆகப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்
- இணைய பெருவெளியில் இந்த அத்தாரிட்டிகளுக்கெல்லாம் வேலையே இல்லை, ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகால தமிழ் இணையத்தில் பல அத்தாரிட்டிகள் வந்து போயுள்ளார்கள்,

4. இந்த சங்கத்தை வைத்து ஆதாயமடையப்போகிறார்கள்
- இதற்க்கு முன் வலைப்பதிவுகளின் பிரபலத்தை வைத்துக்கொண்டு கிடைத்த அறிமுகங்களை வைத்துக்கொண்டு சிலர் என்னென்ன எல்லாம் சொந்த ஆதாயங்கள் அடைந்தார்களோ(விரிவாக இதுப்பற்றி பேச விரும்பவில்லை) அவைகள் எல்லாம் இவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புண்டு

இவைகளையெல்லாம் தாண்டி தான் பதிவர் சங்கம் என்றில்லை எந்த சங்கமும் வைக்க இயலும்.

அப்போ சங்கம் ஆரம்பிச்சா எந்த தப்புமில்லையா என்றால் சங்கம் சில குழும ஆக்கிரமிப்புக்குள்ளாகவோ சார்பு நிலைப்பாடெடுக்கவோ, அதிகார பீடங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ சிலருக்கு உதவலாம், கட்சிகளை போன்று கட்டம் கட்டுதல், வலைப்பதிவு அத்தாரிட்டி ஆகுதல் என போகலாம், ஆனால் இதையும் கடந்து தான் முயற்சிகளை எடுக்கல் இயலும் என நம்புகிறேன். நம்பிக்கையோடு ஆரம்பிக்கலாம், பிடிக்கவில்லையென்றால் சங்கத்தை விட்டு விலகுவதோ, சங்கத்தை உடைப்பதோ அல்லது புது சங்கம் ஆரம்பிப்பதோ ஏதோ ஒன்றை செய்துவிட்டு போகலாம்.

இணைய சுதந்திரம் பாதிக்கப்படுதல், குழு ஆக்கிரமிப்பு போன்றவைகளை சரியாக நிர்வகித்து சங்கம் சரியான தெளிவான வேலைதிட்டத்துடன், சார்பின்றி, தன்முனைப்பு குறைவாக்கிக்கொண்டு பதிவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் பல முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் பல தமிழ் கணிணி செயலிகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

பின்குறிப்பு:
வலைப்பதிவுகளுக்கு ஒரு சங்கம் தான் இருக்கனுமென்ற அவசியமில்லை, திமுக,அதிமுக,மதிமுக என்றெல்லாம் இருப்பது போல பல சங்கங்கள் ஆரம்பிச்சிக்க வேண்டியது தான்

பெண்ணாகரம்???

பெண்ணாகரம்???

சில நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் உரையாடியில் இருந்த போது அவரை அழைத்தேன் நலம் விசாரிக்க, பதிவுலகின் வழியே அறிமுகமாகி இருந்தாலும் சில வருடங்களாக பதிவை தாண்டி சொந்த விசயம் பேசும் அளவிற்க்கு நண்பர், மணிக்கணக்கில் அரசியல் பேசுவோம் முன்பெல்லாம், பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின் நண்பர் உரையாடியில் எழுதியது தான் இந்த பதிவின் தலைப்பு, நான் சில காலமாகவே உடன்பிறப்புகளுடன் அதிலும் குறிப்பாக அறிவுஜீவி உடன்பிறப்புகளுடன் அரசியல் பேசுவதில்லை, ஏனெனில் இந்த அறிவுஜீவி உடன்பிறப்புகள் கருணாநிதி என்ற இனத்துரோகியின் வாயிலிருந்து விழும் வாந்தியையே நம்மிடம் மீண்டும் மீண்டும் கக்குவதால் இவர்களிடம் அரசியல் பேசுவதை விட வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்பதால் அரசியல் பேசுவதில்லை, இருந்தாலும் நண்பர் பெண்ணாகரம் பற்றி என் வாயால் தெரிந்துகொள்ள நிறைய ஆர்வத்துடன் இருந்தார் போல...

பொதுவாகவே இடைத்தேர்தல் என்பது அந்த தொகுதி மக்களுக்கு அடித்த லக்கிபிரைஸ், ஆளுங்கட்சி எளிதாக வெல்லும், 1989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்றதே தமிழகத்தி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் கடைசியாக வென்றது.

சென்ற அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் ஆரம்பித்த பண பட்டுவாடா திருமங்கலம் இடைத்தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து பின் தேர்தல் என்பதே பொதுமக்களின் வசூல் என்பதாக மாறிவிட்டது. மேலும் ஆளுங்கட்சி அதிகாரம், பணம் போலிஸ் என்று அனைத்தும் ஆதரவாக இருப்பதால் திமுக எளிதாக எல்லா இடைத்தேர்தல்களிலும் வென்று வருகிறது, மேலும் எதிர்கட்சியான அதிமுக கொட்டை எடுக்கப்பட்ட புளியாக இருப்பதால் இடைத்தேர்தல்கள் எந்த விதமான போட்டியையும் திமுகவுக்கு தருவதில்லை.

சென்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமக பெண்ணாகரம் இடைத்தேர்தல் களத்தில் பாமக முண்டா தட்டுவதால் பெண்ணாகரம் கொஞ்சம் களம் விறுவிறுப்பாக உள்ளது.


பெண்ணாகரம் தொகுதி ஒக்கேனக்கல் பகுதியை உள்ளடக்கிய ஒரு வறண்ட தொகுதி, குடிநீர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினை, ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காங்கிரஸ் கூட்டணி அட்ஜெஸ்ட்மெண்ட்க்காக விட்டுத்தரப்படாமால் நிறைவேறி இருக்குமானால் திமுக இங்கே ஓட்டு கேட்க்க கூட போகத்தேவையிருந்திருக்காது. பெரும்பாலான மக்கள் பெங்களூர் மற்றும் வெளியூர்களில் குடும்பம் குடும்பமாக கூலி வேலை செய்ய சென்றுள்ளார்கள் (20,000 பேர் தேர்தலுக்கு முதல்நாள் வாக்களிக்க பெண்ணாகரம் வந்துள்ளார்கள்).

இடைத்தேர்தலை புறக்கணியுங்கள், 49 ஓ காமெடிகள் என்று இருந்த மருத்துவர் இராமதாசும் பெண்ணாகரம் தொகுதியில் மட்டும் முண்டா தட்ட சில முக்கிய காரணங்கள் உண்டு.

1991 சட்டமன்ற தேர்தலில் ராஜீவ் படுகொலை அலையிலும் பாமக இரண்டாம் இடத்தை பிடித்து திமுகவை மூன்றாம் இடத்திற்க்கு தள்ளியது, 1996 சட்டமன்ற தேர்தலில் சிபிஐக்கு இரண்டாமிடம் கிடைக்க மூன்றாம் இடத்தில் அதிமுக, 2001 சட்டமன்ற தேர்தலில் பாமகவிலிருந்து வெளியேறிய திரு.பெரியண்ணன் சுயேட்சையாக போட்டியிட பாமக வெற்றிபெற சுயேட்சை பெரியண்ணன் இரண்டாமிடம் பெற திமுகவுக்கு மூன்றாமிடம்.

பெண்ணாகரம் தொகுதியில் முன்பு வீரப்பனார்( ஆம் சந்தனக்கட்டை வீரப்பன் தான், எந்தெந்த பொறுக்கிகளுக்கும், இன துரோகிகளுக்கும் எல்லாம் 'ர்' போடும்போது இறந்து போன அவருக்கு 'ர்' போட்டால் குறைந்தா போய்விடும்) வலம் வந்து செல்வாக்கு செலுத்திய தொகுதியும் கூட.

இது வன்னியர்கள் 65% நிறைந்துள்ள தொகுதி என்பதால் பாமக எளிதாக வெற்றிபெறும் என்றெல்லாம் கணிப்புகள் செய்யலாம் ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின் இடைத்தேர்தல் இலக்கணம் மாறிவிட்டது, மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்சித்ததும் அதன் செல்வாக்கை வன்னியர்கள் மத்தியில் குறைத்துவிட்டது சென்ற பொதுத்தேர்தலில் வன்னியர்கள் செறிவாக வாழ்ந்த தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருந்ததை தெரிவிக்கின்றது.

சென்ற தோல்விக்கு பின் பாமக தன் செல்வாக்கை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், அதனால் இம்முறை இங்கே கடும் போட்டியை காண்பிக்கிறார்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவர் இராமதாசின் நேரடி கண்காணிப்பில் கடுமையாக வேலை செய்கிறார்கள், 80களின் காலத்தில் வன்னிய கிராமங்களில் நுழைந்து ஒரு சேரை மரத்தடியில் போட்டு அமர்ந்து எல்லோரையும் அழைத்து பேசிய ஸ்டைலில் மீண்டும் ஒரு ரவுண்டு செய்து காட்டியுள்ளார்,

சிட்டி பாலிடிக்ஸ் செய்த பாமக மீண்டும் வன்னிய கோசத்துடன் வில்லேஜ் பாலிடிக்ஸ்னுள் இறங்கியுள்ளது அதெல்லாம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியலாம்.இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி ஏரியாவாக பெண்ணாகரம் இல்லாமல் போனதும் களத்தில் பாமக காட்டும் கடும் போட்டியும் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரத்திற்க்கு வராத முதல்வர் கருணாநிதியை பெண்ணாகரம் பிரச்சாரத்திற்க்கு இழுத்துள்ளது.

திமுகவின் அமைச்சர் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலுவின் களவேகமும் மருத்துவர் இராமதாசை கடுமையாக விமர்சிக்காமல் "நான் மிகவும் மதிக்கும் அய்யா ராமதாஸ்" என்றே ஒவ்வொரு இடத்திலும் வலிக்காமல் கத்தி சொறுகுவதும் மறைந்த உறுப்பினரும் ஏற்கனவே பாமகவில் இருந்து விலகி போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றவருமான பெரியண்ணனின் மகன் திமுக சார்பில் போட்டியிடுவதும் திருமங்கலத்தையெல்லாம் தாண்டி அள்ளிவீசப்படும் பணமும் ஆளுங்கட்சி அதிகாரமும் அடிதடி மற்றும் போலிஸ் பலமும் உள்ளூரில் பாமக நிர்வாகிகளை உறுவியதுமென தெம்பாக இருக்கிறார்களாம்.

தர்மபுரி பகுதியை சேர்ந்த பதிவரிடம் பெண்ணாகரம் பற்றி கேட்ட போது பாமக மாடு கழுவறாங்க, திமுக ஆட்கள் 500 ரூபாயால் தான் குண்டி துடைக்கிறாங்க என்றார், இரண்டு கட்சிகளும் அதன் வேலைகளை சரியாக செய்திருந்தால் மாடும் கழுவியிருக்க தேவையில்லை, ரூபாய்களை அள்ளி தெளித்திருக்கவும் தேவையில்லை.

பணத்தை விழுங்கும் பலம் இனத்துக்கும்
இனத்தை விழுங்கும் பலம் பணத்துக்கும்
உண்டு என்பதால் பார்க்கலாம் யாரை யார் விழுங்குகிறார்கள் என்று.

என்னது அதிமுக, விஜயகாந்த் கட்சி பற்றியா? அவங்கலாம் போட்டியிடுறாங்களா என்ன?


இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லையென்றாலும் கடும் போட்டியையும் கணிசமான வாக்குகளும் பெற்றால் பாமக ஒரு புதிய ஃபார்முலாவை முயற்சிக்கலாம், எப்படியும் திமுக-அதிமுக எதனுடன் கூட்டணி வைத்தாலும் 20+ தொகுதிகளும் முழுக்க வெற்றி பெற்றாலும் 20 எம்.எல்.ஏக்கள் தான் கிடைக்கும் வாய்ப்புண்டு, அதற்க்கு பதில் வலுவாக உள்ள 40 தொகுதிகளை தேர்ந்தெடுத்து முழு பலத்தையும் காண்பித்து வேலை செய்தால் அதே 15-20 தொகுதிகளை பெற வாய்ப்புண்டு, முக்கியமாக பணம் செலவு செய்ய வேண்டும், பணம் செலவு செய்யவில்லையென்றால் எல்லாம் வீணாகிவிடும், அட முதலீடென்று ஒன்று உண்டு இல்லையா?

பின் குறிப்பு: காலையிலேயே ஆரம்பித்துவிட்ட மண்டை உடைப்புகள் மறியல்கள் அடிதடிகளுடன் இரவு 7:30 மணியளவில் 82.34% வாக்குப்பதிவுடன் உள்ளது பெண்ணாகரம் தொகுதி

சாரு பாவம் ப்ளீஸ்

சாரு நம்பினார், இப்போ அந்த ஆள் மோசம் செய்துவிட்டான் இதற்க்கு சாரு என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த போஸ்ட் முந்தா நாள் இரவு 8.29க்கு வந்திருந்தா கூட சூப்பரா இருந்திருக்கும், இப்போ இது சப்பைகட்டு மாதிரியும் மீ த எஸ்கேப்பு மாதிரியும் இருக்குது.

சாரு குழந்தை மாதிரி சாருவின் எழுத்து கேணத்தனமா இருக்கலாம், லூசுத்தனமா இருக்கலாம், பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் எழுத்தில் ஒரு உண்மை இருக்கும் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், அந்த உண்மை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சாருவின் எழுத்தில் அந்த ஆள் என்ன நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் பார்க்காமல் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், சாரு அவர் பொண்டாட்டியை அம்மனாக பார்க்கிறார் என்றால் நிஜமாகவே அம்மனென்று அப்படி நம்புவார்... அது போல இந்த ஆளையும் கடவுள் என்று நம்பியிருக்கார்...

[அத்தனை அய்யோக்கியத்தனங்களையும் தெரிந்தும், ஆதரிக்கும் பிரியாணி குஞ்சுகளை விட தெரியாமல் ஆதரித்து தெரிந்த பின் திட்டும் இந்த ஆள் தப்பில்லை]

இதோ பாருங்க இந்த கடைசி வரியிருக்கே சிவப்பு நிறம் அடித்ததும் அதை முதலில் எழுதி பிறகு அடிச்சேன், ஏன்னா அது என்னளவில் உண்மை தான், ஆனால் பொலிட்டிக்கலி கரெக்ட்னஸ்க்கோ அல்லது யாரையாவது குத்துமோ அவர்கள் மனம் புண்படுமோ அதனால் நாளை வேறு எதற்காகவாவது ரீ ஆக்ட் செய்வார்களோ என்று டெலிட் செய்துவிட்டேன்... (திரும்ப உதாரணத்துக்கு போட்டுவிட்டேன்) ஆனால் சாரு இப்படியெல்லாம் கிண்டல் செய்வார்கள் என்றோ பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் க்காகவோ இதை செய்ய மாட்டார், தான் அப்போது எதை நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார்... அது தான் அவர் எழுத்தின் உயிர்.. ப்ளீஸ் சாரு பாவம்...

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !

ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...



நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321

நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.

அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.

ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.

இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.



ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு அப்பன் உரிமை கொண்டாடும் திமுக

ஜெயமோகன் அவர்களின் திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? என்ற தலைப்பில் இப்படியான ஒன்றை முன்வைக்கிறார்...

"இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். "

இதே கட்டுரையில் மிகக்கடுமையாக திராவிட இயக்கங்கள் மீதான விமர்சனத்தை வைக்கிறேன் என்று தன் காழ்ப்புணர்வை பெரியாரின் மீது வைக்கிறார்... அதை ஒரு தந்திரத்துடன் செய்கிறார் ஜெயமோகன் செய்ய நினைப்பது ஷங்கர் படம் போல பல உண்மைகளின் நடுவே ஒரு பொய்யை சொறுகுவது, அதாவது இலஞ்சம் வாங்கும் ஆபிஸ் உண்மை, செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, அவருக்கு பின் இறப்பு சான்றிதழ் வாங்க துன்பப்படும் மனோரமா உண்மை, இதில் கொண்டுவது சொறுகும் இந்தியன் தாத்தா கற்பனை, மற்ற உண்மைகளை நம்பும்போது இந்தியன் தாத்தா என்ற கற்பனையை நம்ப வேண்டும், அது போல பெரியாருக்கு பிந்தைய நீர்த்துப்போன‌ திராவிட இயக்கத்தை குறிப்பிட்டு பெரியாரை திட்டுகிறார்.

இது தொடர்பான மேல் விபரங்களை ஆதாரங்களுடன் சுகுணாதிவாகரும், தமிழச்சியும் தொடருகின்றார்கள்... அவர்கள் அந்த இழையில் தொடர நான் இதே ஜெயமோகன் பெரியாரில் ஆரம்பித்து திராவிட இயக்கங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் மீது வைக்கிறேன்...

இது ஒரு முக்கியமான கட்டம், இந்த நிலையில் நாம் நம் நம்பிக்கைகளை மறு மதிப்பீட்டிற்குள்ளாக்க வேண்டிய நிலை. ஏனெனில் தமிழினத்திற்க்கு ஆதரவான ஒரு முற்போக்கு செயல்பாடுகளுடைய ஒரு இயக்கம் தற்போது இல்லை, ஆனால் அம்மாதிரியான ஒரு அரசியல் சமூக இயக்கத்தை கட்ட தடையாக இருப்பது வெளியாட்கள் அல்ல, நாமே தான், ஏனெனில் முற்போக்காக இல்லாத ஒரு இயக்கத்தை வெறும் கோஷங்களை மட்டுமே முன்னிறுத்தும் திமுக வை ஒரு முற்போக்கு இயக்கமாகவும் கருணாநிதியை தமிழ் ஆதரவு தலைவனாகவும் கொண்டுள்ள ஒரு பொய்யான பிம்பமே இந்த தடையை ஏற்படுத்துகிறது, இதை உடைத்தால் மட்டுமே நம்மால் முன்னோக்கி நகர இயலும்.



அதிமுக,தேமுதிக போன்றவற்றை தள்ளிவிட்டு திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் முற்போக்கு திமுக 1949லிருந்து 2009 வரையிலான இந்த 60 ஆண்டுகளிலும் மேலும் ஆட்சியில் இருந்த 19 ஆண்டுகளிலும் திமுக பெற்றெடுத்த பிள்ளைகள் என்ன என்று தோண்டிபார்த்தால் திமுக அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் அப்பனாக மாறியுள்ளது.

தமிழ் சமுதாயத்தின் முற்போக்கு புரட்சிகர நகர்வுகளை தமிழ் நில மீட்சி போராட்டங்கள், தமிழின மொழி மீட்சி மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம், சாதிய ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தலித்திய ஆதரவு நடவடிக்கைகள் , இடஒதுக்கீட்டு ஆதரவு / அரசு தனியார் வேலைவாய்ப்புகளை பெறுதல் என்ற நான்கு முக்கிய நிலைகளை வைத்து என்னளவில் பார்க்கிறேன், இதில் இன்னும் பல இருக்கலாம் அதிலும் ஈழத்து தமிழனக்கு செய்த துரோகப்பட்டியலை கணக்கிலேயே எடுக்காமல் மற்றவற்றை மட்டும் பேசலாம்.

இவைகளில் திராவிட இயக்கங்களின் ஒரே ஒரிஜினல் பீஸ் ஆன திமுகவும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர்கள் எந்த அளவிற்க்கு இந்த நான்கு முக்கிய நகர்வுகளில் பங்கேற்றார்கள் என பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் திமுகவுக்கான பெயர் மட்டும் என்னவோ முற்போக்கு இயக்கம், சாதியொழிப்பா, தமிழ் மொழி இன வளர்ச்சியா, இந்தி எதிர்ப்பா எல்லாவற்றிற்கும் இவர்களே அத்தாரிட்டி போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மூளையில் மஞ்சளும் கருப்பு சிவப்பும் அடைத்துக்கொண்டிருக்கும் வரை நாமும் அதை நம்பிக்கொண்டு திரிந்து கொண்டிருப்போம். இதிலும் இடைச்செறுகலாக ஏன் இவ்வளவு தீவிரமாக ஆராயாமல் ஆதரித்தோமென்று பார்த்தால் அதற்கான காரணமாக பார்ப்பனர்களே இருந்திருப்பார்கள், தேவையேயின்றி அவர்கள் திமுகவையும் கருணாநிதியையும் மூர்க்கமாக அர்ச்சிக்கும் போது நாம் மேலும் மேலும் திமுகவையும் கருணாநிதியையும் நோக்கி தள்ளப்படுகிறோம், ஆனால் பார்ப்பனர்கள் மூர்க்கமாக எதிர்க்கும் அளவிற்க்கு திமுகவும் கருணாநிதியும் worth இல்லை, பெரியார் நடத்திய திராவிடர் கழகமும் பெரியாரும் தான் பார்ப்பனர்களை நொறுக்கி தள்ளியவர்களே தவிர இவர்கள் அல்ல.

மொழிவாரி மாநிலங்களாக பிரியும் போது தமிழ் நில மீட்சி போராட்டங்கள் எதுவுமே திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை, மொழி வாரி மாநிலத்தால் தமிழகம் இழந்த திருப்பதி, சித்தூர், கோலார், தேவிகுளம்,பீர்மேடு, பாலக்காடு என்று பெரிய பட்டியலே இருந்தாலும் தமிழகம் இன்னும் இழந்துவிடாமல் மீட்டெடுக்கப்பட்ட திருத்தனி, சென்னை, முழுக்குமரி மாவட்டம் என தமிழர்களின் தேசிய நிலத்தை மீட்டெடுத்தவர்கள் ம.பொ.சி, நேசமணி பொன்னையா மற்றும் பலர், பார்ப்பன பத்திரிக்கையான தினமலரும் கூட குமரி மாவட்ட மீட்பில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்துள்ளது அதனால் கேரளாவில் அடக்குமுறைகளை அந்த பத்திரிக்கை சந்திக்க நேரிட்டது. ஆனால் இதில் எதிலும் திமுகவோ அல்லது அண்ணாதுரை கருணாநிதி போன்றோர்களின் பங்களிப்போ கிட்டத்தட்ட இல்லாமலே இருந்திருக்கிறது.

இழந்த தமிழ் தேசிய நிலத்தை மீட்டதோ இந்த போராளிகள் ஆனால் திமுகவின் ஆட்சி காலத்தில் கட்சத்தீவை இந்திய அரசு தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாத இலங்கைக்கு தாரை வார்த்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் வெறும் சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றியதோடு நின்று விட்டது... இனி எந்த காலத்தில் நம்மால் தமிழ் தேசிய நிலமான கட்சத்தீவை மீட்கப்போகிறோமோ?

அடுத்ததாக தமிழ் மொழி எழுச்சி அதன் வரலாற்றை மீட்டல் மணிப்பிரவாள நடையொழித்து தனித்தமிழ் போன்றவற்றில் பெரும் பங்களித்தவர்கள் பாவாணர் போன்ற தமிழறிஞர்களே அன்றி திமுக அல்ல, திமுகவின் அறிஞர் அண்ணாவின் தொடக்ககால எழுத்துகள் மற்றும் பேச்சுகளை படித்தால் தனித்தமிழ் என்பது இல்லாமலிருப்பது புரியும், தனித்தமிழெசுச்சியை கொண்டு வந்த தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்களின் நடையை நகலெடுத்து copy cat ஆக கொண்டு வரப்பட்டது தான் திமுகவின் தமிழ் மேடைப்பேச்சுகள் ஆனால் இந்த தனித்தமிழ் திமுக பெற்ற பிள்ளை அல்ல, பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் பெற்ற பிள்ளை, சரி அந்த பிள்ளையை தத்தெடுத்துக்கொண்டார்கள் என்றாலும் கூட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக திருடிக்கொண்டது.

தமிழ் அறிஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டமாக அடக்குமுறைகளை எதிர்த்து போரிட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைசியில் பந்தியில் வந்து சாப்பிட உட்கார வந்தவன் தாலியெடுத்து கட்டிவிட்டு மாப்பிள்ளையான கதையாக போராட்டம் வெற்றி பெற போகும் கடைசி நேரத்தில் திமுக தன் ஆதரவை தெரிவித்து போராட்டத்தின் வெற்றியை திருடி அதை ஓட்டாக்கி ஆட்சியை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதை தூண்டிவிடுவது திமுக என்ற குற்றச்சாட்டை அரசு வைத்த போது மாணவர்கள் போராட்டத்தை நாங்கள் தூண்டவில்லை, மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு புத்திமதி கூறியவர் அறிஞர் அண்ணா. இப்படியெல்லாம் மாணவர் போராட்டத்தை எதிர்த்துவிட்ட கடைசியில் மொய் வைப்பது போல ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்தை நிறைவேற்றியது, இப்படி திருடியதாலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக பெற்ற பிள்ளையாகிவிடாது...

திமுக செய்ததெல்லாம் பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலைகளை மட்டுமே, தமிழ்நாடு என்று பெயர்வைத்தது, பெரியார் உருவாக்கிய சீர்திருத்த திருமணத்திற்க்கு அங்கீகாரம் அளித்தது என அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் வேலைகளையே...

இடஒதுக்கீடு தொடர்பாக அதிகாரத்திலிருந்த திமுக கழற்றியவைகள், சாதிய ஒழிப்பில் ஒரே நேரத்தில் சாதிய எதிர்ப்பாளனாகவும் சாதிய ஆதரவாளனாகவும் நடிக்கும் இரட்டை முகங்கள், தமிழ் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி போராட்டங்களை அதிகாரத்திலிருந்த காலத்தில் மிக மூர்க்கமாக அடக்குமுறைகளை ஏவி முறியடித்தாலும் இன்னமும் நாக்கூசாமல் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லும் பொய்கள், வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்து பரப்பிய இயக்கமாக திகழும் இடங்கள் என திமுக திருடியவைகள் மேலும் தொடரும்...

ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?

ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?













சொல்கிறார்கள் ஓட்டுப்பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோமாம்

ஆம் தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
ஓட்டை விற்ற பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
தலைமை விசுவாசத்தை விட முடியா
தொண்டர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
புரட்சி பேசி
அதிகாரத்துக்கு அருகாமையில் இருக்கும்
அறிவுஜீவி பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
குத்திக்கொள்ள ஆயுதம் தந்தவனுக்கு
கொஞ்சமும் வலிக்காமல் கவிதை எழுதிய
கவிஞர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
வாய்வலிக்காமல் மனித நேயம் பேசியவர்கள்
வாய்மூடி மெளனித்திருந்த
மனிதஉரிமை ஆர்வல பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

இன்னும் எந்தெந்த பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோம் என கணக்கு
பார்க்க துணிவில்லை எமக்கு

இன்னும் எத்தனை அஞ்சலிகள்
நினைவிலிருக்க போகிறாயோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திங்கள்(மாதம்)களின் சரியான தமிழ் பெயர்கள்

தமிழ் திங்கள்(மாதம்)களின் பெயர்களை சித்திரை, வைகாசி என்று தான் மனனம் செய்திருந்தோம் சிறுவயதிலிருந்தே, ஆனால் அவைகள் எல்லாம் சரியான தமிழ் பெயர்கள் அல்லவாம், மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டும்... சரியான தமிழ் திங்கள்களின் பெயர்கள் கீழே

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

ராசி என்பதன் தமிழ் சொல் - ஓரை

நன்றி திரு வெ யுவராசன்.

இங்கே படியெடுத்து போட்டதன் காரணம் நானும் ஒரு முறை மனனம் செய்து கொள்ளத்தான்

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது


ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்


பின்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் தேவை

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் ஏதேனும் தமிழில் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விசைப்பலைகை(கீ போர்ட்) விசைகள் SHIFT Enter CTL பற்றிய விளக்கங்கள், Notepad பயன்படுத்துவது, மவுஸ் பயன்படுத்துவது போன்ற அடிப்படையான பாடங்கள் தமிழில் கிடைத்தால் தந்து உதவவும்.

தேடுபொறிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, எனவே உங்களுக்கு தெரிந்தால் இங்கே கொடுக்கவும்.

நன்றி

பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பையன்களுக்கு மத்திய மாகாண
மந்திரிகளாக வந்து சேர

மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு
தொழிலதிபர்களாக வந்து சேர

உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை
பதவிகள் வந்து சேர

எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம்
பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம்
பணம் வந்து சேர


இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா?

அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை
விட்டு சொல்ல சொல்வோம்
ராஜதந்திரமென குரைக்க சொல்லலாம்

இதெல்லாம் இனத்துரோகி என்ற பெயர் வருமா?

அடப்போய்யா பாராட்டி பிழைக்கும்
ஓணாண்டிபுலவர்களை விட்டு நடத்துவோம்
ஒரு மொழி மாநாடு

இதெல்லாம் செய்தால் கோழையா?

அடப்போய்யா பொழைக்க தெரியாதவனே
எவன் காலை நக்கியும் பிழைக்க தெரியனும்

துரோகிகளும், பிழைப்புவாதிகளும், கோழைகளும்
நிறைந்த இந்த கேடு கெட்ட இனம்
இன்னமுமா இந்த மண்ணில் இருக்கு
என்றே வியந்திருக்கேன்
இவ்வினம் இம்மண்ணில்
பிழைத்திருப்பதே உன் போன்ற
வீரர்களாலும்
அவர்களின் ஈடற்ற தியாகங்களாலுமே


உன் போன்ற ஒரு தலைவன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு வீரன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு மனிதன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

வீரர்களை பார்த்ததில்லை
மாவீரர்களையும் பார்த்ததில்லை
கேட்டிருக்கேன், கதைகள் பல கேட்டிருக்கேன்
எம் இன வீரர்களின் கதைகள் பல படித்திருக்கேன்
இதோ உன் காலத்திலேயே நாங்களும் வாழ்ந்திருக்கோம்


'ஈன'த்தலைவர்களை
எல்லாம் 'இன'த்தலைவர்களாக
நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கேன்

ஏ பிழைக்கத்தெரியாதவனே
நீ தான் எம் இனத்தலைவன்
தமிழனத்தலைவன்

நீ இருந்தாலும் இல்லையென்றாலும்
எப்போதும் நீ வாழ்கிறாய்
எங்கள் நெஞ்சிலும்
எம் இன சரித்திரத்திலும்

"ஈழம்- மௌனத்தின் வலி" யில் சைத்தான்களின் காவியம்!

கோமாளிகள் வசனம் பேசின
அவை கவிதையானது!
தத்துபித்து ´பஞ்ச்´ டயலாக்குகள்
வீர வசனங்களாயின,
அவை வியாபாரமானது.
ஏகாதிபத்யம் மனிதநேயத்தை
சாமியார்களின் போதனைகளாக்கின!
அவை ´அன்பே´ சிறந்தது.
தீவிரவாதம் ஒழியட்டும்,
´அன்பே´ மனிதனை ஆளட்டும் என்கிறது!

யுத்தத்தில் இறந்த ஈழத் தமிழர்களின் ஒரு மசுறுக்கு கூட இந்த புத்தகத்தை சமர்ப்பிக்க முடியாதபோது, ஈழத்தமிழர்களின் வலிகளை வியாபாரமாக்க முயலும் வியாபாரிகளின் குரூரத்தை நாம் அம்பலப்படுத்தவே முயல்கிறோம். உண்மையான உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டும்.

என்று பொங்குகிறார் தோழர் தமிழச்சி, மேலும் முழு கட்டுரையும் படிக்க செல்லுங்கள் இங்கே

பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்


இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...

எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...

புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று

வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது

:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.

ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்

தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...

இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...