அழகிய தமிழ் பெயர் தேவை
நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...
நித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்
நன்றி
கடலூர் காட்டானின் களத்துமேடு...
எமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...
நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...
நித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்
நன்றி
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, August 05, 2010
21
பின்னூட்டங்கள்
குறிசொல்: தமிழ் பெயர்
சவுக்கு வலைப்பதிவில் ஆதாரங்களுடன் ஊழலுக்கு எதிராக தம் சவுக்கை சொடுக்கியிருப்பார்கள், இதில் திரு சங்கர் அவர்கள் எழுதியுள்ளார், உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் அதிகாரங்கள், நக்கீரன் பத்திரிக்கையின் முக்கிய பிரமுகர் காமராஜ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ளார், சவுக்கு சங்கர் அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறேன், இது தொடர்பாக பதிவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் இந்நிலை நாளை எந்த வலைப்பதிவருக்கும் வரும் அபாயம் உள்ளது.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, July 23, 2010
6
பின்னூட்டங்கள்
குறிசொல்: சவுக்கு
தோழர் சீமான் கைதுக்கு எமது கடும் கண்டனங்கள், அவர் பேசியது தொடர்பாக விவாதத்தை முன்னெடுக்க வேண்டும், அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது சிங்களனுக்கு மட்டும் பொறுந்துவதில்லை தமிழனுக்கும் பொறுந்துமே... தமிழக மீனவர்களை சுட்டபோது இது நாள் வரை புலிகளுக்கு டீசல் கடத்துகிறார்கள் பெட்ரோல் கடத்துகிறார்கள் பேரிங் கடத்துகிறார்கள் பேரிக்காய் கடத்துகிறார்கள் என்றார்கள் இப்போது தான் புலிகள் என்ற இயக்கமே இல்லை என்கிறார்களே இப்போது ஏன் சுடுகிறார்களாம்.
வேட்டை சமூகம் வேளாண்மை சமூகம் ஆனபோது அரசு செய்த முதல் செயல் மக்களிடமிருந்த ஆயுதங்களை களைந்து அதை படைகளிடம் தந்தது, மக்களின் பாதுகாப்பை படைகள் ஏற்றுக்கொண்டதாக பொருள் ஆனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய படைகள் ஏற்கவில்லை என்னும் போது தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய மானங்கெட்ட கருணாநிதி(முன்பு ஜெயலலிதா அரசும்) அரசு மீண்டும் கடிதம் எழுதும் வேலையில் இறங்கும்.
கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதால் மிக சுருக்கமாக எழுதியுள்ளேன், குடிமக்கள் ஏந்தவேண்டிய ஆயுதம், அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார், எம்மாதிரியான காலகட்டத்தில் சீமான் பேச்சுமுக்கியத்துவம் பெறுகிறது என விரிவாக எழுதுகிறேன்.
தற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல, தமிழ் பாசிஸ்ட்களின் தேவையை இந்திய, தமிழக, இலங்கை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, July 12, 2010
7
பின்னூட்டங்கள்
குறிசொல்: சீமான் கைது கண்டனங்கள்
என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை, அதை படி(காப்பி) எடுத்தும் வைக்கவில்லை.. யாரேனும் படி எடுத்து வைத்திருந்தால் மீண்டும் இணையத்தில் ஏற்றி வையுங்கள்... உங்களுக்கு புண்ணியமாக போகும்.
இடையறாத போராட்டத்தில் இழந்து போன இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்காமல் விட்டுப்போன தமிழ் இலக்கண இலக்கியங்களை தாய் தமிழகத்திலிருந்து புலமைபெற்ற ஆசிரியர்களை தருவித்து கற்றுக்கொண்டனர் அந்த ஐந்த ஆண்டுகளில்... அவர்கள் வீழ்ந்த பின் வெகு சன ஊடகங்களில் பெயர்பலகையெங்கும், அரசு எங்கும் அதிகாரமெங்கும், பள்ளியெங்கும் அந்த தரணியெங்கும் அவர்கள் தனித்தமிழ் வளர்த்திருந்த செய்தி வெளியானபோது வீழ்ந்தது அவர்கள் மட்டுமல்ல தமிழும் சேர்ந்தே வீழ்ந்தது என்று புரிந்தது... அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...
அவர்கள் ஆண்ட போது அந்த மண்ணில் கசிப்பு(சாராயம்) இல்லையாம், ஆனால் இங்கோ டாஸ்மார்க் சாராயத்துக்கு செம்மொழி மாநாட்டின் 5 நாளில் மூன்று மாத விற்பனையை பெற வேண்டுமாம் சேல்ஸ் டார்கெட் வைக்கிறார்கள்...
அன்று யாழிலே நடந்த உலகத்தமிழ் மாநாடு, அதை சீர்குலைக்க சிங்கள அரசும் தமிழ் துரோக கைக்கூலிகளும் முயற்சிகள் எடுத்த போதும் மாநாட்டில் வரிசையாக வந்து "தள்ளாடாமல்" எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் கலந்து கொண்டார்கள்... இன்றும் செம்மொழி மாநாட்டில் கோவை மாநகரமே டாஸ்மார்க்கின் சேல்சினால் தள்ளாடுகிறதாம்...
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டுமென்று சொல்லி சொல்லியே வீழ்த்திட்டானுங்களேயா தமிழையும் தமிழனையும்...

தமிழையும் தமிழரையும் வாழவைத்த அந்த தரணியெங்கும் சிங்களமும் அவன் சிதைக்கும் தமிழும் தட்டியிலிருக்க... தமிழையும் வாழவைக்காமல் தமிழரையும் வாழவைக்காமல் எம்மொழியே செம்மொழியே என்று ஏனடா தட்டி வைக்கிறீர்கள்..

ஆக்கம்
குழலி / Kuzhali
at
Wednesday, June 23, 2010
42
பின்னூட்டங்கள்
குறிசொல்: செம்மொழி மாநாடு புறக்கணிப்பு
வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!
ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
பார்ப்பன பரவலுக்கு எதிரானவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
சிங்கள வெறியர்களின் உச்சந்தலையில் ஓங்கியடித்தவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே
வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று
ஆரிய அதிகாரத்துக்கெதிரான
சமணர்கள் ஆயுதம் தமிழ்
சமணமுனிகளின் கொடூரத்திற்க்கெதிரான
பக்தியக்கத்தின் ஆயுதம் தமிழ்
பார்ப்பன அதிகாரத்துக்கெதிரான
ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம் தமிழ்
இந்திவெறியர்களின் ஆதிக்கபரவலுக்கெதிரான
தமிழர்களின் ஆயுதம் தமிழ்
சிங்களவெறியர்களின் கொடூரத்துக்கெதிரான
ஈழத்தமிழர்களின் ஆயுதம் தமிழ்
வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று
ஆனால் இன்றோ
துரோகிகள் சொல்கிறார்கள் தமிழே
நீ அவர்கள் கையிலாம்...
உன் மகன்கள் அங்கே
அம்மணமாக்கப்பட்டு
தலையில் சுடப்படுகிறார்கள்
உன் மகள்கள் அங்கே
அம்மணமாக்கப்பட்டு
இடையில் சுடப்படுகிறார்கள்
உன் மகன்கள் கருமாதியில்
உன் மருமகள்கள் தாலியறுக்க
உனக்கோ இங்கே துரோகிகள்
நடத்துகிறார்களாம்
அறுபதாம் கல்யாணம்
அதிகாரத்துக்கு அருகில்
இடம்பிடிக்க
ஓடுகின்றதொரு கூட்டம்
புறங்கைய நக்குவதில்
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்
ஆனால் வெறும் பிரியாணி
துண்டுக்கே
குலைக்கிறதொரு கூட்டம்
அந்த பிரியாணியில்
கிடக்கும் கால்களை
மெதுவாக கடியுங்கள்
அது எம் தமிழனின் கால்கள்
அந்த பிரியாணியில்
கிடக்கும் நெஞ்செலும்பை
மெதுவாக பிய்யுங்கள்
அது எம் தமிழனின் நெஞ்செலும்பு
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
நம்பிக்கைதுரோகி
தம் கையிலிருக்கும் தமிழனின்
ரத்தத்தை கழுவுகிறான்
நரிச்சிரிப்புடன்
--------------------
ஏதோ ஒரு பதிவிலே படித்தேன்... கீழ்கண்ட வரிகளை
நெஞ்சை உலுக்கிய உண்மை அது
ஈழத்தில் கொல்லப்பட்ட
தமிழர்களின் கல்லறைகளில்
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால்
கொல்லப்பட்டவர்கள் என்று
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, June 22, 2010
11
பின்னூட்டங்கள்

ராவணன் ஆம்... இந்த ஒரு படம் தோற்றுக்கொண்டிருக்கும் தமிழனின் மிக மிக சிறிய வெற்றிக்கு காரணம், இரத்தவெறி இந்திய அரசு வாங்கிக்கொடுத்து சிங்கள இனவெறி அரசு கொழும்பில் நடத்திய இந்திய ஆஸ்கார் எனப்படும் IIFA வின் விருது வழங்கும் விழா சொதப்பியது, ராவணன் படம் மட்டும் தயாரிப்பில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.
இந்திய சூப்பர்ஸ்டார் அமித்தாப்பச்சனின் மகன் மற்றும் மருமகள் நடித்தப் படம், தமிழகத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராய் படம் பிரச்சினைக்குள்ளாகக்கூடாது என்பது மட்டுமின்றி இனி தமிழ்திரையுலகத்தின் கதவு ஐஸ்வர்யாராய்க்கு அடைபட்டுவிட்டு விடக்கூடாது என்பதாலும் அமிதாப்,அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் கொழும்பில் நடைபெற்ற இஃபாவை புறக்கணிக்க அதன் தொடர்சியாக இஃபா விழா சொதப்பலானது...
இந்த வணிக பயம், தமிழர்கள் விரும்பாத எதையும் செய்ய முற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வணிக பயம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இதை ஏற்படுத்த வேண்டும்...
இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.
அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, June 19, 2010
14
பின்னூட்டங்கள்
குறிசொல்: ராவணன்
மாபலி விருந்து அழைப்பு! - மாலதி மைத்ரி கவிதை
ஆன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்விருந்தை வழங்குபவர்கள்
ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.
குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!
நன்றி
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, June 11, 2010
6
பின்னூட்டங்கள்
குறிசொல்: கவிதை, செம்மொழி மாநாடு புறக்கணிப்பு, மாலதி மைத்ரி
எக்காரணம் கொண்டும் சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை எக்காரணம் கொண்டும் பலவீனப்படுத்தவோ அல்லது மையப்பிரச்சினையிலிருந்து வேறுபகுதிக்கு பிரச்சினை திரும்ப கூடாது என்றுமே வினவுவின் சில செயல்பாடுகள் குறித்து எமக்கு கருத்துவேற்றுமை இருந்தாலும் பொறுமை காத்து அடுத்தவாரத்திற்க்கு அதைப்பற்றி விவாதிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன்.
சந்தனமுல்லைக்கு நீதி வழங்குகின்றோம் பேர்வழி என்று வினவு நாட்டாமைகள் சொம்பை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகை ஆக்கிரமிக்க முயற்சித்து பதிவுலகை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றார்களோ என்கிற சந்தேகம் உண்டு...
இங்கே வலையுலகில் மிகதைரியமாக கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ராமதாஸையும், திருமாவையும் இன்னபிறரையும் கடுமையாக விமர்சிக்க இயலுகிறது என்றால் விமர்சிப்பவர்கள் வீராதி வீரர்கள், புரட்சிகர சூரர்கள் என்று பொருள் அல்ல, இவர்களெல்லாம் நம் பக்கம் பார்வையை திருப்பவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை என்று பொருள். அமைச்சர் ஆ.ராசாவும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், எஸ்.வீ.சேகரும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், அதற்காக அவர்கள் நம்மை போன்ற பதிவர்கள் ஆகிவிடுவார்களா? ரேடான் டிவியும் தான் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், தொழில்காரர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தங்கள் அரசியலையும் தொழிலையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.
வினவு யார்? வலைப்பதிவரா? ம.க.இ.க.வா? குழுப்பதிவா? குழுப்பதிவென்றால் அதை ஆரம்பித்தவர் யார்? ஏன் ராஜ்வனஜ்,தியாகு போன்ற முகம் காட்டிய தோழர்களாக இல்லாமல் முகம் காட்டாத அசுரன்,அரைடிக்கெட்டு இன்னும் என்னென்னமோ பெயரில் வருகிறார்கள்? வலைப்பதிவில் அரசியல் உண்டு, ஆனால் வலைப்பதிவே அரசியலுக்காக என்றில்லை...
நான் ம.க.இ.க வை விமர்சிக்கும்போது எனக்கு வந்த மிரட்டல் போன்களுக்கு நியாயம் கேட்க யாரிடம் போவது? தியாகுவிற்க்கு வந்த மிரட்டல்களுக்கு எங்கே போவது? வினவிடமா? பதிவுலகில் இன்று வெறும் மிரட்டல்களோடு நிற்கும் இந்த வினவு கும்பல் நாளை மகஇக வை விமர்சித்து எழுதுபவர்களுக்கு வேறுவிதமான தொல்லை தந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஒருவேளை தான் சொல்கிறேன் ம.க.இ.க வை எதிர்கொள்ளும் அளவிற்க்கு ஆற்றலுடைய கட்டப்பஞ்சாயத்து ஆட்களையோ அல்லது வினவு கும்பலையும் விட அதிகமான பலமுள்ள விடுதலைசிறுத்தைகள்,பாமக,திமுக,அதிமுக கட்சிகளின் ஆட்களையோ முடிந்தால் அழைத்துக்கொண்டு பேசப்போகலாமா?
அப்போ இப்போதிருக்கும் பதிவுலக சுதந்திரம் என்ன ஆகும்? வேண்டாம் இந்த வினவு அரசியல் ரவுடி கும்பலை நாட்டாமை செய்ய அனுமதித்தால் ஒட்டகம் கூடாரத்தில் புகுந்த கதையாகிவிடும்...
இன்னும் லீனாமணிமேகலை பற்றி வினவின் ரவுடித்தனம், சந்தனமுல்லையையும் விட மூர்க்கமாக சித்திரவதைகளை அனுபவித்த போலி பிரச்சினையின் போது கள்ள மெளனம் காத்த வினவு கும்பல், அப்போது அது தொடர்பாக ஒரு தோழரிடம் கேட்டபோது நானும் கேட்டேன் தோழர் இது பற்றி எழுதினால் உலகில்வேறு பிரச்சினையே இல்லையா என்பது மாதிரி ஆகிவிடும் அதனால் வேண்டாம் என்றார்கள் என கூறியது, மேலும் விரிவாக பலவிடயங்களை அடுத்த வாரத்திற்க்கு வைத்திருந்தேன் ஆனால் தற்போது அதையெல்லாம் எழுத நேரமின்றி பதிவு போடும் நிலை.
பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...
இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்
பிற்சேர்க்கை
-----------
சந்தனமுல்லை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதில் பங்கு வகித்த வினவுவின் நடவடிக்கைகளை சந்தனமுல்லை விசயத்தில் நிச்சயம் நான் ஆதரிக்கிறேன்... இந்த பிரச்சினையை நான் வேறு திசையில் திருப்ப கூடாது என்பதால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன்... அடுத்த வாரம் வினவு ஆணாதிக்கம் பற்றி பேச இருக்கும் தகுதிகள், லீனா மணிமேகலையிடம் மகஇக கும்பல் நடந்துகொண்ட ரவுடித்தனம், வலையுலகிலிருந்து பல்வேறு பெண்பதிவர்களை விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, June 04, 2010
53
பின்னூட்டங்கள்
பல மர்ம முடிச்சிகளோடும் சற்றும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களோடும் இடைவேளை விட்டு பிறகு மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் பதிவர் சண்டையின் போது சிலரின் பஸ்ஸ்ஸ், டிவிட்டர், ஜிடாக் ஸ்டேட்டஸ் மெசேஜ் கமெண்ட்டுகள் மற்றும் சில ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு....
நானும் ஏற்கனவே இம்மாதிரி சீரியசான சீரியல் சண்டை போட்டுள்ளதால் எனக்கும் அந்த வலிகளும் எரிச்சலும் தெரியும், ப்ளீஸ் இது சும்மா லைட்டாக்குவதற்க்கே, யாரையும் புண்படுத்த அல்ல...
1.பாலபாரதி: வஜ்ரா வண்டி, RPF, போலிஸ் கமிஷனர்கிட்டலாம் சொல்லியாச்சு ஏற்பாடெல்லாம் முடிஞ்சிருச்சி?
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, June 03, 2010
10
பின்னூட்டங்கள்
"டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா" என்று வரும் இடத்தோடு இந்த வீடியோவை நிறுத்த ஆசைப்பட்டேன், ஆனால் அதையும் தாண்டி சில காமெடி வருது எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....
லேபிள்: புனைவு
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, May 31, 2010
1 பின்னூட்டங்கள்
சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.

ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, May 25, 2010
13
பின்னூட்டங்கள்
குறிசொல்: மணற்கேணி பதிவர் சந்திப்பு

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, May 21, 2010
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: மணற்கேணி வெற்றியாளர் கலந்துரையாடல்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Monday, May 17, 2010
9
பின்னூட்டங்கள்
குறிசொல்: முத்துக்குமார்

தமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.
இவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
இது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, May 13, 2010
0
பின்னூட்டங்கள்
குறிசொல்: இரத்தின புகழேந்தி, முனைவர்.மு.இளங்கோவன்

இது திருமணங்கள் நிறைய நடைபெறூம் நேரம், புதிதாக திருமணம் ஆன / ஆகப்போகும் தம்பதியர்கள் ஹனிமூன் கொண்டாட கிளம்புவார்கள் அதனால் உங்களுக்கான சில சின்ன சின்ன டிப்ஸ்கள், இது இரண்டாம் ஹனிமூன் கொண்டாடுபவர்களுக்கும் பொருந்தும்
தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் வேறு அனுபவங்களை தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது... அலுவலக வேலை உடனே போக வேண்டும் அது இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள்.
நாங்க சின்ன பசங்களாக இருந்த போது திருமணம் முடிந்த உடன் அந்த ஜோடியுடன் மொத்த குடும்பமுமே மெட்டேடார் வேன் எடுத்துக்கொண்டு 10 நாட்கள் கோவில் கோவிலாக சுத்துவார்கள் இப்பொது அந்த திருமண ஜோடிகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது...ம் அவங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்...
தேனிலவை உள்ளூரிலோ அல்லது உங்களுக்கு மிக மிக பழக்கமான ஊரிலோ வைக்காதீர்கள், தேனிலவு என்பது என்னமோ வெறும் அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டுமல்ல, அது துணையின் கைபிடித்து நடப்பது, உணவு உண்பது, வள வளவென்று பேசுவது என உங்களின் எல்லா இனிமையான பொழுதுகளும் அடக்கம், அந்த நேரத்தில் உள்ளூரிலோ அல்லது பழக்கமான இடத்திலோ தேனிலவு கொண்டாடினால் உங்களுக்கு திருமணம் முடிந்ததை அறியாத ஒருவர் உங்கள் தந்தையிடமே சென்று உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருக்கானே என்னா விசயமென கேளுங்க என்பார்.
தேனிலவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு விசயங்கள் Feel Free and Feel Safe... உங்களுடைய பிரைவசி(அந்தரங்கம்) மற்றும் உங்களுடைய பாதுகாப்பு.தேனிலவுக்கு போகும் வலைப்பதிவர்கள், வேலை வேலை என அலையும் வேலை பைத்தியங்கள் எல்லாம் முதலில் துறக்க வேண்டியது லேப்டாப் மற்றும் இணையம், அவசர தொடர்பு தவிர வேறெதற்க்கும் கைத்தொலைபேசியை திறந்து கூட பார்க்காதீர்கள்...
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Tuesday, May 11, 2010
12
பின்னூட்டங்கள்
குறிசொல்: Honeymoon package tours, Honeymoon trip tips
மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Saturday, May 08, 2010
17
பின்னூட்டங்கள்
குறிசொல்: A.Raja Nira Radia tape
இணைய எழுத்துகள் தரம் வேறெந்த எழுத்துகளும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கம் பல எழுத்துகள் இங்கே உள்ளன, இணையத்தில் சிறுகதை கவிதைகள் என்றால் தெரித்து ஓடும் நிலை உள்ளது, இயல்பாகவே சிறுகதைகள் மேல் ஓரளவிற்க்கு ஆர்வம் உள்ளவன் என்பதால் இணையத்தில் கண்ணில் படும் சிறுகதைகளை படிக்காமல் விடுவதில்லை, பல சிறுகதைகள் பழைய விகடன் குமுதம் டெம்ப்ளேட் கதைகளாக இருப்பதும், பயிற்ச்சி இல்லாததால் ஏற்படும் சலிப்பூட்டும் நடைகளும், ஜெண்டில்மேன் கதைக்கருக்கள், அரதப்பழசான கதைக்கருக்கள் படிக்க கொஞ்சம் சிரமத்தை தந்தாலும் நல்ல கதை சிக்கிவிடாதா என்று படிப்பது உண்டு.
முதல் 4 வரியிலேயே கதையை மேலே படிக்கலாமா வேண்டாம என்ற முடிவுக்கு வாசகன் வந்துவிடுவான், அந்த 4 வரியை தாண்டி வந்துவிட்டாலும் சிறுகதை ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் போன்றது கடைசி வரை விறுவிறுப்பாக செல்ல வேண்டும்...
வேறு எந்த எழுத்துக்களுக்கும் குறைவில்லாத இணையத்தில் வெளியான இரண்டு இணைய சிறுகதைகளை இங்கே பகிர விரும்புகிறேன்...
தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன் தாஸ் எழுதிய இந்த சிறுகதையானது "ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு" என்று ஆரம்பமாகும் கதை ஒரு பையனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியே அங்கீகாரத்துக்காக ஏங்கும் சேர்த்துக்கொண்டு வாழவைக்கப்படும் பெண்ணின் உணர்வு, முதல் தாரத்தின் அதிகாரம் கையை விட்டு போகாமல் இருக்க செய்யும் முயற்சிகள் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் காலிப்பெருங்காய டப்பா பேச்சுகள், என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா என்று கேட்கும் ஊர் ஆட்கள் என ஒரு திரைப்படத்தை நம் மனக்கண் முன் ஓட்டிவிடுகிறார்.... என் வாழ்க்கையில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும்...
வேட்டையாடு! விளையாடு!!!- விசை என்ற வலைப்பதிவில் எழுதப்பட்ட சிறுகதை முகமூடி சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற இந்த கதையானது வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!! என்ற ஆரம்பமாகும் இது விஸ்வநாத் ஆனந்த் மற்றும் காஸ்ப்ரோவை நினைவு படுத்தினாலும் நிறைய செஸ் பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் இருப்பது போல தோன்றினாலும் கதை சர சர வென வேகமாக செல்லுகிறது, மேலும் படக்காட்சிகளாக கதை விரிகின்றது, கதையின் கடைசி பத்தியில் ஒரு சஸ்பென்ஸ்ம் உடைகிறது... இந்த கதையை எழுதியவர் தற்போது பதிவுகள் எழுதவில்லை போலும், அவரோட வலைப்பதிவுகளில் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை...
இந்த இரண்டு சிறுகதைகளையுமே அவசர அடியாக படிப்பதைவிட நிதானமாக படித்து ருசிக்கலாம்...
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, April 30, 2010
2
பின்னூட்டங்கள்
குறிசொல்: சிறுகதை பரிந்துரைகள்
தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்.... இதோ சாட்சியாக கோத்தபாய ராஜபக்சேவின் பேட்டி... திருமா 4 நாள் உண்ணாவிரதம் இருந்த போது இலங்கை அரசிடம் ஏற்படாத பதட்டம் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற உடன் ஏற்பட்டிருக்கின்றது என்றால் பொறுப்பு திருமாவுக்கு அதிகமா கருணாநிதிக்கு அதிகமா? அப்போ திட்ட வேண்டியது யாரை... உடன்பிறப்புகளே சிந்திப்பீர்... இதோ கோத்தபய ராஜபக்சேயின் பேட்டியில் இருந்து சில வரிகள் ---------------------------- முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். ------------------------------ இதற்க்கும் கூட இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து கருணாநிதியை ஏமாற்றிவிட்டது என்றும் கூட சொன்னாலும் சொல்வீர்கள் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது: கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார். நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன். முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது: இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம். மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம். நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன. ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது. கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, April 30, 2010
7
பின்னூட்டங்கள்
தெளி குறும்பட வெளியீடு

விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்

ஆக்கம்
குழலி / Kuzhali
at
Thursday, April 29, 2010
1 பின்னூட்டங்கள்
குறிசொல்: குறும்பட வெளியீடு
ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்
இப்படி ஒரு விளம்பரம் பார்க்கின்றீர்கள்.. ஆகா இவ்வளவு குறைந்த விலையில் சிங்கப்பூர் செல்ல இயலுமா... என்று ஆர்வத்துடன் சிங்கப்பூர் செல்லலாம் என்று கணக்கு போட்டுவிட்டு உள்ளே போவீர்கள்... இருந்தாலும் ஒரு சந்தேகம் இருக்கும் ஒரு வேளை விமான கட்டணம் இல்லாமலோ என்று தோன்றும், கீழே இந்த விலையில் என்னென்னவெல்லாம் இனைக்கப்பட்டிருக்கும் என்ற இடத்தில் போக வர விமான பயணச்சீட்டும் இருக்கும் என போட்டிருக்கும், அடி சூப்பர் ஏர் டிக்கெட்டோடு சேர்த்தே இவ்வளவுதானா என்றிருக்கும்... அதற்க்கும் கீழே விலைக்கு பக்கத்திலேயே போட்டிருக்கும் *குறி பற்றிய குறிப்பு கொடுத்திருப்பார்கள்... அதில் என்னென்னவெல்லாம் இந்த கட்டணத்திலிருந்து விலக்கப்பட்டிருக்குமென்று...
Airport Tax excluded (விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் நீங்கலாக) அதை படித்தவுடன் அட என்ன டாக்ஸ் எவ்ளோ வரப்போகுது என்றால் அங்கே தான் சிக்கலே இந்த டாக்ஸ் விமானகட்டணத்தை போல இரண்டு மூன்று பங்கு.. சென்னை சிங்கப்பூர் விமாணகட்டனும் வெறும் 2500-4000ரூபாய் தான் ஆனால் இந்த ஏர்போர்ட் டாக்ஸ் ஏறக்குறைய ரூபாய்10,500 இரண்டாவதாக விசா கட்டணம் எக்ஸ்க்ளூடட் என்பார்கள் விசா கட்டணம் ரூபாய்1200-1500 இதெல்லாம் சேர்த்தால் 21,999 + 10,500 + 1500 = 33,999 ரூபாய்... இவைகளை Hidden Charges என்பார்கள்...
இது மட்டுமின்றி சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கான கட்டணங்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவு பணம் எடுக்கும், ஆக முக்கியமான இடங்கள் மட்டும் பார்க்கவேண்டுமென்றாலும் அது ஒரு குறிப்பிட்ட தொகு எடுக்கும், மேலும் இந்த இடங்களுக்கு செல்ல போக்குவரத்து செலவு பார்க்க வேண்டும்
எனவே எந்த விளம்பரமாக இருந்தாலும் கவனிக்க வேண்டியவை
1. ஏர்போர்ட் டாக்ஸ் சேர்த்துள்ளதா
2. விசா கட்டணமும் சேர்த்துள்ளதா
3. அங்கே சுற்றிபார்க்கும் இடங்கள் டூர் அட்ராக்சன்ஸ் டிக்கெட்டும் சேர்த்துள்ளதா. அப்படியென்றால் எவை எவை?
இல்லையென்றால் அது பற்றி முகவர்களிடம் கேளுங்கள் அதன் பின் முடிவுக்கு வாருங்கள்
நமது வலைப்பதிவர் இளையகவி மற்றும் நண்பர்கள் நடத்தும் www.S-TeamHolidays.com நிறுவனம் கேரளா, சிங்கப்பூர் / மலேசியா / இந்தோனேசியா மற்றும் பல பேக்கேஜ் டூர்கள் நடத்துகிறார்கள்... டூர் தொடர்பான தகவல்கள், செக் லிஸ்ட் மற்றும் எந்த சந்தேகமென்றாலும் தயங்காமல் இவர்களிடம் கேளுங்கள்... இலவசமாக டிப்ஸ்கள் தருவார்கள்...
B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com
ஆக்கம்
குழலி / Kuzhali
at
Friday, April 23, 2010
16
பின்னூட்டங்கள்
குறிசொல்: Singapore package tours